அதிகாலை எழுந்து .... அம்மணமான உடையுடன் .... அம்மாவின் கையை பிடித்தபடி ..... வீட்டின் முன்பக்கம் பின்வளவு ,,,, எல்லாம் சுற்றி திரிந்து .... அக்கா அண்ணா பள்ளி செல்லும் .... போது நானும் போகணும்.... என்று கத்தியழுத அந்த காலம் .... வாழ்வின் " தங்க காலம் "......!!! பச்சைஅரிசிசோறு வேகும்போது .... அவிந்தது பாதி அவியாதது பாதி .... கஞ்சிக்கு கத்தும் போது .... பொறடாவாரேன் என்று சின்ன .... அதட்டலுடன் கஞ்சியை வடித்துதர .... பாதி வாய்க்குள்ளும் மீதி ... வயிற்றில் ஊற்றியும் குடித்த .... அந்த காலம் .... வாழ்வின் " பொற்காலம் "......!!! பாடசாலையில் சேர்ந்தபோது ..... புத்தகத்தையும் என்னையும் ... தூக்கிகொண்டு சென்ற அம்மா .... சேலையின் தலைப்பை என் தலை .... மேல் போட்டு தன் தலை வெய்யிலில் ... வேக வேக வீட்டுக்கு வந்து .... உணவும் ஊட்டிய தாயின் பாசம் .... அந்த காலம் .... வாழ்வின் " வைரம் தந்தகாலம் "......!!! போட்டி பரீட்சையில் என்னோடு ... கண்விழித்து கண்கசக்கி கண்எரிய ... நண்பர்களின் உறுதுணையுடன் .... போட்டி பரீட்சையெல்லாம் சித்தியடைந்து .... பட்ட படிப்பையும் முடித்து பட்டதாரி...