இடுகைகள்

பிப்ரவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தினம் வாடி துடிக்கிறேன்......!

என்னை ..... விரும்பு என்று .... கெஞ்ச மாட்டேன் .... என்னை விரும்பாத ... வரை விட மாட்டேன் .... <3 உலகில் ..... பெரிய சித்திர வதை .... பேசிய ஒரு உள்ளம் .... பேசாமல் இருப்பது தான் ...... உலகில் பெரிய குற்றம் ..... காதல் செய்யாமல் .... காதலிப்பது போல்.... நடிப்பது தான் ....! <3 எத்தனை உள்ளங்கள் ... கெஞ்சி கேட்டாலும் .... தனிப்பட்ட கவிதை ... யாருக்கும் இல்லை .... உயிரே எத்தனை கவிதை .... எழுதினாலும் உனக்கு.... தவிர யாருக்கும் இல்லை.....! <3 என்னை ..... காதலால் சித்திர வதை.... செய்கிறாள் .... கண்களால் கைது செய்தவள் .... நினைவு என்னும் .... சிறைச்சாலையில் .... தினம் வாடி துடிக்கிறேன்......! <3 உனக்காக.... எதையும் இழப்பேன் .... என்னவள்.....  என்னை இழந்து நிற்கிறாள் .... எனக்காக எதையும் .... வைத்திருக்காத நான் .... எல்லாவற்றையும் ... இழந்து நிற்கிறேன் .......!!! @@@@@ கவிப்புயல் இனியவன் சின்னச் சின்ன அணுக்கவிதை - 02

சின்னச் சின்ன அணுக்கவிதை

நெருப்பில் கருகியவர்கள் பலர் உன் சிரிப்பில் கருகியவன் நான் தான் ...!!! <3 மன காயப்படும் கூட‌ ஆறுதல் சொல்ல‌ நீ வருவாய் என்று ஏங்குது சொற‌ணை கெட்ட‌ என் இதயம்....!  <3 இதயம் துடிக்க‌ காற்று தேவையில்லை காதல் போதும் ...! <3  நீ காதல் கொண்டு பார்க்கிறாய் -என்ன செய்வது உன்னில் காதல் வரமாட்டேன் என்கிறதே .....! <3 நாம் காதலர் என்று சொன்னால் யாரும் நம்புவதில்லை நம்பும் படியாக நீ மாறவில்லை ....!!! <3 ஒன்றில் நீ பேசு அல்லது உன் கண் பேசட்டும் இரண்டும் பேசினால் நான் எப்படி பேசுவது ...? <3 அவளுக்கு இதயம் இருக்கும் இடத்தில் முள் கம்பிகள் இருக்கிறது போல் இப்படி வலி தருகிறாள் ..? <3 உன் சின்ன சிரிப்பு போதும் என் நெஞ்சில் இருக்கும் வலியை உடைத்தெறிய ....!!! <3 நான் எழுதுவது உனக்கு ஒருவரி கவிதை - அது என் இதய வலி கவிதை <3 நான் தற்கொலை செய்ய மாட்டேன் - நீதான் என்னை தினமும் கொல்கிறாயே...!!! @@@@@ கவிப்புயல் இனியவன் சின்னச் சின்ன அணுக்கவிதை  

காதல் புத்தன்.....!

முகத்தில் ரோஜாவையும் இதயத்தில் முள்ளையும் வைத்து காதலிக்கிறாய் நான் ஏற்கிறேன்..... காதல் பித்தனில்லை.... காதல் புத்தன்.....! @ நெஞ்சை கிள்ளும் நினைவோடு கவிப்புயல் இனியவன்

நெஞ்சை கிள்ளும் நினைவோடு

நான் தூரத்தில்....... இருப்பதுதான் உனக்கு.... சந்தோசம் என்றால்..... தூரவே இருந்து விடுகிறேன்.... உன் அருகிலிருந்த ...... நினைவுகலோடு....! @ நெஞ்சை கிள்ளும் நினைவோடு கவிப்புயல் இனியவன்

முதுமையின் வலிகள்

முதுமை..... இளமையின் நினைவை..... எரிந்த சாம்பலாய்..... சுமர்ந்து கொண்டிருக்கும்.... சுமைதாங்கி..........! மரணத்தின் வாசலை....... ஏக்கத்தோடும் பயத்தோடும்....... வரவேற்றுக்கொண்டிருக்கும்...... மர்ம அறை............! அனுபவங்களை....... முற்களாகவும்...... பூக்களாகவும்...... ரசித்துக்கொண்டிருக்கும்..... ரோஜாச்செடி.....! வார்த்தைகளின்..... வீரியமும்....... இன்பங்களின்....... வீரியமும்...... அடங்கியிருக்கும்....... பெட்டிப்பாம்பு..........! எழும்பு கூட்டை..... தோலால் மறைத்து வைத்து...... கிறுக்கள் சித்திரத்துக்கு...... உயிர் கொடுக்கும்..... உன்னதமான உயிர்.........! நூறு மீற்றர் ஓட்டத்தை...... நொடிக்குள் ஓடியவனும்..... மெதுவாக நடக்க .... கற்றுக்கொடுக்கும் ஆசான்......! கொரட்டைத்தான் ....... மூச்சு பயிற்சி........ இருமல் தான் செய்தி..... தொடர்பாளன்........! அனுபவத்தை  மூலதனமாய்...... கொண்டு ஞானியாகும் நிலை..... அனுபவத்தை தவறாக கொண்டு...... பித்தனாகும் நிலை....... முதுமை.....................! @ கவிப்புயல் இனியவன்