இடுகைகள்

ஜனவரி 11, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலில் எப்படி வேறுபடும் ...?

சுவாசிக்கும் மூச்சாய் நீ பேசும் பேச்சாய் நீ சிரிக்கும் சிரிப்பாய் நீ காணும் கனவாய் நீ விடும் கண்ணீர் நீ இத்தனையும் நீயாக அத்தனையும் நானாக காதலில் எப்படி வேறுபடும் ...? & கவிப்புயல் இனியவன் 

என் இதயம் உன்னிடம்

விழியால் எய்த அம்பால்......... இதயத்தில் துவாரம்................. அதுவொன்றும் வியப்பில்லை .... என் இதயம் உன்னிடம்............. போகவேண்டும் என்று.............. துடிக்கிறது காயத்தை................ மறந்து ....!!! என் கவிதை அனைத்தும் உன் சின்ன சின்ன செல்ல சண்டையால் வருகிறது நிறுத்தி விடாதே செல்ல குறும்பு சண்டையை ....!!! & கவிப்புயல் இனியவன் 

உன் நினைவலையில்..........

வலையில் அகப்பட்டு........... துடிக்கும் மீனும்..................... உன் நினைவலையில்.......... துடிக்கும் நானும்................... ஒன்றுதான்............................. அது வழியின்றி இறந்தது.... நான் வலியால் இறக்கிறேன் ....!!! & கவிப்புயல் இனியவன்

உன் சிரிப்பு தேர் திருவிழா....

காதல் இதய கோவில்..... அதில், கனவு  தீப ஒளி ..... நினைவு அர்ச்சனை..... முத்தம் பிரசாதம்.... வலிகள்நேர்த்திக்கடன் .... உன் சிரிப்பு தேர் திருவிழா.... பிரிவு  மடை சார்த்தல் ...!!! & கவிப்புயல் இனியவன்