வியாழன், 27 நவம்பர், 2014

செத்து பிழைக்கிறேன் ....!!!

நான் சாகா வரம் ...
பெற்றவன் -தினம்
தினம் உன்னிடம் செத்து
பிழைக்கிறேன் ....!!!

உன்னை ஒருநொடி ...
பார்க்கும்போது இறக்கிறேன் ..
மறு நொடி நீ பார்க்கும் போது ...
உயிர்க்கிறேன் ....!!!

என் மூச்சே  காதல் தான் ....!!!
கே இனியவன்

என் மூச்சே காதல் தான் ....!!!

நொடிக்கு நொடி ....
மூச்சு விடுகிறேனோ ...
இல்லையோ ....
நொடிக்கு நொடி ....
நினைவில் வதைக்கிறாய் ...
உயிரே .....!!!

மூச்சு அடக்கி 
வாழ்ந்திடுவேன் .....
உன் பேச்சு இல்லையேல் ..
அடங்கிடுவேன் ....!!!


என் மூச்சே  காதல் தான் ....!!!
கே இனியவன்

புதன், 26 நவம்பர், 2014

காதல் புதிர் ...!!!

என்னை கொஞ்சம் ...
கொஞ்சமாக வருத்தவே ...
கவிதை எழுதுகிறேன் ....!!!

நீ 
புரிய முடியாத புதிர் 
நான் புரிந்தும் புரியாத 
காதல் புதிர் ...!!!

நீ என்னோடு ...
நடந்து வந்த தூரம் ...
பாதையில் குழி வரவில்லை ..
இதயம் பள்ளமாகவே ...
போய் விட்டது ....!!!


கே இனியவன் கஸல் 
கவிதை ;755

பிரிவும் காதல் தான் ....!!!

கல்லை உரசி ...
நெருப்பு மூட்டியது அறிவு 
நீ என் கண்ணை...
உரசி காதல் தந்தாய் ...
அதுதான் சாம்பலானதோ...?

எனக்கும் உனக்கும் ....
உறவும் காதல் தான்.... 
பிரிவும் காதல் தான் ....!!!

சீ ....உனக்கு
காதலிக்க கூட  ..
தெரியாது என்று ...
இழிவாக பேச ...
வைத்துவிட்டாய் .....!!!

கே இனியவன் கஸல் 
கவிதை ;754

உன்னை நினைத்து

உன்னை நினைத்து 
அன்பாகத்தான் கவிதை ...
எழுதுகிறேன் ...
எப்படியோ வலியாக...
மாறி விடுகிறது ...!!!

காதலுக்கு 
மரணம் இல்லை ...
எப்படி நம் காதல் 
புதைகுழிக்குள் 
நடக்கிறது  ....!!!

என்னை விட உலகில் 
ஏழை யாரும் இல்லை 
இன்ப வரிகளே 
வருகுதில்லை ......!!!

கே இனியவன் கஸல் 
கவிதை ;753

கற்றுக்கொண்டேன் ...!!!

உன்னை 
காதலித்ததில் ....
நன்றாக அழுவதற்கு ...
கற்றுக்கொண்டேன் ...!!!

நீ வார்த்தையால் ..
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!

உனக்காக 
காத்திருந்த இரவுகளால் 
என் கருவிழி ...
வெண்மையாகிவிட்டது ...!!!

கே இனியவன் கஸல் 
கவிதை ;752

கண்ணீர் வரவைகிறது ...!!!

காற்றை
போல் உனக்கு ...
வாசமுமில்லை 
நிறமுமில்லை .....
காதலில் பயன் 
படுத்தாதே .....!!!

இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!!!

நான் 
உன் கண் இமையை....
ரசிக்கிறேன் நீயோ ...
அழித்து விடுகிறாய் ....!!!


கே இனியவன் கஸல் 
கவிதை ;751

புதன், 19 நவம்பர், 2014

பலன் இருக்கும் ....!!!

நீ
தூக்கி எறிந்த இதயம் ...
தவமிருகிறது -மீண்டும்
நீ வருவாய் என்று ....!!!

எந்த தவத்துக்கும்
பலன் இருக்கும் ...
உன் மௌனத்துக்கும்
பலன் இருக்கும் ....!!!

நீதான் நினைகிறாய் ....

நீதான் நினைகிறாய் ....
உன்னை விட்டு நான் ...
தூரத்தில் இருக்கிறேன் ...
விலகி இருக்கிறேன் ...
பாசமில்லாமல் இருக்கிறேன் ...
என்கிறாய் ....!!!

உனக்கு புரியுமா ...?
நான் இங்கு பார்க்கும்
பார்வைகள் அனைத்திலும் ..
நீயே இருகிறாய் ...
தெரிகிறாய் ....
பேசுகிறாய் ......!!!

ஒரு இதயம் தான் ....!!!

நீ
நினைக்கும் போதும் ...
விரும்பும் போதும் ...
என்னை பார்த்து சிரிப்பதும்
பேசுவதும் ....!!!

நீ
விரும்பாதபோது ...
விலகி நிற்பதும் ...
உன்னால் எப்படி ...
முடிகிறது ...?
என்னிடம் இருப்பது
ஒரு இதயம் தான் ....!!!

எங்கே புரியப்போகிறது ...?

உனக்கு
எங்கே புரியப்போகிறது ...?
வலியின் வலி ...?
பிறப்பின் போது தாய் ...
உன் வலியை சுமர்ந்தார் ...!!!

காதல்
இறப்பின் போது ....
உன் வலியை நான் ..
சுமக்கிறேன் ....!!!

அகராதி தமிழில் கவிதை 02

ஆருயிர் நண்பா .....!!!
ஆட்கொண்டாயடா தூய அன்பில் ...
ஆதாயம் எதுவும் இல்லாமல் ....
ஆதரவு ஒன்றே போதும் என்று ...
ஆபத்தென்றால் அருகில் இருப்பவனே ....!!!

ஆகம் நிறைந்து வாழ்பவனே ....
ஆகாரம்  இன்றி வாழ்வேன் -உன்
ஆறுதல் என்றும் எனக்கு இருந்தால் ...
ஆகூழ் மூலம் கிடைத்தவன் -நீ
ஆகாயம் அழியும் வரை நீ இருப்பாய் .....!!!

ஆக்கிரமித்தல் அன்பிலும் உண்டு ...
ஆச்சியம் போல் உருகுதடா மனசு ....
ஆணு தரும் நினைவுகள் தருவாய் ....
ஆதிவாரம் நாம் பெறும் ஆணு ....
ஆச்சரியமான அன்பு வெள்ளமடா ....!!!

ஆத்திகனுக்கு சமனானவனே......
ஆதவன் போல் பிரகாசமானவனே .....
ஆதிமுதல் அந்தம் வரை இருப்பாயடா ...
ஆரி கொண்டேனடா உன் அன்பில் ...
ஆசந்திக்குள் இருவருமே போவோம் நண்பா ....!!!

ஆகம் - நெஞ்சு 
ஆகூழ் -நல்வினைபயன் 
ஆணு -இன்பம் 
ஆசந்தி -சவபெட்டி 

கவிதை ; அகராதி தமிழ் நட்பு கவிதை
கவிஞர் ; கே இனியவன்

செவ்வாய், 18 நவம்பர், 2014

காதல் குறட்கூ கவிதைகள்

காதல் குறட்கூ கவிதைகள் 


காதல்  அழகானமலர் 
அழகானவை ஆபத்து 

#######

கண்ணால்  காதல் வருகிறது 
இதயம் நொறுங்குகிறது 

#######

கற்பனையில் மனம் இருக்கும் 
இதயம் உன்னிடம் இருக்கும் 

########

நொடிமூச்சு  நிலையில்லை 
காதல் நிலையானது 

#########

உறவுகள் பறிபோனது 
காதல் வந்தது

அகராதி தமிழில் கவிதை

அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...
அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....
அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....
அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....
அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!

அகம் முழுதும் நிறைந்தவளே .....
அகமதியால் காதலை இழந்தவளே....
அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......
அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....
அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!

அச்சப்படாதேயடா என்னவனே .....
அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....
அகந்தையும்  அகமதியுமில்லை ....
அடர்த்தி கொண்டதடா  நம் காதல் ......
அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!

அடைமழை போல் இன்பம் தந்தவளே ....
அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....
அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....
அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....
அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!


அகமதி - செருக்கு    
அகோராத்திரம் - பகலும் இரவும் 
அந்தகாரம் - இருள் 

கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை 
கவிஞர் ; கே இனியவன்

திங்கள், 17 நவம்பர், 2014

விரும்பவில்லை ....!!!

என்
நண்பர்களுக்கு ...
உன்னை எப்படி கூறுவது ....
காதலி என்று சொல்ல ..
உன் பதில் வரவில்லை ...!!!

நட்பு என்று சொல்ல ...
என் இதயம்...
விரும்பவில்லை ....!!!

விரும்பவில்லை ...!!!

எனக்கு
நன்றாக புரிகிறது ...
நீ என்னை
விரும்பவில்லை ...!!!

உன்னை  என் இதயத்தில் ...
இருந்து விட்டால் தானே ....
காதலிப்பாய்  .....!!!

வேண்டாம் உன் பதில் ...!!!

நித்தம் நித்தம் ....
மரண குழிக்குள் சென்று ..
வருகிறேன் - இன்று நீ
பதில் சொல்வாய் என்று ....!!!

உன்
பதில் உண்மையாக ....
என்னை குழிக்குள் தள்ளாது....
என்று நம்புகிறேன்.....
வேண்டாம் உன் பதில் ...!!! 

நீயே உணர்வாய் ...!!!

எத்தனை நாள் ...
நானே உன்னை....
காதலிப்பது ....
ஒரு முறை எனக்கு
சந்தர்பம் தந்துபார் .....!!!

உன்னை
விட நான் உன்னை
அதிகமாக நேசிப்பதை ...
நீயே உணர்வாய் ...!!!

ஞாயிறு, 16 நவம்பர், 2014

சாதனையின் அஸ்திவாரம் ஏழ்மையே ...!!!

ஏழ்மை ....!!!
வாழ்க்கையில் அனுபவசாலி ...
ஏழ்மையை சந்திக்காமல் ...
சாதனைக்கு இடமில்லை ....!!!

சாதனையின் பின் ...
ஏழ்மையை சந்தித்தோர் ...
ஏழ்மையின் இறந்த காலத்தை ...
இறக்கவைத்தவர்களே ....!!!

ஏழ்மை நிலையானது இல்லை ...!!!
சாதனையின் அஸ்திவாரம் ஏழ்மையே ...!!!குறட்கூ கவிதைகள்

குறட்கூ கவிதைகள் 
------------------------------

என்பது இரண்டடிகளைக் கொண்ட பா வகையாகும். 
முதலடியில் இரண்டு சீர்களும் இரண்டாம் அடியில் இரண்டு சீர்களும் 
சேர்ந்து கூட்டாக அமையும் ஈரடிக்கவிதையாக அமையும் ....!!!


காதல்   நினைவுகளில் வாழ்கிறது
நிம்மதியை  தொலைக்கிறது

^^^^^

சுபமுகூர்த்தத்தில்   திருமணம்
காதல்   கரிநாள் ஆனது

^^^^^

தொலைபேசி   மணி அழைக்கிறது
கட்டணநிலுவை   பூச்சியம்

^^^^^

நித்திரையில்  சிரித்தேன்
திட்டிஎழுப்பினார்  அம்மா

^^^^^

குறட்கூ கவிதைகள்
கே இனியவன்

குறட்கூ கவிதைகள்

காதல் நினைவுகளில் வாழ்கிறது 
நின்மதியை தொலைக்கிறது

கண்ணீரால் நனைகிறாய் ...!!!

நீ
பிரிந்து செல்லவில்லை ....
என் இதயத்தை பிரித்து ...
கொண்டு சென்றுவிட்டாய் ...!!!

தவளை
தண்ணீர்ரால் ...
கெடும் - காதல்
கண்ணீரால் கெடும் ......!!!

இறைவா ...
நீ விட்ட தவறு மனிதனை
படைத்தது அல்ல ...
காதலை படைத்தது ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 746
  

என்னை மன்னித்துவிடு .... !!!

நான்
உன்னை காதலிக்காமல்
காயப்படுத்தினால் ...
என்னை மன்னித்துவிடு .... !!!
நீ
என்னை காதலிக்கிறாய் ...
என்று நினைத்து நான் ...
காயப்பட்டுக்கொண்டு ...
இருக்கிறேன் ....!!!

சனி, 15 நவம்பர், 2014

உறங்க எப்படி முடியும் ...?

தொலைபேசியில் ....
இத்தனை நினைவுகளை ...
தந்துவிட்டு - என்னை உறங்கு
என்று சொல்கிறாயே ....!!!

முடிந்தால் நீ உறங்கி
என் கனவில் வந்து என்னை ...
உறங்க வை உயிரே ...!!!
கண் மட்டும் மூடுவது ...
உறக்கம் என்றால்
உறங்கிவிடலாம் -மனம்
உறங்க எப்படி முடியும் ...?

என்னை மன்னித்துவிடு .... !!!

நான்
உன்னை காதலிக்காமல்
காயப்படுத்தினால் ...
என்னை மன்னித்துவிடு ....  !!!

நீ
என்னை காதலிக்கிறாய் ...
என்று நினைத்து நான் ...
காயப்பட்டுக்கொண்டு ...
இருக்கிறேன் ....!!! 

மூச்சு திணறுகிறேன் ...!!!

உன் கண்
அசையும் திசை எல்லாம்
நான் அசைகிறேன்....!

உன் உதடு பேசும் ...
வார்த்தைக்கு எல்லாம் ...
அகராதி எழுதுகிறேன் ....!

நீ மூச்சு விடும் ...
நேரமெல்லாம் -நான்
மூச்சு திணறுகிறேன் ...!!!

ஏழ்மை .....!!!

ஏர் பிடிப்பவன் வீட்டில் 
வயிற்றுக்கு ஏழ்மை  ...!!!
ஏமாப்புடன் வாழும் பணக்காரன் 
வீட்டில் அன்புக்கு ஏழ்மை .....!!!

ஏழ்மையில் இருப்பவர்களை ....
ஏளனமாக பார்க்காதே ....!!!
ஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....!!!

ஏழ்மையுடன் பிறந்து இறந்தவன்  ...
ஏழ்மையை தன்னுடனே 
வைத்திருந்த ஏளனமானவன் ...!!!

வியாழன், 13 நவம்பர், 2014

ஒரு இதயத்தின் காதல் ....!!!

எத்தனை
கஷ்ரப்பட்டு உன்னை ...
என் இதயத்தில் வைத்து ...
காதலிக்கிறேன் ....
இதைபோய் ஒருதலை ..
காதல் என்கிறார்கள் ...
காதல் தெரியாத மூடர்கள் ...!!!

பேசாமல் போய் விடாதே ...!!!

வந்த உடனேயே ...
அம்மா தேடுவார் ....
அப்பா தேடுவார் ....
என்கிறாயே ......???
என் இதயம் எத்தனை ..
நாட்களாக  தேடுகிறது ...
பேசாமல் போய் விடாதே ...!!!

தாங்கிக்கொள் பிரிவை ....!!!

ஒருமுறை
பார்த்தவுடன் காதல் ...!!!
இதயமே உனக்கு வெட்கம் ..
இல்லையோ ....?
இப்போ அவள் இல்லை ...
உனக்கு வேண்டும் -நீயே
தாங்கிக்கொள் பிரிவை ....!!!

நீ சுமையல்ல மருந்து ...!!!

ஒரே ஒருமுறை ...
என் கண்ணீரை பார் ...
அத்தனை துன்பங்களையும் ...
ஒன்றாய் திரட்டிய ...
வலியின் திரவம் ....
காயப்பட்ட இதயத்துக்கு ...
நீ சுமையல்ல மருந்து ...!!!

காயப்பட்ட என் இதயம் ....!!!

இத்தனை ஆண்டுகள் ...
எத்தனை துயர் வந்தும் ...
எனக்காக நான் அழுததில்லை ...
உனக்காக அழுத்த நாட்களே ...
இந்த நிமிடம் வரை .....
அத்துணை வலிகளுடன் ..
காயப்பட்ட என் இதயம் ....!!!

காயப்பட்ட இதயத்தின் கவிதை

நீ .....!!!!!!!!!!
என்னை மறுத்தபோது ...
நான் இறந்துவிட்டேன் ...
என் உடல் மயானத்தில் ...
புதைக்க படவில்லை ...
உன் இதயத்துக்குள் ...
புதைக்கப்பட்டுள்ளது ....!!!

புதன், 12 நவம்பர், 2014

முதல் காதல் - முதல் காதலிஎத்தனை 
காலம் கடந்தாலும் ..... 
ஆயிரம் ஆயிரம் உறவுகள் ... 
அழகழகாக தோன்றினாலும் ... 
சிதையாத சிற்பம் -நீ ..! 
என் உயிரே உன் நினைவுகள் ... 
காலத்தால் அழியாத ... 
காவியமடி என் வாழ்வில்-நீ ....!!! 

உன் முதல் பார்வையே .... 
என்னை முட்டாள் ஆக்கியதை ... 
இன்றுவரை உணர்கிறேன் ... 
உன்னை நினைத்து சிரிக்கிறேன் ... 
உன் முதல் பேச்சு -என் மூளையில் 
நீங்காத அழிக்க முடியாத ... 
கல்வெட்டு வாசகம் ....!!! 

உன் முதல் கடிதம் .... 
உலகில் விலைமதிக்க முடியாத ... 
அருங்காட்சி சாலையின் ... 
பொக்கிஷம் - வைத்திருக்கிறேன் ... 
பத்திரமாக பொட்டகத்தில் இல்லை ... 
நீ என்றும் குடிகொண்டிருக்கும் ... 
என் இதய அறையில் .....!!! 

முதல் காதல் தோற்பதில்லை .... 
வாழ்க்கையில் இணைவதில் தான் ... 
தோற்றுவிடுகிறோம் - காதல் 
அழிவதில்லை என்பது இதுதான் ....! 
புரியாத பருவத்தில் தெரியாமல் ... 
புகுந்திடும் இந்த உயிர் கொல்லி ... 
முதல் காதல் முதல் காதலி ....!!! 

கட்டிய மனைவியுடன் .... 
பெற்ற பிள்ளைகளுடன் ... 
பகிரமுடியாத பாழாய் போன ... 
இந்த முதல் காதல் -இதயத்தில் .. 
தோன்றும் ஒரு புற்று நோய் ...! 
எத்தனை இன்பங்கள் வந்தாலும் .. 
அடிக்கடி முதல் காதல் நினைவுகள் ...!!! 

காதலிப்பது தவறில்லை .... 
முதல் காதலை இழப்பது கொடுமை ... 
வாழ்க்கை முடியும் வரை ... 
எங்கேயோ ஒரு மூலையில் ... 
ஏங்கிக்கொண்டு இணைப்புஇல்லாத ... 
தொலைபேசிபோல் தமக்குள்ள பேசி .. 
அழும் முதல் காதல் கொடுமை ...!!!

நான் உன்னை நேசித்தேன்

நான் உன்னை நேசித்தேன் ...
சாகும் வரை மறக்க மாட்டேன் ....
நீ என்னை நேசித்தது உண்மை ...
அதனால் தான் யோசித்துக்கொண்டு ...
வாழ்கிறேன் ....!!!

இரக்கத்தால்
காதல் வரகூட்டாது ....
இரக்கமே இல்லாமல் ...
பிரிந்து விடுவார்கள் ...!!!

இன்னுமொரு ஆனந்தம் ...!!!

இதுவரை
எழுதிய கவிதை பல்லாயிரம் ...
வலிகள் ஆயிரம் ஆயிரம்....
அத்தனையும் நீ தந்த வலி ...!
அதுவும் எனக்கு கிடைத்த ...
இன்னுமொரு ஆனந்தம் ...!!!

இன்னும் இருக்கிறது ....
நீ தந்த வலியின் வரிகள் ...
காத்திரு எழுதிக்கொண்டே ...
இருப்பேன் ....!!!


இறந்த பின் புகழாரம்

ஒருவன் உயிருடன் ...
இருக்கும் போது ...
மகிமை புரிவதில்லை...
இறந்த பின் புகழாரம் ...
செய்வர் ....!!!

என் காதல் ...
நீ ஏற்று கொள்ளவில்லை ...
கவலையும் இல்லை ...
நிச்சயம் என்னைப்போல் ...
உன்னை காதலிக்க ...
உலகில்  யாரும் இல்லை ...!!!

உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்

நீ என்னை ...
விலக்குவது வேறு...
விலகுவது வேறு ...
வலிகளின் தாக்கமும் ...
வேறு ....!!!

நீ விலகுகிறாயா ...?
விலக்குகிறாயா ...?
அது உன் விருப்பம் ...
காதல் தான் இல்லை ...
நீ தந்த வலியோடு ...
வாழ்வேன் - வாழ்நாள் ...
முழுதும் ....!!!

சின்ன தன்னம்பிக்கை கவிதை

தோல்வி என்னும் ..
நெருப்பில் எரிந்து ..
சாம்பலாகு....!!!

அப்போதுதான் ...
தோல்வி என்ற சொல் ..
எண்ணம் உன்னில் ...
இருக்காது ....!
தோல்வியின்
சாம்மல் தான் வெற்றி ...!!!
+
சின்ன தன்னம்பிக்கை கவிதை 

சின்ன தன்னம்பிக்கை கவிதை ...!!!

நிறைவேறாத ஆசை ...
கோபமாகிறது....
நிறைவேறிய ஆசை ...
சாதனை ஆகிறது ...!!!

உன் நிலை பார்த்து ...
நிச்சயம் ஆசைப்பட்டு ...
உன் நினைக்கு அப்பால் ..
பட்டத்துக்கு திட்டம் ..
போட்டு ஆசைப்படு ....!!!

வலியை தா ....!!!

இன்பம் துன்பம் ...
நடுவில் நம் ..
காதல் இரு தலை ...
எறும்பு போல் ...!!!

என் இதயம் சுமை ..
தாங்கி எவ்வளவு ...
வேண்டுமென்றாலும் ...
வலியை தா ....!!!

காதல் ஆடுபுலி ..
ஆட்டம் ...
நீயா ..? நானா ..?

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 745

பாவம் நம் காதல்

பாவம் நம் காதல் ...
முகவரி தெரியாமல் ...
தெரு தெருவாய் ...
அலைகிறது ....!!!

இரவு நட்சத்திரம் ....
அழகுதான் -பகலில் ..?
நான் பகல் நட்சத்திரமாகி ...
விட்டேனோ ...?

உன்
காதலில் இருந்து
விடுபட விஷத்தை...
எடுத்தேன் ....
விஷ கோப்பையிலும் ....
நீ .....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 744

இதயம் வேண்டும் ...

உன்னை நினைத்து ...
மூச்சு விட்டேன் ...
நான் இறந்த உணர்வை ...
பெற்றேன் ........!!!

காதல் கடலை விட ...
ஆழமானதாம் - நம்
காதலில் ஆழம் தெரிந்து ..
விட்டதே ....!!!

உன்னிடம் இருந்து ...
கற்றுக்கொண்டேன் ...
இதயம் வேண்டும் ...
காதலுக்கு  எங்கே...?
உன் இதயம் ....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 743

வியாழன், 6 நவம்பர், 2014

என் உயிரும் தான் ...!!!

உன்னை காதலித்து ...
உறவை பெற்று ...
கொள்வதற்காக   ....
எத்தனை உறவை ...
தொலைத்து விட்டேன் ....!!!

இப்போ
உன் உறவும் இல்லை....
எந்த உறவும் இல்லை ...
வலிக்குது  இதயம் மட்டும் ...
அல்ல என் உயிரும் தான் ...!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

புதன், 5 நவம்பர், 2014

தவமிருக்கிறது இதயம் ...!!!

நீ
எப்போது சிரிப்பாய் ..?
எப்போது பேசுவாய் ...?
தவமிருக்கிறது இதயம் ...!!!

நான் ...
சிரித்து பல நாட்கள் ...
உன்னை பார்த்து சிரித்தபின் ...
உன்னிடம் நான் நிறைய ...
பேசவேண்டும் ...
என்னை பற்றியல்ல ....
உன் நினைவை பற்றியே ...!!!
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

காதல் செய் உயிரே ....!!!

என்
இதயம் துடிக்கிறது
உன் இதயம் ஏன்
துருப்பிடிக்கிறது....?
கொஞ்சமேனும் காதல்
செய் உயிரே ....!!!

உதடுகள் நடுங்குது ...
கண்கள் கலங்குது ...
இதயம் வலிக்குது ...
எல்லாம் உன்னை காதல் ..
செய்தபின்பு ....!!!
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

என்ன கொடுமை காதலில்

சேர்ந்து
வாழ்வது திருமணம் ....
பிரிந்து வாழ்வது காதல் ...
என்ன கொடுமை காதலில் ...!!!

பலமுறை
உன் இதயத்துக்குள் ...
வந்து வந்து போய் விட்டேன் ...
நீ இன்னும் என் காதலை ...
கைப்பற்றவில்லை ...!!!
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

உன் நினைவால் அலைந்தாலும் ...!!!

காதலும்
ஒரு கூட்டு வட்டி ....
இதயத்தில் இருந்த வலி ..
போதாது..? இன்னுமொரு ..
இதயத்தையும் பெற்று ..
வலியை சுமக்கிறோம் ....!!!

என் இதயத்தில் -நீ
எப்போதும் சந்தோசமாய் ...
இருக்கிறாய் அதுபோதும் ...
எனக்கு - நான் தெருவில் ..
உன் நினைவால் அலைந்தாலும்   ...!!!
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

உதட்டின் நிறத்தில்

உன்
உதட்டின் நிறத்தில்...
இருந்துதான் பூக்களின் ..
வர்ணங்கள்
தோன்றியிருக்கும்  ....!!!

காதலர் வலியில்
இருந்துதான் பூக்களில்
முள்  தோன்றியிருக்கும்
காதல் சின்னம் ரோஜா ..
சரியானதோ ....!!!

+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

உன்னோடு பேசுகிறேன் .....!!!

உன்னோடு...
பேசி பயனில்லை ....
என்பதை உணர்ர்ந்து தான் ...
என்னுள்ளே இருக்கும் ...
உன்னோடு பேசுகிறேன் .....!!!

உன்
இதயத்தில் நான் ...
இல்லவே இல்லை ...
என் இதயத்தில் - நீ
இல்லாமல்....
இல்லவே இல்லை ....!!!
+
வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!
கவிதை 05

நீ கிடைத்தால் மட்டும்....!!!

காதல்
ஒன்றும் பருவகால ....
வியாதியில்லை .....
பருவகால உணர்வு ...!!!

பருவ கால உணர்வை ...
காதல் வியாதியாக்கியது ...
உன் நினைவுகள் ....
நீ கிடைத்தால் மட்டும் ...
தீரும் வியாதி ....!!!
+
வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!
கவிதை 04

நினைவுக்கு வருகிறது ....!!!

காற்றடிக்கும்
போதெல்லாம்  -நீ என்
அருகில் இருந்து விட்ட ...
மூச்சு நினைவுக்கு வருகுது ...!!!

கடல் அலை அடிக்கும்
போதெல்லாம் -நீ என்னை
அணைத்தது நினைவுக்கு ...
வருகிறது ....!!!
+
வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!
கவிதை 03

என் நிம்மதியை ... தந்துவிடு ....!!!

உன்னிடம் காதலை ....
மட்டும் தரவில்லை ...
என் வாழ்க்கையையும் ....
தந்தேன் ....!!!

என் காதலை நீ
ஏற்றுகொள்ளாவிட்டாலும்
பரவாயில்லை என் நிம்மதியை ...
தந்துவிடு ....!!!
+
வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!
கவிதை 02

வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!

என்
காதலை  சவபெட்டிக்குள் ....
வைத்து மூடி சென்றுவிட்டு ...
நீ
மணவறை பந்தலில் ....
மாலையுடன் நிற்கிறாய் ...
உன்
நினைவோடு நான் கல்லறை
வரை வாழ்ந்துகொண்டிருப்பேன்...!!!

சிறப்புடைய இடுகை

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநா...