இடுகைகள்

நவம்பர் 3, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏங்குகிறேன் ....!!!

இதயம் தானடி விட்டு விட்டு துடிக்கும் உன் நினைவு நினைப்பது விடாமலே துடிக்குது ....!!! முதல் நாள் உன்னை சந்தித்தேன் இரண்டாம் நாள் உன்னோடு கதைத்தேன் வாழ் நாள் முழுவதும் ஏங்குகிறேன் ....!!!

ஆறுதல் சொல்ல நீ எங்கே...?

வெள்ளை மனமாக இருந்த என்னை வான் வில்லாக மாற்றினாய் சந்தோசப்பட்டேன் நிலைக்க வில்லை சந்தோசம் வானவில்லில் அம்பை சொறுவியவள் நீ பலர் அழும்போது ஆறுதல் சொன்ன நீ இப்போ நான் அழுகிறேன் ஆறுதல் சொல்ல நீ எங்கே...?

வலியை துடைப்பாய் ....!!!

என் இதயத்தை உன்னிடம் தந்துவிட்டேன் விளையாட்டுப்பொருளாகவும் இதய வீட்டுப்போருளாகவும் பாவிப்பது உன்னை பொறுத்தது காதல் எதிர் பார்ப்பற்ற இதயங்களின் இணைப்பு இறைவனின் பிணைப்பு நீ விளையாட்டு பொருளாக பயன் படுத்தினால் வலியை தருவாய் ..... இதயவீட்டு பொருளாக பயன்படுத்தினால் -வலியை துடைப்பாய் ....!!!

கவலையில்லை

தேவையான எல்லா விடயங்களையும் உனக்காக மறந்தேன் கடவுளின் தண்டனை நீ என்னை மறந்து விட்டாய் ...!!! உனக்கு பூ தந்தேன் அன்புக்கு அடையாளமாய் நீ சூடுவதற்கு தந்ததாக நினைத்து விட்டாய் ....!!! நீ பிரிந்து செல் கவலையில்லை உன் நினைவுகள் என்னிடம் இருக்கும் வரை கவலையில்லை

உன்னிடம் என் இதயம் ....!!!

நினைவுகளுடன் என்னை போராடவிட்டு -நீ எப்படி நிம்மதியாய் இருக்கிறாய் ...? நான் உயிரோடு இருக்கும் காலம் வரை உன் உயிராக இருக்கும் காதல் வரத்தை தந்துவிடுவாயா அன்பே ...? உன்னை எல்லோருக்கும் பிடிக்கிறது அதுதான் எனக்கு பயமாக இருக்கிறது -என்றாலும் நான் கொடுத்து வைத்தவன் உன்னிடம் என் இதயம் ....!!!

உயிர் பெறுகின்றன அன்பே ....!!!

உன் நினைவோடு வாழ்வது போதாது என்று நினைவு பொருளையும் தந்து கொல்லுகிறாய் .... வீட்டார் யாரும் இல்லை என்று நினைத்து எத்தனை முறை -உன் நினைவு பொருட்களுடன் கதைத்து தம்பி தங்கையுடன் கிண்டல் வாங்கினேன் தெரியுமா ....? நீ நினைவு பொருளாக தருகிறாய் என்னிடம் வந்து அவை உயிர் பெறுகின்றன அன்பே ....!!!

சிற்பமாய் இருக்குதடி

எந்த விலை கொடுத்தாலும் பெறமுடியாது -உன் சிரிப்பு எந்த விலை கொடுத்தாலும் பெறமுடியாது - உன் வெட்கம் மலர்மேல் உள்ல காதல் பனிக்குத்தான் தெரியும் உன் மீதுள்ள காதல் என் இதயத்துக்குத்தான் த்தெரியும் ...!!! நீ சிரித்த அத்தனை சிரிப்பும் சிற்பமாய் இருக்குதடி நெஞ்சில் ...!!!

-நீ அசையும் திசையெல்லாம்

காதல் ஒன்றுதான் புரிந்து கொண்டாலும் அழகு -பிரிந்து சென்றாலும் அழகு -வலிகள் தான் வேறுபடும் காதல் வேறுபடாது ....!!! உன்னை என்று பார்த்தேனோ அன்று நான் இறைவனிடம் கேட்ட வரம் உன்னை எனக்கு தா என்று அல்ல ...? உன்னை தவிர யாரையும் தந்துவிடாதே என்று ....!!! உன் காந்த கண்ணில் பட்டு துடிக்கும் இரும்பு கண் நான் -நீ அசையும் திசையெல்லாம் அசைகிறேன்....!!!

உயிராகிவிட்டாய் ....!!!

நீ வரும் வழியையே என் விழி பார்க்கும் -உன் விழிக்கு அப்பால் சென்று என் உயிர் உன்னை தேடும் ....!!! தேடிக்களைத்த என் உயிர் துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும் உன்னை தேடுவதை நிறுத்த ஜோசிக்காது ....!!! என் உயிர் என்னக்காக துடித்ததை விட உனக்காக துடிப்பதே பாக்கியம் என்கிறது அந்தளவுக்கு நீ உயிராகிவிட்டாய் ....!!!

ஒருவரி நட்புவரி -01

நண்பா கர்ணனாக இருக்கவேண்டியதில்லை கருணையோடு இருந்தால் போதும்

ஒருவரி நட்புவரி -03

ஒருவரி நட்புவரி -03 நட்பு சூரியனுமில்லை சந்திரனுமில்லை வானம்

ஒருவரி நட்புவரி -

ஒருவரி நட்புவரி -04 தடையில்லாமல் வரும் தடுத்தாலும் வரும் -நட்பு

ஒருவரி நட்புவரி

ஒருவரி நட்புவரி -05 இதயத்தில் இருந்தால் காதல் இதயமாக இருப்பது நட்பு

ஹைக்கூக்கள்

ஹைக்கூக்கள் இனிக்கும் நீரையும் (அன்பு ) தரும் வெறிக்கும் நீரையும் ( சோகம் ) தரும் ---தென்னை --

ஹைக்கூ 02

ஹைக்கூ 02 பலத்தாலும் மேன்மை குணத்தாலும் மேன்மை --யானை --

ஹைக்கூ 03

ஹைக்கூ 03 வடிந்தால் அழகு பாய்ந்தால் பயம் --நீர் --

ஹைக்கூ 04

ஹைக்கூ 04 ஆரோக்கியனுக்கு சங்கடம் நோயாளிக்கு அன்பளிப்பு --மரணம்--

ஹைக்கூ 05

ஹைக்கூ 05 பத்தும் பலதாய் வரும் பத்திரமாத தங்கம் -பத்திரிக்கை -

கல் எறிந்து கண்ணாடியை

உன்னை நானும் என்னை நீயும் கைது செய்துவிட்டோம் காதல் ஆயுள் கைதி காதல் இன்பம் மட்டும் வாழ்க்கையில்லை காதலில் துன்பமும் வாழ்க்கைதான் நான் காதல் கண்ணாடியால் உன்னை ரசிக்கிறேன் -நீ கல் எறிந்து கண்ணாடியை உடைக்கிறாய் ....!!! கஸல் 556

வாட வைக்கிறாயே ...!!!

காற்று மூச்சு விடத்தான் அவசியம் -நீ காற்றை பேச்சுக்கு பயன்படுத்துகிறாய் மழை காலத்தில் வரும் வண்டுகள் போல் அப்பாப்போ வந்து போகிறாய் என் காதல் அழுகிறது வெயிலில் பூ வாடலாம் காதல் மரத்தை வாட வைக்கிறாயே ...!!! கஸல் ;557

காதல் வானவில்லை

காதலின் தோல்வியின் அடையாள சின்னத்தை தந்து விட்டாய் -நன்றி என் கண்ணுக்கும் புரியும் நீ காதல் சூரியனா ..? காதல் சூரிய ஒளியா ..? புரியாமல் தவிர்க்கிறேன் வார்த்தை சுடுகிறது காதல் வானவில்லை கடலில் வரைய சொல்லுகிறாய் மிக விரைவாக அழிப்பதற்காக கஸல் 558

கல்லறை

காதலித்த பின் நான் துடித்து கொண்டு இருக்கிறேன் - நீ சாதாரணமாக இருக்கிறாய் என் முத்தங்களை தந்துவிடு நினைவுகளை வைத்துக்கொள் ....!!! உனக்காக எழுதிய கவிதை எல்லாம் கல்லறை வாசகங்களாக மாறி வருகின்றன ....!!! கஸல் 559

வாழ்க்கைக்கு

உனக்காக நான் காத்திருப்பேன் நேரம் காத்திருக்குமா..? உன்னைப்போல் அதுவும் ஓடுகிறது ....!!! உன்னை சுவாமியாக கண்டேன் -இப்போது சாமியாராக போலி வார்த்தை கூறுகிறாய் வாழ்க்கைக்கு வளம் காதல் -அதை வாள் ஆக்கிவிட்டாய் -நீ கஸல் 560

நீ - படும் பாடு

நீ - படும் பாடு என்பாட்டில் தனியே இருந்தேன் என்னை செத்தவன் போல் ஆக்கிவிட்டாய் யார் நீ ************** என்னை மட்டும் நினைத்த மனதில் உன்னையும் நினைக்க வைத்தாயே ஏன் நீ *************** யாரையும் காதலிக்க மாட்டேன் என்றிருந்தேன் உன்னை கண்டேன் -எல்லாம் மாறிவிட்டது எப்படி நீ ..? *************** தினமும் வருயாய் புதினம் தருவாய் இப்போது எல்லாம் நிறுத்தி விட்டாயே எதற்காக நீ *************** இருவராய் இருந்தோம் ஒருவராய் மாறி விட்டாய் எப்போது நீ *************** இதயத்தில் இருந்து உடல் முழுதும் ஓடித்திரிந்த நீ -இப்போ மனதில் கூட இல்லையே எங்கு நீ *************** ஏன் சந்தேகப்பட்டாய் எதற்காக பிரிந்தாய் எவர் தூண்டியது எவரால் நீ *************** எனக்காக வாழவில்லை உனாக்காகவும் வாழவில்லை அப்படிஎன்றால் ..? யாருக்காக நீ *************** பார்க்கும் இடமெல்லாம் பார்க்கும் பொருள் எல்லாம் தொடும் இடமெல்லாம் எங்கும் நீ **************** யாரெல்லாம் என்னை காதலிக்கலாம் எவருக்கெல்லாம் என்னை திருமணம் பேசலாம் ஆனால் என் மனதில் எப்போதும் நீ