இனிய வரவேற்பு கவிதைகள் - 05
 உ ள்ளம் தூய்மையாக இருப்பின்...  உ ள்ளிருக்கும் மனது இறைவன்......!  உ ள்ளதூய்மை என்பது ....  உ யிரினங்கள் அனைத்திலும் ....  உ ள்அன்பை செலுத்துவதாகும் ....!!!   உ றவுகளே எனது இனிமையான ....  உ ள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் ....  உ ழைப்பை உயிராய் மதிப்போம் ....  உ ற்றார் உறவினரை மகிழ்விப்போம் .....  உ ற்சாகமாய் வாழ்ந்திடுவோம் .....!!!   உ ள்ளொன்று வைத்து புறம்பேசாதே.....  உ ள்ளவனுக்கு பகட்டுக்கு உதவிசெய்யாதே .....  உ ண்டு களித்தே உடலை நோயாக்காதே.....  உ ண்மை அன்பை உதறி விடாதே .....  உ ள்ளத்தை ஊனமாக்கிடாதே.....!!!   உ ள்ளதை கொண்டு இன்பமாய் வாழ்வோம் ....  உ லகிற்கு ஏதேனும் செய்துவிட்டு இறப்போம் .....  உ ள்ளதில் ஓரளவேணும் ஈகை செய்வோம் ....  உ ள்வரவு எதிர்பார்க்காமல் உதவி செய்வோம்  உ யிர்பிரிந்தபின்னும் உலகோடு வாழ்வோம் ......!!!              
 
கருத்துகள்
கருத்துரையிடுக