இடுகைகள்

ஜூன் 22, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீயோ அக்கறையில்லாமல்

உன்னை கடவுளாக .... நினைத்து கவிதை .... எழுதுகிறேன் -நீயோ .... கடவுளை வணங்க .... கோயில் போகணும் .... என்கிறாய் ......!!! நான் கவிதை .... எழுதும்போது நீ .... அருகில் இருக்கவேண்டும் .... என்று ஆசைப்படுகிறேன் .... நீயோ அக்கறையில்லாமல் .... இருக்கிறாய் .....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

உன் அதிக நிராகரிப்பு ....!!!

நாணயத்துக்கு இரு பக்கம் போல் நான் தலை , நீ  பூ.....!!! புத்தகத்துக்கு பண்பு போல் நான் எழுத்து நீ வரிகள் ...!!! இதயத்துக்கு இரு அறை நான்வ லது நீ ,இடது....!!! காதல் பிரிவுக்கு காரணம் என் அதிக எதிர்பார்ப்பு .... உன் அதிக நிராகரிப்பு ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ என்னை பிரிந்தாயோ ....?

பல சோதனைகள்... சந்தித்து பல ... வேதனையையும் .... சந்தித்தேன் .... அத்தனைக்கும் தீர்வு கண்டேன் .... நீ காதல் செய்ததால் ....!!! நீ ஏன் என்னை பிரிந்தாய் என்று இன்றுவரை தீர்வு காணவில்லை ...!!! எல்லோரும் வெற்றி பெற்றால் -காதலை ... யார் காதலிப்பார்கள் .... என்பதற்காக நீ .... என்னை பிரிந்தாயோ ....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

எதற்காக இரண்டையும் தருகிறாய் .....?

வலிகள் தோன்ற தோன்ற ..... வரிகள் கண்ணீர் விடும் ..... கண்ணீர் விட விட.... காதல் கவிதைகள் தோல்வியடையும்...!!! வரிகள் இனிக்க இனிக்க இதயம் துள்ளிக்குதிக்கும் ... காதல் கவிதைகள்..... இனிமையாகும் ...!!! கண்கள் தான் இரண்டு .... இதயம் ஒன்றுதானே .... எதற்காக இரண்டையும் .... தருகிறாய் .....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்