இடுகைகள்

செப்டம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எகிப்தின் மம்மியில் வைத்தால்...!

நான் ஒன்றும் விஷம் ... அருந்த தேவையில்லை...! உன் நினைவே போதும் நான் மெல்ல மெல்ல இறப்பதற்கு ....!!! என் உடலை எகிப்தின் மம்மியில் வைத்தால்...! இரண்டு நிகழ்வுகள் ஒன்று என் உடல் அழியாது மற்றையது உன் நினைவுகள் அழியாது ....!!! நினைவு என்பது ஒரு மலர்தான் .... உதிக்கும் போது அழகு வாடும் போது அழுகை ....!!!

வாழவைக்கிறாய் -நீ

எப்போது ஒரு மனிதன் இறக்கின்றான் ....? மூளையில் நினைவாற்றல் நின்றவுடன் ...!!! அன்பே உன் நினைவாற்றல் என்னை வாழவைக்கிறது வாழ்கிறேன் என்பதைவிட வாழவைக்கிறாய் -நீ நீ பேசாத நிமிடங்கள் நான் புதைகுழிக்குள் வாழும் நிமிடங்கள் என் கடவுளும் நீ காலனும் நீ ....!!!

காதலின் தலைவிதி

நான் காத்திருக்கிறேன் காத்திருப்பேன் அன்பே உன் கனமான வார்த்தைக்காக ....!!! நீ காரமாக பேசினாலும் கண்டு கொள்ளாமல் விட்டாலும் காத்திருப்பேன் உன் கனமான வார்த்தைக்கு ....!!! காதலின் தலைவிதி காத்திருப்பதும் கலங்கிக்கொண்டு வாழ்வதும் நான் மட்டும் விதிவிலக்கா ...?

துன்பம் கூட கடுகளவுதான் ....!!!

எத்தனை முறை என்னை கோபப்படுத்தினாலும் பறவாயில்லை ....!!! அத்தனை முறை உன்னை பலமடங்கு நேசிக்கிறேன் நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து விடு ....!!! காதலோடு இருந்துவிடு நீ காதலோடு இருந்தால் கடலளவு துன்பம் கூட கடுகளவுதான் ....!!!

உன் நினைவோடு வாழ்கிறேன்

என் நினைவோடு .. உன் நினைவுகளை இணைத்து பார் உயிரே ....!!! என் நினைவுகள் படும் வேதனை உனக்கு புரியும் ... என் நினைகளின் காயங்கள் தெரிய வரும் ....!!! அத்தனை காயங்கள் வந்தபோதும் உன் நினைவுகள் நான் வாழும் ஆலயம் 

குப்பை கடுகு கவிதை

எம் அருகே வரும் போது மூக்கை பொத்தும் மானிடா ....!!! நீ இறந்தால் அடிக்கும் நாற்றத்தைவிட நாம் ஒன்றும் பெரிதல்லா ...!!! குப்பை கடுகு கவிதை

குப்பை- கடுகு கவிதை

எங்களை எரிக்காதீர்கள் புதைக்காதீர்கள் அது மனிதனை செய்யும் பணிகள் ....!!! எங்களை மீள் சுழற்சி செய்யுங்கள் ....!!! குப்பை கடுகு கவிதை

குப்பை கடுகு கவிதை 03

உங்கள் உள்ளங்களையும் இடங்களையும் தூய்மை படுத்தாத நீங்கள் தானே -குப்பை எங்களை குப்பை என்கிறீர்களே ....? குப்பை கடுகு கவிதை 03

காயப்பட்டிருக்கிறேன் ....!!!

நீ நினைவாய் தந்த ரோஜா செடியில் முற்கள் மட்டுமே உதிக்கிறது ....!!! இரவு எப்போது வரும் காத்திருக்கிறேன் அப்போது இனிமையாய் வருவாயோ ...!!! உன் அழகால் இதயம் முழுக்க காயப்பட்டிருக்கிறேன் ....!!! கஸல் 728

முற்களால் பூஜை செய்கிறாய் .....!!!

உன் நினைவுகளில் இருந்து கவிதை எழுதிய -நான் வலிகளில் இருந்து கவிதை எழுதுகிறேன் ....!!! காதல் பூவால்  பூஜை செய்த - நீ முற்களால் பூஜை செய்கிறாய் .....!!! உன் கண்ணுக்கு மயங்கி காதல் செய்தேன் இப்போ உன்னை கண்டே மறைகிறேன் ....!!! கஸல் 727

நாற்காலியில் ..

சொகுசான... நாற்காலியில் .. இருந்து கொண்டு ... காற்று இல்லை என்று கதறிக்கொண்டு இருகிறாயே மனிதா ...? மரம் கடுகு கவிதைகள்

என் நிழலின் கீழிருந்து ...

நான் செய்த பெரும் தவறு .. மனிதா உனக்கு நிழல் .. தந்தது தானோ ...? என் நிழலின் கீழிருந்து ... என்னையே .... வெட்டுகிறாய் ...!!! மரம் கடுகு கவிதைகள்

உங்களுக்கு உயிர் காப்பது ...!!!

எங்களில் ஒரு சில .. மரங்களை கடவுளாக்கி ... மற்றவற்றை விறகுகள் ... ஆக்கியது மனிதனே தவிர ... நாங்கள் இல்லை .....!!! எமது கடமை ஒரே செயல் உங்களுக்கு உயிர் காப்பது ...!!! மரம் கடுகு கவிதைகள்

மரம் -கடுகு கவிதைகள்

சிலுவைக்காகவும் .... எங்களை வெட்டுகிறீர்கள்.... இறுதி ஊர்வல கட்டைக்காவும் ... எங்களை வெட்டுகிறீர்கள் ... சிரித்துகொண்டே இறக்கிறோம் நாங்கள் ....!!! மரம் கடுகு கவிதைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறேன் உன் முகத்தை ...!!! மறக்க மறக்க ஊற்றாய் வருகிறது உன் நினைவுகள் ...!!! காதல் என்றால் வலி இருக்கலாம் வலியே காதலாக இருக்குதடி என் வாழ்வில் ...!!!

நீ எப்படி மாறப்போகிறாய்...?

எல்லோரும் விரும்பும் வண்ணாத்தி பூச்சியின் தொடக்கம் .... எல்லோரும் வெறுக்கும் புழு வடிவம் ....!!! நீ இப்போ எப்படி இருக்கிறாய் என்பது .. முக்கியமில்லை -நீ எப்படி மாறப்போகிறாய்...? + + மன தைரிய கவிதைகள் கடுகு கவிதை 

சுமத்தும் குணத்தை அழித்து விடு ....!!!

உனக்கு ஒரு தோல்வி ... துன்பம்... பின்னடைவு... என்றால் அதில்... உன் பங்கு என்ன ... கண்டு கொள் ......!!! பிறர் மீதி பழி சுமத்தும் குணத்தை அழித்து விடு ....!!! + + மன தைரிய கவிதைகள் கடுகு கவிதை

கவனமாக செயல் படு ....!!!

இரத்தத்தால் ... சூழ்ந்திருக்கும் ... இதயத்தில் தான்... கொலைவெறியை ... தூண்டும் எண்ணமும் ... உண்டு .....!!! இரத்த தானம் செய்யும் எண்ணமும் உண்டு ...!!! கவனமாக செயல் படு ....!!! + + மன தைரிய கவிதைகள் கடுகு கவிதை

தொழிலாக்கி விடாதே

முன்னேற்றத்தின் ... உரம் வறுமை .....!!! வறுமையை தொழிலாக்கி விடாதே .... தொழில் அதிபர்கள் .. அனைவரும் ... வறுமையில் இருந்து ... வந்தவர்களே ...!!! + + மன தைரிய கவிதைகள் கடுகு கவிதை

மன தைரிய கவிதைகள்

நீ  தீ பெட்டிக்குள்  இருக்கும் தீக்குச்சி  இரு ....!!! உன்னை தீண்டாதவரை  பொறுமையாய் இரு ... தீண்டிய பின்பு ... தீயாய் இரு .....!!! + + மன தைரிய கவிதைகள்  கடுகு கவிதை 

அம்மா கடுகு கவிதை 06

நினைத்தவுடன் கண்ணீரை வரவைக்கும் ஒவ்வொருவரின் ஜீவனும் அம்மாதான் ....!!! உடலின் ஒவ்வொரு அணுவும் துடிப்பது அம்மாவுக்கே ....!!! அம்மா கடுகு கவிதை

அம்மா கடுகு கவிதை 05

உயிருடன் ... இருக்கின்ற போது மட்டும் ... அழைப்பதில்லை ... அம்மா ....!!! மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் அழைக்கும் உடன் சொல் .... ஒரே உலக சொல் -அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை

அம்மா கடுகு கவிதை 04

பிறந்தபோது... ஈரத்துடன் பார்த்த ... முகத்தையே - இறந்து ... கிடக்கும் போது இதே ... முகமாக பார்க்கும் ... ஒரே -ஜீவன் - அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை

அம்மா கடுகு கவிதை 03

எவராலும் முடியாது .. நொடிக்கு நொடி என்ன ... தேவை என்பதை... உணரும் மனோ தத்துவ .. ஞானதன்மை ...!!! அம்மா கடுகு கவிதை

அம்மா கடுகு கவிதை 02

துன்பம் வரும் போது இறைவனை நாடுகிறோம் அழைக்கிறோம் ....!!! சிறு முள்ளு குற்றிய .. நொடியில் அழைக்கிறோம் அம்மாவையே ....!!! அம்மா கடுகு கவிதை

அம்மா -கடுகு கவிதை

யார் சொன்னது ...? கூப்பிட்ட குரலுக்கு ... கடவுள் வராது என்று ...? கூப்பிட்டு பார் உன் அம்மாவை  ......!!! அம்மா கடுகு கவிதை 

துன்பத்தை தாங்க முடியாது ....!!!

துன்பத்தை என்னால் தாங்க முடியாது ....!!! என்னை  காக்க விரும்பினால் .. என்னவன் என்னை ... பிரியக்கூடாது ..... பிரிந்த பின் அவனுடன்  சேர்வது எளிதல்ல .....!!! என்னவனை எப்படியாவது  என்னில் இருந்து பிரிவதை  தடுத்தே ஆகணும்  இல்லாவிடில் அவனின்  துன்பத்தை என்னால் தாங்க  முடியாது ....!!! திருக்குறள் : 1155 + பிரிவாற்றாமை + ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்  நீங்கின் அரிதால் புணர்வு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 75

நம்பியது தவறோ ....!!!

நம்பியது தவறோ ....!!! உன்னை எப்போதுமே .. பிரிந்திடமாட்டேன் பிரிந்திட மாட்டேன்  அடிக்கடி சொன்னவனே ....!!! அஞ்சாதே கண்ணே என்று .. ஆறுதல் சொன்னவனே ...!!! பிரிவு  நிச்சயமாகி விட்டதடா ... நீ கூறிய ஆறுதலை .. நம்பியது தவறோ ....!!! திருக்குறள் : 1154 + பிரிவாற்றாமை + அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்  தேறியார்க்கு உண்டோ தவறு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 74

புரிந்துகொள்ள முடியவில்லை

புரிந்துகொள்ள முடியவில்லை  நான் படும் துயரம் ... அறிந்தவனே என்னவனே ... என் துயரத்தை அறியாதவன்  நீ அல்ல ..... அத்தனை அறிவும் அழகும்  உடையவன் - நீ நீ  திரும்பிவருவாய்  என்று நினைத்தாலும் ... உன் அறிவுக்கு ஆற்றலுக்கும்  புரிந்துகொள்ள முடியவில்லை  என்னவனே ....!!!  திருக்குறள் : 1153 + பிரிவாற்றாமை + அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்  பிரிவோ ரிடத்துண்மை யான். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 73

என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!!

என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!! என்னவனின் பார்வை ....!!! உள்ளம் முழுதும் இன்பம் ... ஊற்றெடுப்பதாய் இன்புற்றேன் .. அவரின் பார்வையால் இன்பம்  காணாத பொழுதே இல்லை ...!!! பிரியப்போகிறார் .... என்கிறாரே - இப்போதான்  அவர் பார்த்த பார்வை  கொடுமையை ஏற்படுத்துகிறது .. எப்படி தாங்குவேன் என்று  என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!! திருக்குறள் : 1152 + பிரிவாற்றாமை + இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்  புன்கண் உடைத்தால் புணர்வு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 72

என் மரண நொடிகள் ...!!!

என் மரண நொடிகள் ...!!! என்னவனே .....!!! உன் பிரிவை உயிர் தாங்காது  பிரிய மாட்டேன் என்பதை  என்னிடம் சொல் - நான்  அந்த செய்தியுடன் உயிர்  வாழ்வேன் .....!!! பிரிந்தே ஆகவேண்டும் ... என்றால் நீ திரும்பி வரும் .. வேளையில் உயிருடன் .. இருப்பவரிடம் சொல் உயிரே ... உன்னை பிரிந்து வாழும்  நொடிகள் என் மரண நொடிகள் ...!!! திருக்குறள் : 1151 + பிரிவாற்றாமை + செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்  வல்வரவு வாழ்வார்க் குரை. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 71

இதயத்தில் ஏற்பட்ட காயம் ....!!!

திங்கள் முகத்தழகியே ... செவ்வாய் உதட்டழகி ... புன் சிரிப்பால் என்னை .. புண்ணாகியவளே....!!! உன்  உதட்டின் சிறு அசைவும் ... உறைய வைக்குதடி இரத்தத்தை... உன் உதட்டின் சாயம் -என்  இதயத்தில் ஏற்பட்ட காயம் ....!!! + + அவளின்  ஒவ்வொரு செயலும்  கவிதை (05)

இதயத்தை தொலைத்து நிற்கிறேன் ...!!!

ஏனடி விழியில் வாள்  வைத்திருகிறாய் ....? அணுவணுவாய் வெட்டி .. தொலைக்கிறாய் .... என் உடலை ...!!! ஒருபுறம் விழி பேசுகிறது .. மறுபுறம் புருவம் என்னை ... வா வா என்று அழைகிறது ... இரண்டு நாட்டு யுத்தத்தில் .. அகப்பட்ட ஜீவன் - நான்  உன் யுத்தத்தில்  இதயத்தை  தொலைத்து நிற்கிறேன் ...!!! + + அவளின்  ஒவ்வொரு செயலும்  கவிதை (04)

தேடி அழைக்கிறேன் ….!!!

நான் காதலிக்கிறேன் நீ வெறுகிறாய் காதல் நேர் மறையோ ….!!! முள்ளின் மீது தூங்குவதும் …. உன் நினைவோடு வாழ்வதும் ஒன்றுதான்…!!! நீ காதலோடு விட்ட மூச்சை காற்றில் தேடி அழைக்கிறேன் ….!!! கஸல் 724

மீண்டும் அழகு படுத்துவது ….?

என்னவளே … வெண் நிலாவின்  முக .. அழகியே  எதற்கடி …? முகமஞ்சல் பூசுகிறாய்…? அழகை எப்படி மீண்டும்  அழகு படுத்துவது ….? காற்றுக்கே அழகு … உன் கொழுசு ஓசையை  கேட்கவைத்ததே … நிலவுக்கே அழகு உன்  திருமேனியில் பட்டு  தெறிப்பது தான் …….!!! + + அவளின்  ஒவ்வொரு செயலும்  கவிதை (02)

மைதீட்டிய கண்ணும் ....!!!

என்னவளே .....!!! உன் ஒவ்வொரு செயலும்  அழகு நிறைந்த உறுப்புக்களும் ... உறுப்புகளின் அசைவும் ... தனி தனியான கவிதை .. வடிவம் எழுதுகிறேன் பார் ....!!! உன்  மைதீட்டிய கண்ணும்  வெண் பாதையில் ஓடும்  கருவிழியும் - கருவிழிக்கு மேம் பாலமாய் அமையும்  உன் புருவமும்  நவீன நகராக்கத்தையும்  தாண்டிய அழகோ அழகு ....!!!