இடுகைகள்

டிசம்பர் 24, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை

எப்போது தோற்பவன் .... நகைசுவை நடிகன் ... எப்போதும் வெல்பவன் ... கதா நாயகன் .... வென்று தோற்பவன் ... வில்லன் .... வாழ்கையும் இதுதான் ...!!! ^^^ மிருக வதை சட்டத்தை .... கடுமையாக எதிர்த்தார் ... எங்க தலைவர் .... வெள்ளை குதிரைமேல் ... வீர வாள் ஏந்தியபடி ....!!! ^^^ எல்லோரையும் சிரிக்கவைக்கும் .... அவருக்கு சிரிக்க அனுமதியில்லை ... சிரித்தால் தொழில் பறிக்கப்படும் ... நகைசுவை நடிகன் ....!!! ^^^ & .....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை... ...............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்...............  ...............யாழ்ப்பாணம்......................

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

பல்லிக்கு  வால் பிடிப்பது - பிடிக்காது .... வால் அறுந்தாலும் வாழும் ... வால் பிடிக்காதே மனிதா ...!!! ^^^ ஓடி ஓடி உழைக்கணும்... முகிலைப்போல் .... ஊருக்கே கொடுக்கணும் ... முகிலைப்போல்.....!!! ^^^ கெட்டிக்காரமகனையும் .... கெட்டு போன மகனையும் .... ஒன்றாகவே பார்க்கும் குணம் .... அம்மா ........!!! ^^^ தண்ணீருக்காக போராடினோம் .... கண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ... வெள்ள காடு ....!!! ^^^ தனியே வாழ்ந்தபோது ... தன் அறையை கூட்டாதவன் ... கல்யாணம் செய்தபின் ... வீடு கூட்டுவான் ....!!! & .....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை... ...............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்...............  ...............யாழ்ப்பாணம்......................