இடுகைகள்

ஜூன் 3, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் அன்புள்ள ரசிகனுக்கு

என் அன்புள்ள ரசிகனுக்கு கவிப்புயல் எழுதும் கவிதை --------------------------------------- ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறிய செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....! # என்இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்கு தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும்..... இதயத்துக்கு புரியும் ..... ரசிகனே உனக்குத்தான் புரியும் .... நான் படுகின்ற வலியின் வலி ......! # ஒருதலையாக காதலித்தேன் ... காதலின் இராஜாங்கம் என்னிடம் .... காதலை சொன்னேன் .... என் இராஜாங்கமே சிதைந்தது ..... காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் .... பரகசியத்தில் இன்னொரு துன்பம் .... காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் .... கண்டு கொல்லாதே ரசிகனே .....! # என் காதலுக்கு

கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா

---------------- கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா ---------------- உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி தனியாக பேசி இன்பம் காணாமல் துணையாக பேசி இன்பம் காண்போம் வா -------------------------------------! வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம் அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம் -------------------------------------! எனக்குள்ளே உயிராய் கலந்திருப்பதால்,இதயம் தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன் நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே ------------------------------------! தேடினேன் நீ வரும் வழினெடுகிலும் வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால் துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி -----------------------------------! & காதல் வெண்பா கவிப்புயல் இனியவன்