இடுகைகள்

செப்டம்பர் 23, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிகமுறை உண்ணா நோன்பு இருந்தவர்கள்

நித்தம் நித்தம் வேலை செய்து  அடுப்பு மூட்டும் அங்காடிகள் நாம்  நிலையற்ற தொழிலில் நிச்சயமற்ற  வருவாயில் வயிறு காக்கும் தினக்கூலி  அங்காடி குடும்பம் நாங்கள் .....!!! மழை பெய்தால் வேலையில்லை  கடும் காற்றாடித்தால் வேலையில்லை  முதலாளி வராவிட்டால் வேலையில்லை  வேலையில்லாவிட்டால் வேலையில்லை  நிச்சய தொழிலில்லாத தினமும் அலையும்  தினக்கூலி குடும்பங்கள் நாம் ....!!! ஆலயம் செல்வதில்லை -ஆனாலும்  ஆண்டவனிடம் மன்றாடுவோம்  இன்று மழைவரக்கூடாது  கடும் காற்று அடிக்க கூடாது  முதலாளி சுகநலத்தோடு வாழனும்  ஆகாயத்தை நம்பி ஆயுளை நடார்த்துகிறோம்  நோய் என்று இருக்க மாட்டோம்  வந்தாலும் சோரமாட்டோம்  ஒரு வேளை சோறு நாம் உருண்டால் தானே உண்டதுண்டு -உலகிலேயே  அதிகமுறை உண்ணா நோன்பு இருந்தவர்கள்  நாமாகத்தான் இருக்கமுடியும் ....!!! எங்களுக்கும் காலம் வரும்  தேர்தல் வரும் காலம் பொற்காலம்  இலவச உணவு உடுக்க உடை  படுக்க பாய் குடிக்க நீர் -அடிக்க தண்ணீர்  எங்களின் இயலாமையை நன்றாக பயன்  படுத்தும் அரசியல் வாதிகள் .....!!! ஆயிரம் சட்டங்கள் அடுக்கடுக்காய் வரும்  ஒருசட்டம் கூட தினக்கூலியை  காப்பாற்றவில்லை  தினகூலியை காப்பாற்ற அரசிய

காதலை விட்டால் எங்கே உண்டு ....?

உன்னோடு சண்டையிடும் போது அந்த நொடியில் என் மனமே என்னிடம் கேட்கும் -ஏனடா ..? இப்படியேல்லாம் சித்திரவதை செய்கிறாய் ...? வீடு  வந்து சிந்திப்பேன் -இனிமேல் சண்டையிட கூடாது கூடாது ...!!! அடுத்தமுறையும் ஏதோ சண்டை ....!!! நீ மௌனம் நான் கெஞ்சல் நான் மௌனம் நீ கெஞ்சல் -இந்தசுகம் காதலை விட்டால் எங்கே உண்டு ....?

காதலித்துப்பார் வெற்றி

ஒவ்வொரு இளவயதினரதும் முதல் உணர்வு காதல்  முதல் வெற்றியும் காதல்  காதலில் வெற்றிதான்  வாழ்க்கையை வசந்தமாக்கிறது காதலித்துப்பார் வெற்றியின்  இன்பம் தெரியும் ....!!!

இருமுறை பிறக்கிறான்

ஒவ்வொருவனும் வாழ்க்கையில் இருமுறை பிறக்கிறான் தாயின் மடியில் காதலியின் மடியில் இரண்டாவது பிறப்பு மனிதனாக்குகிறது முதல் பிறப்பு மனிதனாக பிறக்கிறான் ....!!!

காதலின் இரட்டை குழந்தைகள்

எப்போது விடியும் -அவளை எப்போது பார்ப்பேன் ...? எப்போது வருவாள் ..? பார்ப்பாளா ...? பார்த்தும் பார்க்காமல் போவாளா ...? சிரிப்பாளா .....? கடைக்கணால் கூட பார்ப்பாளா ....? பேசுவாளா ...? நான் பேசினால் பேசுவாளா ...? என்றோ ஒருநாள் காதலிப்பாளா ..? காதலித்தால் பெற்றொர் சம்மதிப்பார்களா ...? இப்படிதான் காதலில் .... காதலின் இரட்டை குழந்தைகள் ஏக்கமும் வலியும்.....!!!

சின்ன சின்ன ஆசைதான் ....!!!

தினமும் குடையோடு வருகிறேன் கண்ணே மழை வராது என்று தெரிந்தாலும் குடையோடு வருகிறேன் -திடீரென மழைவந்தால் அப்போது என்றாலும்  நாம் இணைந்து செல்வோமோ என்ற சின்ன சின்ன ஆசைதான் ....!!!

நான் ஏமாறுவது...?

எத்தனை முறை நான் ஏமாறுவது...? நீ இன்று பதில் சொல்வாய் நாளை பதில் சொல்வாய் என்று ....!!! எத்தனை முறை மீண்டும் மீண்டும் ஏமாறுவது ....? உன்னை போல் உடை அணிந்து வந்தவர்களை நீதான் என்று எத்தனைமுறை ஏமாறுவேன் .....!!!

கற்று தந்துவிடாதே ...!!!

காதல் பாடம் சொல்லி தந்தவளே முதலில் நட்பை கற்று கொடுத்தாய் காதல் உணர்வை கற்று கொடுத்தாய் காத்திருக்க கற்று கொடுத்தாய் கோபப்பட கற்று கொடுத்தாய் இன்னும் என்ன கற்றுத்தர போகிறாய் தயவு செய்து எப்படி மறப்பது என்று மட்டும் கற்று தந்துவிடாதே ...!!!