இடுகைகள்

அக்டோபர் 16, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒருதுளி நீ ....!!!

பெற்ற ..... தாயின் இழப்பு ... ஒருபுறம் கண்ணீரை .... கொண்டு வருகிறது ...!!! நீ பிரிந்து சென்ற .. வலி கண்ணீரை .. தருகிறது ...!!! இரண்டையும் இரு .. கண்களாக விரும்பினேன் .. என்பதற்காக ... என் இரண்டு கண்ணும் .. அழுகிறது ..!!! நிச்சயம் சொல்வேன் ... வரும் துளிகளில் ... ஒருதுளி நீ ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

தேடுவேன் உயிர் உள்ள வரை,....!!!

நீ உண்மையோ .... பொய்யோ.... பேசினாலும் ..... ரசிப்பேன் ......!!! எத்தனை ... முறை அடித்தாலும்... தாய்மடித் தேடும் ... பிள்ளையாய்... உன்னை மட்டுமே ... தேடுவேன்... உயிர் உள்ள வரை,....!!! நீ பார்வையில் இருந்து விலகி செல்லும் .... போதெல்லாம் .... கண்களுடன் ....... போராடுகின்றது,.. கண்ணீர் .....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ வந்துபோனகனவுகள். . !

கலைந்தே .... போனாலும்..... மறப்பதில்லை... நீ வந்துபோன.... கனவுகள். . ! நீ பிரிந்தே போனாலும்..... விழியோரம் கலையாமல்.... நீ தந்த நினைவின் .... வலிகள் ........!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

மரணத்திற்கு எது அழகு…?

கடலுக்கு எது அழகு…? அலை அழகு ,...!!! * அலைக்கு எது அழகு…? கரை அழகு ...!!! * கரைக்கு எது அழகு…..? மண் அழகு ...!!! * மண்ணுக்கு எது அழகு...? வாசம் அழகு ...!!! * வாசத்திற்கு எது அழகு…? பூ அழகு .....!!! * பூவுக்கு எது அழகு…...? பெண் அழகு ...!!! * பெண்மைக்கு எது அழகு…? தாய்மை அழகு ...!!! * தாய்மைக்கு எது அழகு…? பாசம் அழகு ...!!! * பாசத்திற்கு எது அழகு...? உயிர் அழகு ....!!! * உயிருக்கு எது அழகு..? உடல் அழகு ...!!! * உடலுக்கு எது அழகு...? வயது அழகு ...!!! * வயதிற்கு எது அழகு..? காதல் அழகு ...!!!. * காதலுக்கு எது அழகு…? கற்பு அழகு ......!!! * கற்புக்கு எது அழகு…...? வாழ்க்கை அழகு…!!! * வாழ்க்கைக்கு எது அழகு…? மரணம் அழகு….!!! * மரணத்திற்கு எது அழகு…? வாழ்வியல் அழகு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன்