இடுகைகள்

ஜூன் 14, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலில் கொடுமை ....!!!

பேசாமல் விட்டு விடலாம் ... பேசாமல் இருப்பதுபோல் .... நடிப்பதுதான் கடினம் ....!!! காதலிக்காமல் இருக்கலாம் ... காதலிப்பதுபோல் நடிப்பது .... காதலில் கொடுமை ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

காதலை செய்யாதீர் .....!!!

காதலிக்க உள்ளம் ... இருப்பவர்கள் மட்டும் .... காதலியுங்கள் .....!!! ஆயிரம் காரணத்தை .... காதலுக்கு ஆயுதமாய் .... ரணகனமாக்கும் .... காதலை செய்யாதீர் .....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

மௌனத்தின் வலியை

உனக்கு  தெரியாது உன் மௌனத்தின் வலி உனக்கு காதல் உணா்த்தும்வரை....!!! சில வேளை நீ காதலித்தால் என்று முதல் உணர்த்துவேன் மௌனத்தின் வலியை துடித்தே இறந்துவிடுவாய்...!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

இனியவன் ஹைகூக்கள்

குடிசை வீட்டுக்குள் பிரகாச ஒளி . கட்டணமில்லாமல் கிடைகிறது . நிலவொளி *********** பிறந்த உடனேயே எச்சில் இலை பொறுக்கிறது தொட்டி குழந்தை *********** கோயில் தீர்த்த குளம் மாமிசம் உண்டவர்கள் இறங்க தடை குளத்துக்குள் மீன் *********** & ஹைக்கூ கவிதை  கவிப்புயல் இனியவன்