இடுகைகள்

ஆகஸ்ட் 10, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதயத்துக்கு ஒரு கவிதை

இதயம் வலித்தால் கண்ணீர்.......!!! இதயம் சிலுத்தால் .... சிரிப்பு..........!!! இதயம் சிந்தித்தால் .... கவிதை........!!! இதயம் சிறுக்கினால் ஓவியம் .......!!! இதயம்  முணுமுணுத்தால் வார்த்தை......!!! இதயம் காண்பது..... கனவு......!!! இதயம் தூங்குவது..... மௌனம்......!!! இதயம் அழுவது ..... பிரிவு.......!!! இதயம் இறப்பது.... தோல்வி.....!!! இதயமே நீயாக இருப்பது.... காதல்.......!!! ^ இதயத்துக்கு ஒரு கவிதை கவிப்புயல் இனியவன்  

மனசுக்கு ஒரு கவிதை

குழந்தை பருவத்தில் எதை சொன்னாலும் மறுக்கும் மனசு ....!!! இளமை பருவத்தில் காதலி எதை சொன்னாலும் தாங்கும் மனசு ...!!! முதுமை பருவத்தில்.. எதைசொன்னாலும்.... வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கும் மனசு .....!!! ^ மனசுக்கு ஒரு  கவிதை கவிப்புயல் இனியவன் 

தன்னம்பிக்கை கவிதை

வளைந்து நிற்பது ... தோல்விக்கு மட்டும் .... காரணமல்ல ... உயிருக்கும் ஆபத்து ....!!! பயம் ........ உயிராற்றலை கெடுக்கும்..... உயிர் கொல்லி ...!!! பயந்தால்...... விரைவில் இறப்பாய் ... நோய்வாய் படுவாய் ....!!! பயம் ..... தோல்விக்கு மட்டுமல்ல ... உன் உயிருக்கும் ..... காலன் ....!!! நிமிர்ந்து நில் ...... துணிந்து நில் .... உயிராற்றல் பெருகும்.... தன்னம்பிக்கை வளரும்.... வெற்றி நிச்சயம் ....!!! ^ தன்னம்பிக்கை கவிதை  கவிப்புயல் இனியவன்

சமத்துவம் தானாகதோன்றும் ....!!!

எனக்கே வேண்டும் ... எல்லாம்  வேண்டும் ... நினைப்பே -இன்றைய... பொருளாதார சமத்துவ.... இன்மைக்கு காரணம் ....!!! எனக்கும் வேண்டும் .. எல்லோருக்கும் வேண்டும்... என்று நினைத்தால் பொருளாதார சமத்துவம் தானாகதோன்றும் ....!!! வறிய நாடு... செல்வந்த நாடு..... வருமான கோடுதான் ... காரணம் - அதை தீர்மானித்தது .. மனித எண்ண கோடு என்ற .... ஆசைக்கோடு தான் ....!!! நாடு விருத்தியடைய .. வருமான விருத்தி மட்டுமல்ல...... மனித எண்ணவிருத்தி தான்..... மிக அவசியம் .... எனக்கும் வேண்டும் என்பது .... முயற்சி...........!!! எல்லோருக்கும் வேண்டும் என்பது .... தியாகம்..........!!! முயற்சியும் வேண்டும் ..... தியாகமும் வேண்டும் .....!!! ^ பொருளாதார கவிதை கவிப்புயல் இனியவன்