இடுகைகள்

ஆகஸ்ட் 12, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சோகத்தோடு வாழுகிறாய் ....?

படம்
உன்னை காதலித்தேன்  தேறியது கவலை ....!!! நீ சிரிக்கிறாய்  நானும் சிரிக்கிறேன்  கவிதை அழுகிறது ....!!! நான் உன் நினையோடு  வாழுகிறேன்  நீ ஏன் சோகத்தோடு  வாழுகிறாய் ....? கஸல் ;345                 

உன் பார்வை காதலா ...?

படம்
கண்ணில் பட்ட உன்  பார்வை காதலா ...? காரியமா ...? உன்னோடு வாழ்வதற்கு  பாடுபட்டேன் முடியவில்லை  இன்னும்  காத்துக்கொண்டிருக்கிறேன் ...!!! காதல் ரோஜா சிவப்பு  நீ  கறுப்பு ரோஜா  கேட்கிறாய் ....!!! கஸல் 344 

வாளாய் வருகிறதே ...!!!

படம்
காதலுக்காக  உறவை மறக்கிறேன்  நீ என்னை  மறக்கிறாய் ....!!! நிலாவில் இருக்கும்  பாட்டி உருவம் போல்  உன் உருவம் ....!!! உன் நினைவுகள்  வானவில்லாய  வரவேண்டும்  வாளாய் வருகிறதே ...!!! கஸல் ;343    

உள்ளத்தை கிள்ளுகிறதே ....!!!

படம்
கண்ணாடியில்  முகத்தை பார்ப்பதில் கண்ட  சந்தோஷம் நேரில் இருக்கவில்லை ....!!! காதல் உள்ளத்தை  தொடவேண்டும்  இங்கு உள்ளத்தை  கிள்ளுகிறதே ....!!! வானத்தில் முகில் அசைவது  போல் உன் எண்ணம்  அசையவேண்டும்  உன் எண்ணம் சூரியனை  போல் நிலையாக உள்ளதே ...!!! கஸல் ;341     

உள்ளத்தால் உருவான காதல் ...!!!

படம்
உறவுகளை மறந்தேன்   உணர்வுகளை துறந்தேன்  உடமைகளை இழந்தேன்  உண்மைகளை மறைத்தேன்  உலகை நேசித்தேன்  உள்ளத்தை விரும்பினேன்  உயிராக மதித்தேன்  உத்தமனாக இருந்தேன்  உன்னையே நினைத்தேன் உள்ளதெல்லாம் சொன்னேன்  உருகியே காதலித்தேன்  உன் உண்மையான அன்பை  உணர்வோடு எதிர்பார்த்தேன்  உயிரே ஏன் என்னை வெறுத்தாய்  உண்மையை சொல்  உனக்கு நான் செய்த வலிதான் என்ன ...? உள்ளம் மட்டுமல்ல  உயிரும் வலிக்கிறது  உன் பிரிவை ஏற்க மறுக்கிறது மனம்  உண்மையொன்றை சொல்கிறேன்  உனக்கு இனி என்னைப்போல் ஒருவன்  உன் உயிர் இருக்கும் வரை கிடைக்காது  உன்னதமான என் காதல்  உள்ளத்தால் உருவான காதல்  உலகம் இருக்கும் வரை தொடரும் .....!!!   

முடிந்தால் தடுத்துப்பார் ....!!!

படம்
நீ மனையாக  வருவாய் என்றுதான்  காதலித்தேன் ....!!! உன் சந்தேகம்  நான் காதலன் தகுதியை  இழந்துவிட்டேன் ....!!! நான் நிச்சயம் உன்னை  மனைவியாக்குவேன் ...!!! கவிதையாலும்  கற்பனையாலும்  கனவாலும் .....!!!! முடிந்தால் தடுத்துப்பார் ....!!!