இடுகைகள்

ஜனவரி 3, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னை அறிந்து கொள்வது ..?

கோபமான உன் முகத்தை பார்த்தாலே எனக்கு ரசிக்கதான் தோன்றுகிறது உன்னில் கோபமே வரமாட்டேன் என்கிறதே ....!!! & கவிப்புயல் இனியவன் ---- நீ ................. சிப்பிக்குள் இருக்கும் ... முத்தைப்போல் என் இதய அறைக்குள் .. முத்தாய் இருக்கிறாய் ....! சிறு மழைதுளிதான் முத்தாக மாறுவது போல் ... உன் ஓரக்கண் பார்வையால் இதயத்துக்குள் முத்தானாய் ..........! முத்துக்குழிப்பது எவ்வளவு கடினமோ ... அதைவிட கடினம் உன்னை அறிந்து கொள்வது ..? & கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதை

தொழிலாளியை ..... சுரண்டுவதற்கு  அவர்களிடம் ...... சதையில்லை ..... எலும்புகள் தான் மீதியாய் ...... இருக்கின்றன ...........!!! குடிகாரர் மட்டுமல்ல ..... அரசியல் வாதிகளும் .... உளறுகிறார் ................!!! நீ தீக்குச்சி தலைக்கனம் .... உன்னை சாம்பலாக்கும் ....!!! & சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதை

ஒவ்வொரு பிறந்த நாள் ..... கொண்டாட்டமும் ..... இறக்கும் நாளின் .... திறப்பு விழா ..............!!! நீ அடையாளப்படும் .... போதுபிரச்சனையை ...... எதிர் கொள்கிறாய் ......!!! மெழுகு திரி ..... தொழிற்சாலையில் ...... உழைப்பாளிகள் .... உயிருள்ள மெழுகுதிரி .......!!! & சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்