இடுகைகள்

அக்டோபர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சென்ரியூ

சர்க்கரை விலையேற்றம் சந்தோசப்படுகிறார் சர்க்கரை நோயாளி & சென்ரியூ

சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

செயற்கை சுவாசத்தில் வாழ் நாள்முழுவதும் வாழ்கிறது தொட்டி மீன் @@@ ஏழை கொடுத்த மனு வரிசைப்படுத்தியிருக்கிறது சவரக்கடை @@@ நன்னீர் விஷக்கிருமியாகியது டெங்கு @@@ அறுவடை செழித்தும் வாழ்க்கை செழிக்கவில்லை விவசாயக்கடன் @@@ காட்டுக்கு ராஜா என்ன தவறு செய்தாரோ மிருக்ககாட்சி கூடத்தில் சிறை @@@ கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள் -------------------------- பணம் கருகிக்கிடக்கிறது பட்டாசு @@@ சந்தோசப்படுத்தி சந்ததியை அழிக்கிறது பட்டாசு @@@ எங்களிலும் பருவமடையாதவர்கள் இருக்கிறார்கள் வெடிக்காத பட்டாசு @@@ ஒவ்வொரு வீடும் ஏவுகணை மையமாகிறது ஈக்குபட்டாசு @@@ மனதுக்குள் பலவர்ணங்களுடன் வெடிக்கிறது ஏழைவீட்டில் பட்டாசு & கவிப்புயல் இனியவன்

இனிய தீபாதிருநாளின்

தீப திரு நாளில்...... தீய எண்ணத்த எரித்துவிடு..... தீய செயலை தூக்கியெறி...... தீய பார்வையை மறைத்துவிடு..... தீய பேச்சை துப்பியெறி...... தீய தொழிலை செய்யாதே......! தீங்கு செய்வாரோடு சேராதே...... தீச்சொல் கூறி திரியாதே....... தீயவை எல்லாம் ஒழித்துவிடு....... தீப காந்திகல்போல் வாழ்........ தீம் சொல்லால் பேசு.......... தீரம் கொண்டசெயல் செய்..... தீர்த்தன் அருளை பெற்றுக்கொள்.....! & இனிய இனிப்பான இனிய தீபாதிருநாளின் இனியவனின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

பட்டுப்போன எலும்போடு..... தெருத்தெருவாய் சுற்றுகிறது  செத்துப்போன கைப்பிடி @@@ மனிதன் கால்தான் வைத்தான் நிலவுக்குள் குடும்பமே நடார்த்துகிறோம் குளத்துமீன்கள் @@@ அழுகுரல் சத்தம் துடிப்பார் யாருமில்லை பொம்மைகுழந்தை @@@ மின்சார கம்பத்தில் சந்தோசமாய் வாழுகின்றன குருவிகூடு @@@ ஆசைகள் நிறைவேறுகிறது எல்லோருடைய வாழ்க்கையிலும் கனவு @ ஹைக்கூ கவிதைகள் கவிப்புயல் இனியவன்

உன் அழைப்புக்காய்.....!

நீ.... காதலை.... மறுத்த அந்த நொடி..... இதயம் கல்லறை...... சென்றுவிட்டது.....! மூச்சு மட்டும்....... பேச்சுக்காக இயங்குது..... தோற்றுப்போனாலும்..... தேடிக்கொண்டிருக்கிறேன்..... உன் அழைப்புக்காய்.....! எனக்காக ஒருமுறை.... வந்துவிட்டு போ...... இல்லை வந்து என்னை..... கொண்றுவிட்டு போ....! & வலிக்கும் இதயத்தின் கவிதை பதிவு -201 கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ தொடர்

பிரம்ம முகூர்த்த நேரம் ஒலித்தது ஆலயமணி ஓசை கவலையோடு கோபுர புறா & கவிப்புயல் இனியவன் ஹைக்கூ  தொடர் 

உன் காதல் வேண்டும் .....!

கனவிலும் ......... நினைவாலும் ...... கொல்வது  போதாதென்று ...... மௌனத்தாலும் ...... கொல்கிறாய் .......... தயவு செய்து நிஜமாய்...... கொண்றுவிடு .........! என் குறைந்த பட்ச.... கோரிக்கை நீ வேண்டும் ..... அதிக  பட்சகோரிக்கை ..... நீயே  வேண்டும் ........ முடியாதுபோனால் ........ உன் காதல் வேண்டும் .....! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்  

ஆண் மரங்கள்.....

ஒரு...... முறை கண்.... சிமிட்டி விடு..... பூக்காமல் இருக்கும்..... ஆண் மரங்கள்..... பூக்கட்டும்.....! கண் ஓரத்தில்.... சிறு கண்ணீர் சிந்து.... பாலவனத்தில்...... நீர் ஊற்று வரட்டும்........! & சின்ன சின்ன காதல் வரி கவிப்புயல் இனியவன்

ஹைக்கூக்கள்

பட்டாசு வெடித்தது துர்நாற்றம் வயிற்றை குமட்டியது தீ விபத்தில் கருகிய உடல் ^ கவிப்புயல் இனியவன் ஹைக்கூக்கள்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம் -------------------------------------------------- மூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். - ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்) கவிப்புயலின் ஹைக்கூக்கள் -------------------------------------------- இட்ட முட்டை சுடுகிறது எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் ஏக்கத்தோடு பார்த்தது கோழி ^^^ இந்த ஹைக்கூவில் " இட்ட முட்டை சுடுகிறது  " எனவே அப்போதுதான் கோழி முட்டையிட்டு இருக்கிறது. " எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் " தன் இனத்தை பெருக்க தயாராக இருக்கும் பெண்........" ஏக்கத்தோடு பார்த்தது கோழி " உன்னைப்போலவே நானும் என் இனத்தை பெருக்கும் பெண். என் இனத்தை கொல்கிறாயே என்ற ஆதங்கம் கோழிக்கு........ எனவே மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாக இருக்கவேண்டும். தெரிந்த முடிவாக

தகவல் அறியும் சட்டத்தின்......

தகவல் அறியும் சட்டத்தின்...... மூலம்  கேட்கப்போகிறேன்...... நீ என்னை காதலிக்கிறாயா....? தேச வழமை சட்டத்தில்... உன்னை கைது செய்ய முடியது..... தேக வழமை சட்டம் இருந்தால்..... உன்னை கைதுசெய்யனும்...... இதயத்தை திருடிய குற்றத்துக்கு.....! & வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

தமிழோடு விளையாடு - கொ

கொ க்கரிப்பவனிடம் வீரமில்லை..... கொ ச்சைப்படுத்துபவனிடம் பண்பில்லை..... கொ டுமைப்படுத்துபவனிடம் மனிதமில்லை..... கொ டூரம் கொண்டவனிடம் புத்தியில்லை.....! கொ டிவழிவாழ தர்மம் காக்கும்....... கொ ட்டம்போட்டால் தண்டனைவரும்....... கொ ண்டாட்டம் கலாச்சாரமாகும்....... கொ டுங்கோல் ஆட்சி நாட்டைக்கெடுக்கும்.....! கொ ப்புபாயும் குரங்கு மன உறுதியானது........ கொ டும்புலி கொள்கையானது....... கொ க்கின் பொறுமை விசித்திரமானது....... கொ ம்புமானுக்கு அழகு மயக்கத்தக்கது.....! & தமிழோடு விளையாடு கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

கையசைத்தேன் கண்ணசைத்தாள் (கை)

கை யசைத்தேன் கண்ணசைத்தாள்...... கை விலங்கிட்ட கைதியானேன்........ கை கோர்த்து பேசக்கேட்டேன்........! கை யோடு கை இணையக்கேட்டேன்..... கை  சாத்திட்டு என் கையைப்பிடி....... கை தியாகிறேன் உனக்காகவென்றாள்.....! கை நழுவி போகாமல் இருக்க........ கை சாத்திட சம்மதித்தேன்........ கை ப்பிடி விழாவும் முடிந்தது.........! கை வழி இசைபோல் அவள்பேச....... கை ஞ்ஞானமாகியது என் புத்தி....... கை யோடு கைசேர்த்தாள் என்னவள்.....! & தமிழோடு விளையாடு கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

மறக்க முடியாத ஞாபகம் நீ

ஆயிரம் காதல்..... கவிதைகளை ..... எழுதிவிட்டேன்..... எனக்குள் காதல் ஆலமரமாய்..... விழுதுவிட்டு படர்ந்திருக்கிறது.....! என் மூச்சு காற்று நிற்பதற்குள்...... என் காதலியை கண்டுவிடவேண்டும்..... அவள் விரும்பும் காதல்...... கவிதையொன்றை....... அவளுக்காக எழுத வேண்டும்.....! & கவிப்புயல் இனியவன் கவி நாட்டியரசர் இனியவன்

சமுதாய விழிப்புணர்வு கவிதை

எத்தனையோ...... கடவுளின் உருவங்கள்..... அத்தனையையும் அழகாக..... சிலையாக வடித்துவிட்டான்..... மனிதன்..........! இத்தனை கடவுளை வடித்த....... மனிதனால் ஒரு மனிதனை...... இனங்கான முடியவில்லை....... அவனுக்கொரு சிலையை....... வடிக்க முடியவில்லை.......? & கவிநாட்டியரசர், கவிப்புயல் ^^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ சமுதாய விழிப்புணர்வு கவிதை

என்னவளை கண்டுபிடி.....!

என் மூச்சோடு மூச்சாய்...... இருந்தவளை காணவில்லை.... என் மூச்சு காற்றே..... என்னவளை கண்டுபிடி.....! எப்படி அவளை கண்டுபிடிப்பேன்..... என்று அஞ்சாதே மூச்சே...... இந்த பிரபஞ்சத்தில்....... என்னவளின் மூச்சு கண்ணீரோடு....... கண்ணீரோடு கலந்திருக்கும்....! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்