இடுகைகள்

ஜூன் 22, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் அணுக்கவிதைகள் - 02

உன்னை மறக்க மறதியின் ... உச்ச இடத்துக்கு செல்கிறேன் .... தயவு செய்து அந்த இடத்தை .... நீ தான் காட்டி விடு ....! ------ உன் நினைவுகளின் .... தருகைக்காக .... நீர்க்குமிழிகளை .... பரிசாய் தருகிறேன் ....! ------ கடித்து துப்பிய நகம் நான் .... சந்தோஷ படாதே .... மீண்டும் வளர்வேன் ....! ------ உலகம் ஒரு வட்டம் .... நீ பிரிந்து சென்றாலும் ... என்னிடம் வருவாய் ....! ----- உன் இதய சாவியை ... தந்துவிடு -இனியும் ... என்னால் தாங்க முடியாது ....! ----- காதல் அணுக்கவிதைகள் - 02 கவிப்புயல் இனியவன்

காதல் அணுக்கவிதைகள்

உன் ........ பார்வைக்கு அஞ்சி ... நீ அருகில் வரும்போது ... மறு தெருவுக்கு போகிறேன்...! ------ உன்னை நான் நேரில் ... ரசிப்பதை விட கவிதையில் ... ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...! ------ ஒவ்வொருவனுக்கும் ... அவனவன் காதல் தான் ... ஆயுள் பாசக்கயிறு .....! ------ இதயம் மட்டும் ... வெளியில் இருந்திருந்தால் ... நிச்சயம் நீ அழுதிருப்பாய் ... என்னை ஏற்றிருப்பாய்....! ------ பெண்ணை பற்றி நான் .... கவிதை எழுதியதில்லை ... உன்னை பற்றியே கவிதை ... எழுதுகிறேன் ....! ------ காதல் அணுக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்