உயிர் காக்கும் விவசாயின் உயிர்
உயிர் காக்கும் விவசாயின் உயிர் ------------------------------------------------ ஆண்டவன் படைப்பில் அதிசயப்பிறவி....... உலகுக்கே உணவுகொடுக்கும் விவசாயி........ தன் கையில் சேற்றுடன் சோற்றை உண்பார்..... எம் சோற்றில் ஒருகல் வராமல் காத்திடுவார்.....! ............................ஆளவேண்டிய விவசாயியின்று ............................அடங்கிகிடக்கிறான் வீட்டினிலே ............................கூழைபிசைந்து குடிக்கவழியில்லாமல் ............................குறுகிக்கிடக்கிறான் குடிசையிலே நிலத்தை பண்படுத்தியவன் வாழ்க்கை....... நிலைகுலைந்து போனதெதனால்......... பணத்தை பத்துவட்டிக்கு கொடுக்கும்..... பாழாய்போன பணப்பிணம் தின்னிகளால்....... ..........................ஒட்டு துணியோடு வயலிலே ..........................உச்சிவெயிலில் உலாவிவருவர் ..........................நட்டு நடு ராத்திரியில் காவலிருந்து ..........................அறுவடையை காத்திடுவர் கண்விழித்து பயிருக்கு அடிக்கும் நஞ்சை எதற்காய்.... பாடையில் போகவதற்கு குடிக்கிறார்கள் பயிர்கடனை கொடுக்க வழிதெரியாமல் பாதியிலே உயிரை மாய்க்கிறார்கள...