இடுகைகள்

ஆகஸ்ட் 8, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருமண வாழ்த்து மடல்கள் 01

நண்பனுக்கு திருமண வாழ்த்து மடல் -------- என் .... உயிர் நண்பனுக்கு இன்று .... திருமணநாள் .....! வாழ்க்கையின் அனுபவத்தை ..... அணுஅணுவாய் பங்கேற்ற .... என் இனிய நண்பனுக்கு ..... இன்று திருமண நாள் .....!!! நான் வாழ்த்தாமல் அவனை ..... யார்வாழ்த்தினாலும் அவன் .... திருப்தியடைய மாட்டான் ..... அவனை வாழ்த்தும் உரிமையும் .... கடமையும் எனக்கே உண்டு .....!!! சாத்திரங்கள் படி வாழ்வதை .... காட்டிலும் சாதித்து காட்டும் .... மனிதனாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ..... பஞ்சாங்கப்படி வாழ்வதை காட்டிலும் .... பஞ்ச அங்கங்களோடு வாழ்நாள் .... முழுவதும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .....!!! உறவுகளை அரவணைத்து வாழ்ந்து ..... உற்றாரை உள்ளத்தால் நேசித்து ..... உள்ளன்போடு உன்னதமாய் வாழ ..... உழைத்த உழைப்புக்குள் இன்பமாய் .... உற்ற உயிர் நண்பனை உளமார ..... வாழ்த்துகிறேன் ...........................................!!! பரம்பரைக்கு இரு வாரிசை ...... பார்போற்றும் வகையில் படைத்திடு ..... பட்டறிவோடு திறம்பட வாழ்ந்திடு..... பெற்ற  துணைவியை நேசித்திடு ..... என்றும் உனக்கு உற்ற நண்பனாய் ..... தோள

காதலுக்கு எந்த விதியும் பொருந்தாது .........!!!

இறந்தபின் .... நரகத்துக்கு ..... போகத்தேவையில்லை ..... அன்பாய் பழகிய ..... உறவை பிரித்துப்பார் ..... தினமும் நரகத்தில் .... வாழ்வாய் .........!!! என்னில் தான் தப்பு ..... சிறுவயதில் இருந்து ..... நான் விரும்புவதெல்லாம் .... கிடைக்கவேண்டும் என்று .... ஆசைப்பட்டதுக்கு ...... காதலுக்கு எந்த விதியும் .... பொருந்தாது .........!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்

தெரியாமல் காதலித்தோம் .....

யாரென்று விபரம் .... தெரியாமல் காதலித்தோம் ..... விபரம் தெரிந்தபின் .... பிரிந்தோம் ......!!! ஒருவரை பிரிந்தபின் .... தனியே இருந்து அழும்... வலியிருக்கிறதே..... மரணவலியை சுமக்கும் .... வலிக்கு ஒப்பானது .....!!! நான் .... தனியே இருந்து அழும்.... வலியை ஒருமுறையேனும் .... பார்த்துவிடாதே ......!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன் 

கிராமத்து காதலில் அழகோ அழகு

நீண்ட நாட்களின் .... பின் ஊருக்கு போனேன் .... என் காதல் பட்டு .... போனதுபோல்.... நாங்கள் கூடி கதைத்த .... மரமும் பட்டு போயிருந்தது ....!!! என்றாலும் ..... நாம் இருவரும் கஸ்ரப்பட்டு .... மரத்தில் எழுதிய எங்கள் .... இணைந்த பெயர் மட்டும் ..... அழியாமல் இருந்தது .... கிராமத்து காதலில் இது .... அழகோ அழகு .....!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்

அழுதவலி வலி புரியவில்லை .....

பிறந்தவுடன் ..... அழுங்குழந்தையே.... உயிர் வாழும் .....!!! இப்போதுதான் .... புரிகிறது ..... உன்னை பிரியும்போது .... அழுவதற்கு ..... ஒத்திகை பார்த்திருக்கிறேன் .....!!! பிறந்தபோது .... அழுதவலி வலி புரியவில்லை ..... பிரிந்தபோது .... அழுதவலி வலி முடிவதில்லை ....!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரலை  துடைத்தாலும் .... உரலில் ஓரத்தில் ..... துவல்கள் ஒட்டி இருப்பது .... போலவே ...... முதல் காதல் நினைவும் .... இதயத்தின் ஒரு ஓரத்தில் ..... ஒட்டியே இருக்கும் .....!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்

பெண்களை மதிக்க‌ ஆசைப்படு.....!

அதிகாலையில் துயில் எழுவதற்கு ஆசைப்படு.....! துயில் எழுந்தபின் குளிக்க‌ ஆசைப்படு.........! குளித்தபின் காபி குடிக்க‌ ...... ஆசைப்படு....! அழகாக‌ உடையணிய‌ ஆசைப்படு...! உடுத்த‌ உடையை அசுத்தமாக்காமல் ஆசைப்படு...! நிற்கும் பஸ்சில் ஏற‌ ஆசைப்படு....! நேரம் தவராமல் ...... வேலை செய்ய‌ ஆசைப்படு .....! மெதுவாக‌ கதைக்க‌ ஆசைப்படு ....! மென்மையாக‌ கதைக்க‌ ஆசைப்படு ...! மெத்தன‌ போக்கை நீக்க‌ ஆசைப்படு...! பெண்களை மதிக்க‌ ஆசைப்படு.....! ^ நல்லவற்றுக்கு ஆசைப்படு கவிப்புயல் இனியவன்