இடுகைகள்

மே 1, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொழிலாளர் தினம் ......!!!

உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது .... உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது .... உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை .... ஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை .... உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்....!!! களைப்பில் உழைப்பின் முதுகு .... கேள்விக்குறியாய் வளைந்தது .... சளித்து ,வெறுத்து ,கொண்டனர் .... அடக்கப்பட்டனர், ஒதுக்கபட்டனர் .... திருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....!!! தூங்கியவர்கள்  விழித்து கொண்டனர் .... திரட்டி கொண்டனர் தம்பலத்தை ..... நுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் .... நிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் .... வெடித்தது தொழிலாளர் போராட்டம் .....!!! நோக்கம் நிறைவேறும்வரை  ...... உக்கிரமானது சர்வதேசப் புரட்சி...... உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் .... உழைக்கும் நேரம் எட்டுமணியாக ..... உரிமையை போராடி வென்றனர்.....!!! போராடி வென்ற தொழிலாளர் தினம் ..... பேச்சளவில் இன்று சட்டத்திலும் ... சிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ... மனத்தால் உழைப்பின் புனிதத்தை ... உணரும் நாள் என்று உதயமாகிறதோ .... அன்றே உண்மைதொழிலாளர் தினம் ......!!!