திங்கள், 20 ஜூலை, 2015

நினைவுகள் இறக்காது உயிரே .....!!!

இத்தனை நாள் வரையும்....
எத்தனையோ உறவுகள் ...
என்னை தூக்கி எறிந்தபோது ....
இதயம் வலிக்கவில்லை  ....!!!

ஒரு நொடியில் என்னை ....
மறுத்துவிட்டாய் தூக்கி ....
எறிந்து விட்டாய் ....
வலிக்கவில்லை இதயம் ....
இறந்துகொண்டிருக்கிறது ....!!!

என்றோ ஒருநாள் .....
என்னை திரும்பி பார்ப்பாய் ....
என் உடல் வலுவிழந்தாலும் ....
நினைவுகள் இறக்காது உயிரே .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

இனிய வரவேற்பு கவிதை

னிய 
னிமையான 
ன்பமான 
ல்லத்தில் 
றையருள்மிக்க 
ல்லறவாழ்க்கை 
ன்றும் என்றும் 
றையருளால் 
டையூறுகள் நீங்கி 
ன்பமே 
டைவிடாமல் கிடைக்க 
ந்தநாள் மட்டுமல்ல 
தயத்துடிப்பு உள்ளவரை 
ன்பலோகத்தில் வாழ 
ந்த 
இனியவனில் 
தயம் கனிந்த 
னிய வணக்கம் 
யன்றவரை அயலவரையும்
ன்பமாய் வைத்திருங்கள் 
றைவன் விரும்புவதும் 
வ்வுலகில் எல்லோரும் 
ன்பமாய் வாழவைக்கும் 
இயல்புடைய மனிதனை தான் ....!!!

தனிமை இனிக்கிறது ....!!!

காதலே உலகம் ....
வாழ்ந்துவிடாதீர் ....
கடலால் சூழப்பட்ட ....
தீவுப்போல்   ....
கண்ணீரால் சூழப்பட்ட .....
இதயமாக வாழ்வீர்கள்......!!!

தனிமையில் இருந்து ....
சிந்தித்தேன் காதல் இனித்தது ....
காதலோடு இருந்து சிந்தித்தேன் ...
தனிமை இனிக்கிறது ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

அழுவதற்கு நாதியில்லை ...

மீண்டும் 
என்னை காதலிக்காதே .....
அழுவதற்கு  நாதியில்லை ...
கண்ணீரும் இல்லை ...!!!

உன் 
நினைவுகளின் ஈட்டிகள் 
தினமும் இதயத்தை சல்லடை ...
போடுகிறது - அப்போதும் ...
என் இதயம் சிரித்தபடியே ...
துடிக்கிறது ......!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

ஞாயிறு, 19 ஜூலை, 2015

காதல் சாரதி

உயிரே சற்று தூங்கு ....
அப்போதுதான் உன் கண்ணில் ...
இருந்து தப்பிக்கமுடியும் ....!!!

இன்பமாய் பயணித்த ....
காதல் படகில் எதற்கு ...
நடுகடலில்  என்னை ....
தள்ளிவிட்டாய் ....?

நான்
வேகமாக ஓடும் ....
காதல் சாரதி .....
நீ - சிகப்பு நிற சைகை ...
விளக்கு .....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;815

இதயமே காதல் தண்டனை ....!!!

வலையில் சிக்கிய மீன் ...
தப்புவதற்கு வாய்ப்பு உண்டு ...
காதலில் சிக்கிய எவரும் ....
தப்பியதே இல்லை .....!!!


முகத்தில் என் உருவம் ....
இதயத்தில் உன் உருவம் ...
தாங்க முடியாமல்....
தவிக்கிறது இதயம் .....!!!


நினைவுகளை தரும்போது ....
இன்புற என் இதயமே ...
துன்பத்தை தரும்போது ....
தங்கிகொள் - அது தான் 
காதலின் தண்டனை ....!!!


+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;814

காயம் வந்துவிட்டதே .....!!!

காதல் ...
செய்ய முன் இரத்தம் ...
உடலில் ஓடியது ....!
இப்போ கண்ணீர் ...
ஓடுகிறது .....!!!

காதல் 
தண்ணீரால் ....
அபிஷேகம் செய்வாயென ...
எதிர்பார்த்தேன் ....
வெந்நீரால் அபிஷேகம்....
செய்கிறாய் .....!!!

கண்ணால் காதல் .....
வருவதே வழமை ....
உன் கண்ணால் ....
காயம் வந்துவிட்டதே .....!!!


+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;813

வியாழன், 16 ஜூலை, 2015

இல்லறம் ஒரு கோயில் ....

இல்லறம் ஒரு கோயில் ....
அம்மா மூல கடவுள் ....
அப்பா பிரதான அச்சகர் ....
பிள்ளைகள் தொண்டர்கள் ...
உறவினர்கள் உபயகாரர்கள் ....!!!

மூலகடவுள் காளியாககூடாது ....
அச்சகர் தண்டகர்கள் ஆகக்கூடாது ....
தொண்டர்கள் தொல்லைகாரராக கூடாது ....
உபயகாரர் உபத்திரகாரர் ஆகிடகூடாது ....
ஒரு குடும்பத்துக்குள் இரு குடும்பம் ...
ஆழக்கூடாது.....!!!
+
கே இனியவன்
இல்லறக்கவிதைகள்

கே இனியவன்- இல்லறக்கவிதைகள்

இரு
வேறுபட்ட இல்லத்தில் ....
பிறந்து ஒரு வேறுபாடும் ....
தெரியாமல் வாழ்வது ...
நல் இல்லறம் ....!!!

ஆயிரம் கிளைநதிகள் ....
சங்கமிப்பது சமுத்திரத்தில் ....
ஆயிரம் எண்ணங்கள் ....
சங்கமிப்பது , வாழ்வது....
நல் இல்லறம் ....!!!
+
கே இனியவன்
இல்லறக்கவிதைகள் 

செவ்வாய், 14 ஜூலை, 2015

கவிதையால் அழுகிறேன் ....!!!

கவிதையால் உன்னை ....
அழவைக்கவில்லை....
உன்னை காதலித்ததால் ...
கவிதையால் அழுகிறேன் ....!!!

எம்
விடுதலை பேராட்டத்தின் ....
வடுபோல் தான் நீயும் ...
அழியவே மாட்டாய் ....!!!

நீ
நெருப்பு -என்னை
தீபமாக்கவதும் ....
சாம்பலாக்குவது ....
உன் கையில் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;812


காதல் தூவானம்

இரவு புல்மேல் பனி ....
நான் அழுத்த கண்ணீர் ....
துளிகள் ...
இரவில் தானே நீ
நினைவுகளையும் ...
தந்தாய் .....!!!

உன்னை வர்ணிக்க ...
வார்த்தைகளை தேடினேன் ...
கண்ணீராய் வருகிறது ...!!!

காதல் தூவானம் அழகு ....
எனக்கு காதல் புயல் ...
வீசிவிட்டது ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;811

காதல் தந்தவளே ....

எனக்கு ....
காதல் தந்தவளே ....
இன்றும் இருப்பாய்
இருக்கிறது - நம் காதல் ....!!!

காதல்
கடைதான் மூடபட்டு ...
இருக்கிறது .....
வெற்றிடமாகவில்லை ...
நம் காதல் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

பிறருக்கு தெரியாமல் ....

உன்னிடம் காதலை ....
பெற்றுகொண்டதோடு ....
பிறருக்கு தெரியாமல் ....
எப்படி அழுவதென்பதையும்....
கற்று கொண்டேன் ....!!!

வளைந்து வளைந்து ...
ஓடாத ஆற்றில் அழகில்லை ....
வலித்து வலித்து ....
வளராத காதலிலும் ....
அழகில்லை .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

உன் பிரிவின் நொடியில் ...

ஒரு நொடியில் ...
மலரும் காதல் தான் ...
ஒரு நொடியில் ...
வாடியும் விடுகிறது ......!!!

வேகப்போகும் என் ....
உடல் படும் வேதனையை ...
ஒத்திகை
பார்த்துகொண்டிருக்கிறேன்.....
உன் பிரிவின் நொடியில் ...
கணப்பொழுதிலிருந்து....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

மரணமானேன் ....!!!

உன்
பார்வையால் ...
ஜனனம் ஆனேன் .....
வார்த்தையால் ....
மரணமானேன் ....!!!

காதல்
பார்வையில் ...
பிறந்து ....
வார்த்தையால் ....
இறக்கிறது .......!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

காதலில் தோற்ற ....

காதலில் தோற்ற ....
ஒவ்வொரு இதயமும் ....
வலித்துக்கொண்டு ...
துடித்துகொண்டிருக்கும் .....!!!

காதலில்லாத ....
ஒவ்வொரு இதயமும் ...
வலிக்காக ........
துடித்து கொண்டிருக்கும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

சிறப்புடைய இடுகை

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநா...