இடுகைகள்

நவம்பர் 25, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிஞன் ஆனவன்.....!!!

இவன் .... காதல் தோல்வியால் ... கவிஞனாக வில்லை ... எல்லாவற்றிலும் ... காதல்  கொண்டதால் ... கவிஞன் ஆனவன்.....!!! & கவிப்புயல் இனியவன் இதுதான் உண்மை 

நான் பறித்த கடைசி பூ

நான் பறித்த கடைசி பூ கவிப்புயல் இனியவன் 2013 ----------- சாமிக்கு பூ பறித்து .. வைப்பதை பழக்கமாக கொண்டவன் .. சட்டென்று ஒருநாள்-பூவை பறித்த என்மனதில் ஒரு -சஞ்சலம் மரத்தை பார்த்தேன் -அதன் அழுகையை மலரை பார்த்தேன் -அதன் ஏக்கத்தை தாயையும் பிள்ளையையும் பிரித்த சோகம் இதுதான் நான் பறித்த கடைசி பூ

அழுவதற்காக பிறந்தவன்

உன் ..... மடியில் உறங்க .... அனுமதி கொடு .... இதயத்தின் சுமையை .... உன்னோடு பகிர்ந்து .... கொள்கிறேன் ...... எனக்காக நீ ..... அழுதுவிடாதே....... அழுவதற்காக...... பிறந்தவன் நானாகவே .... இருந்து விடுகிறேன் .......!!! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

எங்கு கற்றுக்கொண்டாய் ......

நீ என் இதயத்துக்குள் .... புகுந்தபோதும் .... விலகிய போதும் ... மெதுவாக வந்து ....... மெதுவாக விலகிவிட்டாயே .... எந்த வித வலியுமில்லாமல்.... எங்கு கற்றுக்கொண்டாய் ...... இந்த கலையை ..? & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை 

காதல் பைத்தியம்

காதல் பைத்தியம் ------- காதலரின் பெயரை சுவரில் மற்றும் கையில் எழுதுபவர்கள் ..! காதல் முட்டாள்கள் ------- காதலருடன் சண்டையிட்டபின் காயங்களை ஏற்படுத்துபவர்கள் தனக்கு தானே கையை வெட்டுதல் .மற்றும் சூடு வைத்தல்..! காதல் கோழைகள் -------- காதலில் தோற்றதும் தற்கொலை செய்பவர்கள் ...! காதல் வெறியன் -------- காதலின் பெயரில் ஏமாற்றி கற்பை சூரையாடுபவன் ...! காதல் கொலைகாரன் -------- காதல் நிறைவேற்றவில்லை என்றவுடன் பழிவாங்க துடிப்பவன் ...! காதல் பயங்கரவாதி --------- காதலியின் முகத்தில் அசிட் வீசுபவனும் கொலைசெய்பவனும்...! & கவிப்புயல் இனியவன் 

தனிமை கொடுமையல்ல இனிமை ...!!!

தனிமை கொடுமையல்ல இனிமை ...!!! கவிப்புயல் இனியவன் 2013 --------- தனிமை... எல்லோருக்கும் கிடைக்காத தவம்...! அதுவே ஒரு சிலருக்கு வரம்..! கவிதைகளின் .... கதைகளின் பிறப்பிடம்...! கனவுகளின் உறைவிடம்..! கடந்தகாலத்தை மீள்படிக்க உதவும் நாற்குறிப்பேடு..! என்னை நானே உற்றுப்பார்த்திட வழி செய்யும் கண்ணாடி...! மெளனத்தின் வழி பலநூறு கதை சொல்லும் கருவூலம்..! காதடைக்கும் இரைச்சல்விடுத்து இதம் சேர்க்கும் தியானபீடம்...! இது………. எல்லாம் இருந்தும்…. இளைப்பாற சில பொழுதுகள் தனிமை சேர்பவன் மனநிலை....!! தனிமை கொடுமையல்ல இனிமை ...!!! & கவிப்புயல் இனியவன்