புதன், 4 நவம்பர், 2015

நான் கரையோர நண்டு

நான் 
கரையோர நண்டு .....
நீ எழுந்து விழும் அலை ....
மீண்டும் உள்ளே இழு ...!!!

காதல் படகில் தனியே ....
பயணம் செய்து என்ன ...?
சாதிக்கபோகிறாய்....?

பட்டபகலில் ....
நிலாபாடல் கேட்கிறாய் ....
நடு இரவில் சூரிய உதயம் ....
பார்க்கணும் என்கிறாய் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 890

என்னை காப்பாற்று ....!!!

துடுப்பு 
இழந்து தவிக்கிறேன் ....
என்னை காப்பாற்று ....!!!

காதல் கீதம் பாட ....
சொல்லும் நீயே ....
காதலை தர மறுக்கிறாய் ....!!!

வலிகளால் வலை பின்னி ....
வழிதெரியாமல் தடுமாறும் ...
காதல் மன்னன் நான் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 889

நீ அருகில் வேண்டாம் ....!!!

காதலுக்கு தனி கல்லறை ....
அதில் முதல் அங்கத்தவன் ....
நான் தான் நீ அருகில் ....
வேண்டாம் ....!!!

எதற்காக தூண்டிலை ....
போட்டு காத்திருகிறாய்...?
நான் ஏற்கனவே இறந்த மீன் ....!!!

எப்போதும் என் முகவரி 
நீ தான் - தயங்காதே 
அப்போதே என் முகவரி 
தொலைந்து விட்டது .....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 888

புரியாமல் காதலித்து விட்டதே ....!!!

உன்னை காதலித்த ...
இதயத்தை பார்த்து ....
கவலை படுகிறேன் ....
உன் காதல் புரியாமல் ....
காதலித்து விட்டதே ....!!!

காதல் 
நிறைகுடத்தை ....
குறைகுடமாக்கும் ....
எனக்கு சரிப்பட்டது ....!!!

உன் கண் தான் என் ....
கவிதை எழுத்து கருவி ....
என்னை நன்றாக பார் ....
கவிதை அருவியாய் வரும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 887

என்னை இழப்பேன் ....!!!

நான் வெறும் நூல் ....
நீ தான் காற்றாடி ....
அசையும் இடமெல்லாம் ....
என்னை இழப்பேன் ....!!!

இதயத்தில்
முள் தோட்டம் .....
விளைந்தது காதல் ....
வந்தது முள் வலி ....!!!

கஸ்ரப்பட்டு காதல் மழை ....
பெய்கிறேன் -நீயோ ....
குடைபிடித்து தடுக்கிறாய்...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 886

செவ்வாய், 3 நவம்பர், 2015

கவிதையால் காதல் செய்கிறேன் 10

ஆசையை குறை குறை .....
என்கிறார் என் குருஜி ....
குறைத்து கொள்ளப்போகிறேன் ....
உன் மீது இருக்கும் ஆசையை ...
குறைத்து பேராசைப்படபோகிறேன்....!!!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ....
சொன்னது உண்மைதான் .....
உன்னை  நான் கண்டதில்லை  ....
என் அகத்தில் இருக்கும் உன்னை ...
நினைத்துதானே காதல் செய்கிறேன் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 10
கவிப்புயல் இனியவன்

கவிதையால் காதல் செய்கிறேன் 09

நான் மருத்துவனாக ....
மாற ஆசைப்படுகிறேன் ....
இதயத்துக்குள் உன்னை ....
எப்படி அடைப்பது என்று .....
கண்டறிய போகிறேன்....!!!

எனக்கு எந்த பூவையும் ....
பிடிக்கவில்லை ....
உன்னை காணும்வரை ....
எதையும் விரும்ப போவதில்லை ....
எதை விரும்பினாலும் -உன் 
மீதிருக்கும் காதல் குறைந்து ....
விடுமோ என்ற பயம் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 09
கவிப்புயல் இனியவன்

கவிதையால் காதல் செய்கிறேன் 08

இந்த நிமிடம் வரை ....
உனக்கே தெரியாமல் ....
உன்னை காதலிக்கிறேன் ....
என்றோ ஒருநாள் நிச்சயம் ....
காதலிப்பாய் .....!!!

சூரியனின் ஒளியில் ....
பூக்கள் மகிழும் .....
என் சூரியனும் -நீ
சந்திரனும் -நீ
இரவு பகல் எல்லாம் - நீ

+
கவிதையால் காதல் செய்கிறேன் 08
கவிப்புயல் இனியவன்

கவிதையால் காதல் செய்கிறேன் 07

சற்று முன் வீதியில் ....
உன்னைப்போல் ஒருத்தி ....
சென்றிருப்பாளோ ...?
என்று சந்தேகப்பட்டேன் ....
இருக்காது இருக்காது ....
என்னை நீ பார்க்காமல் ....
போயிருக்க மாட்டாய் ....!!!

எப்போது உயிரே -நீ
திருடியாவாய் -என்
இதயம் ஏங்கிய படியே ....
காத்திருகிறது ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 07
கவிப்புயல் இனியவன்

கவிதையால் காதல் செய்கிறேன் 06

உயிரே உனக்கு ....
என்ன நடந்தது ....?
பிரபஞ்ச்சத்தில் ....
சிலநிமிடம் காற்றே ....
வீசவில்லை .....?
அப்போ நீ மூச்சு ....
விடவில்லை என்றுதானே ...
அர்த்தம் .....!!!

உயிரே உன் காதலை ....
சொல்லமுன் என்னை விட்டு ....
பிரிந்து விடாதே .....
என்னிடம் காற்றே இராது .....
நீ இல்லாத போது ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 06
கவிப்புயல் இனியவன்

திங்கள், 2 நவம்பர், 2015

கவிதையால் காதல் செய்கிறேன் 05

யார் ....
மனதில் யாரோ ...?
நிச்சயம் சொல்வேன் ....
என் மனதில் உன்னை ...
தவிர யாரும் இல்லை .....
உன் காதலை தவிர ....
வேறெதுவும் எனக்கு ...
வேண்டாம் .....!!!

திருமணம் நடக்காமல் ....
நான் இறக்க தயார் ....
உன்னை காதலிக்காமல் ....
நான் இறக்க தயாரில்லை ...
என் மூச்சு உன் பேச்சு ...!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 05
கவிப்புயல் இனியவன்கவிதையால் காதல் செய்கிறேன் 04

என்னிடம் அழகில்லை ....
ஏதோ ஒருவழியால்....
ஆரோக்கியமாய் இருக்கிறேன் .....
ஆனால் என்னிடம் இருக்கும் ....
காதல் இந்த உலகில்- நீ
யாரிடமும் பார்க்கமுடியாது ....!!!

நான்
பிறந்ததுக்கு தகுதியாவன் .....
எப்போது எனில் -நீ என்னை ...
காதலிக்கும் போதுதான் ....
உன்னிடமும் காதல் உண்டு .....
என்னைவிட நீ காதலில் அழகு ....
வா உயிரே புதியதோர் காதல் ...
செய்வோம் ......!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 04
கவிப்புயல் இனியவன்

கவிதையால் காதல் செய்கிறேன் 03

என்னவளை எப்போது ....
பார்க்கபோகிறேனோ....?
என்னவள் எப்போது என்னை ....
காதலிக்கிறாளோ ....?
அன்று என் மறு பிறப்பு .....!!!

ஒரே ஒரு சின்ன ஆசை .....
என் உயிர் இருக்கும் காலத்தில் ....
என்னவளை காதலிக்காவிட்டாலும் ....
ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் .....
என்னவளின் காந்த கண்கள் ...
என்மீது பட்டு தெரிக்கவேண்டும் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 03
கவிப்புயல் இனியவன் 

கவிதையால் காதல் செய்கிறேன் 02

என்னவள் ....
ஒவ்வொருமுறையும் ....
மூச்சு விடும்போதும் ...
மூச்சு காற்று தென்றலாய் ....
என் மேனியை தழுவுகிறது ....!!!

உயிரே ....
பயப்பிடாமல் என்னை ...
காதலி என்னிடம் எந்த ...
கெட்ட பழக்கமும் இல்லை ...
காதலை தவிர வேறு எதுவும் ....
என்னிடம் இல்லை ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 

கவிதையால் காதல் செய்கிறேன்

ஏய் வான தேவதைகளே ....
மறைந்து விடுங்கள் ....
என் தேவதை வருகிறாள் .....!!!

ஏய் விண் மீன்களே .....
நீங்கள் கண்சிமிட்டுவதை ....
நிறுத்தி விடுங்கள் ....
என் கண் அழகி வருகிறாள் ....!!!

ஏய் வண்ணாத்தி பூச்சிகளே ....
வர்ண ஜாலம் காட்டுவதை ....
நிறுத்திவிடுங்கள் .....
என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன்நானும் பனித்துளியும் ....

நானும் பனித்துளியும் ....
ஒன்றுதான் இரவில் ....
அழுதுகொண்டிருப்பதில் ....!!!

நீ
போவது வலியில்லை....
போய் என்ன ....
செய்யபோகிறாய் ....
என்பதுதான் வலி ....!!!

எனக்கு உனக்கும்
அகண்ட இடைவெளி ...
காதலால் தோன்றியது ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 885

திருமண அழைப்பிதலில் ....

உன்னை பார்த்ததை விட ...
உன்னை பற்றி கேட்டதே ....
அதிகம் .....
என் காதல் காதால் ....
தோன்றியது ....!!!

எனக்கு உயிர் இருக்கும் ....
வரைக்கும் நீ இருப்பாய் ....
நீ போனாலும் காதல் ....
இருக்கும் .....!!!

உன்
காதலின் ஆழத்தை ....
திருமண அழைப்பிதலில் ....
அழகாக போட்டிருந்தாய் .....
பொருத்தமான் பெயருடன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 884

முள்ளோடு ராஜா ....!!!

நீ எப்படி வந்தாய் ....?
புரியவில்லை எனக்கு ....
எப்படி சென்றாய் ....
புரிந்துகொண்டேன் ....
கண்ணீர் வந்தபோது ....!!!

காதலுக்கு முன் ....
உறவுகளுக்கு ....
ரோஜாவோடு ராஜா ....
காதலின் பின் ....
உறவுகளுக்கு ....
முள்ளோடு ராஜா ....!!!

காதலை நீ சொல் ....
காதலிப்பது எப்படி ...?
நான் சொல்கிறேன் ....
மறக்காமல் - பிரிவது ....
எப்படி என்றும் சொல் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 883

நீ இல்லையே....!!!

எனக்கு நரகம் வராது ...
காதல் வந்துவிட்டதே ....
எனக்கு சொர்க்கமும் ...
வராது நீ  இல்லையே....!!!

என்
புகைபடத்தை ....
தந்துவிட்டாய் .....
இதயம் புகைக்கவில்லை ....!!!

மனிதனின் தோற்றமும் ....
முடிவும் கண்ணீருடன் ....
தொடங்க காரணமே ....
காதல் தான் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 882

இதயம் தாங்குகிறது ....!!!

உன்னை
காதலிப்பதும் ....
என்னை
காயப்படுத்துவதும் ....
ஒன்றுதான் .....!!!

என் நினைவுகள் ...
உனக்கு தூசிபோல் .....
நான் அலைந்துகொண்டு ....
இருக்கிறேன் ....!!!

ஒன்றை
நினைவில் வை ....
உன்னை காதலிப்பதால் ....
என் உயிர் துடிக்கிறது ...
நீ காயப்படுத்தினாலும்
இதயம் தாங்குகிறது ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 881

சிறப்புடைய இடுகை

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநா...