இடுகைகள்

ஏப்ரல் 20, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிகரட் - ஹைக்கூ கவிதை

சடலத்துக்கு தீ மூட்ட உயிருள்ளவன் ஒத்திகை பார்க்கிறான் சிகரட் ^ ஆறு அங்குல உயரம் ஆறடி மனிதனையே கொல்கிறது சிகரட் ^ கே இனியவன் ஹைக்கூ கவிதை

அதிசயக்குழந்தை - ஆசை

அதிசயக்குழந்தை - ஆசை ---------- உன் ஆசை என்ன என்று கேட்டேன் ... அதிசயக்குழந்தையிடம்.....? ஆசையில்லாமல் இருக்கவே ... ஆசை என்றான் ஒரே வரியில் ....!!! என்னப்பா சொல்கிறாய் ....? ஆமா ஆசானே .....!!! ஆசையே அனைத்து துன்பத்துக்கும் .... மூல காரணி ......!!! நிறைவேறாத ஆசையின் வெளிப்பாடே .... கோபம் ,,,,,,,,,,,,!!! கோபத்தின் வெளிப்பாடே .... கொடூரம் ...........!!! கோபத்தை குறையுங்கள் ..... என்பது தவறு - ஆசையை .... குறையுங்கள் என்பதே சரியானது .....!!! பெண் ஆசை .... நடத்தையை கெடுக்கும் ...... மண் ஆசை ..... நாட்டை கெடுக்கும் ...... பொன் ஆசை ...... பெண்ணையே கெடுக்கும் .......!!! ஆசையை குறைப்பது எளிதல்ல .... ஆசையை வரிசைப்படுத்துங்கள் .... அந்த வரிசையில் இயலுமையை .... பாருங்கள் நிறைவேறக்கூடிய .... அவசியமான ஆசைக்கு ஆசைப்படுங்கள் .....!!! ^ அதிசயக்குழந்தை வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் தொடர் - 12

கே இனியவனின் 1000 வது கஸல்

நீ சொன்ன ஒரு வார்த்தை....  ஆயிரம் கஸல் கவிதையை ... தோற்றிவிட்டது ....!!! சுதந்திர பறவைகளை ... திறந்த சிறைச்சாலைக்குள் .... அடைத்துவிடும் .... காதல் ......!!! இதயங்களை .... இணைக்கும் .... சங்கிலி -காதல் ... துருப்பிடிக்காமல் .... பார்த்துக்கொள் .....!!! முள் மேல் பூ அழகானது ..... என் இதயத்தில் பூத்த .... முள் பூ நீ ................!!!! நீ காதலோடு...... விளையாட வில்லை .... என் மரணத்தோடு ..... விளையாடுகிறாய் ......!!! ^ இது எனது 1000 கஸல் இத்தனை காலமும் ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் உளமான நன்றி ^ அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன் ^ " முள்ளில் மலரும் பூக்கள் "         கஸல் கவிதை