இடுகைகள்

ஜனவரி 20, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேச்சு - மூச்சு

பேச்சு - மூச்சு ---------------- தேர்தல் கால அதிரடி பேச்சு தெரு தெருவாய் அலைகிறாய் தலைவர் கட்சியின் வெற்றியே அவர் மூச்சு ^ கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ

கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ

இழுத்து கொன்றது உன் பார்வை விழித்து படித்து கண்டதொன்றுமில்லை இழந்து விட்டேன் பள்ளி தேர்வை ^ கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ

கவிதை எழுதவில்லை ....!!!

பொழுது போக்குக்கும் .... கவிதை எழுதவில்லை .... பொழுதை போக்கவும் .... கவிதை எழுதவில்லை ....!!! கவிதை .... உணர்வுகளின் உச்சம் ... உன்னை என்னவாக ... நினைக்கிறேனோ .... அதுவாக எழுதும் ... மனக்கண்ணாடி ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

உன் மீது காதல் தொடரும்

கத்தியால் கொலை ... செய்தவன் குற்றவாளி ... என்றால் -கண்ணால் ... என்னை கொலை செய்த .... நீ யார் .....? காதலின் பிறப்பிடம் - கண் ..... காதலின் .... இறப்பிடம் - கண் .. என் கண் மூடுவரை .... உன் மீது காதல் தொடரும் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

என்னை கொல்லாதே ....!!!

பூவை போல் மென்மையானவளே.... பூவைப்போல் மௌனமாய் .... என்னை கொல்லாதே ....!!! அழகிய பூவை நீதான் கொடுத்தாய்  .... அழகாக வைத்திருப்பதும் .... உத்திர வைப்பதும் ... உன்னிடம் தான் இருக்கிறது ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கவிதை. இல்லையென்றால்..?

கண்ணீர் ஒன்று ... இல்லையென்றால் .... காதலின் வலியை.... உனக்கு எப்படி ... தெரிவிப்பேன் ...? கவிதை..... இல்லையென்றால் ... என் கவலைகளை .... உனக்கு எப்படி ... எடுத்துரைப்பேன் ...? ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

மின் மினிக் கவிதைகள்

நீ - தந்த வலிகளை மறக்கவே .... தினமும்...... கவிதை எழுதுகிறேன் .... கவிதையின் வரிகள் ... கண்ணீர் விடுகின்றன .... பரவாயில்லை .... கவிதையே என்னை .... வாழவைத்துக்கொண்டு ... இருக்கிறது ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்