இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சரயோகம்

 சரயோகம்....  உடலுக்கு ஆலய... தரிசனத்துக்கு....  நிகரானது....... !!! உயிருக்கு  இறை  தரிசனத்துக்கு.....  நிகரானது....... !!! @ கவிப்புயல் இனியவன் 

யோகா கவிதைகள்

  செய்யாதே செய்யாதே  ............ வலது நாடி ஓடும் போது..! திருமணம் செய்யாதே...  திருமணபேச்சும் செய்யாதே... வேலைக்கு ஆளை அமர்த்தாதே....  சமாதானம் பேச செல்லாதே...  சூரியநாடி சுடும் நாடி..  அனைத்தும்..  கெட்டுவிடும்...... !!! @ கவிப்புயல் இனியவன்  யோகா கவிதை 

வேண்டாம் வேண்டாம்

  வேண்டாம் வேண்டாம்  ......... இடது நாசி ஓடும் போது....  மருத்துவம் செய்ய வேண்டாம்...  மருந்து உண்ண வேண்டாம்...  ஆசீர்வாதம் பெற வேண்டாம்...  உணவு உண்ண வேண்டாம்....  உறக்கம் செய்ய வேண்டாம்...  அதிகாரியை சந்திக்க வேண்டாம்....  @ கவிப்புயல் இனியவன் 

கவிபுயலின் போன்சாய் கவிதை

  போன்சாய் என்பது ஜப்பான் மற்றும் சீனாவில் மரம் வளர்க்கும் முறையாகும். பெரிய மரங்களை சிறிய தொட்டிக்குள் வளர்க்கும் முறையாகும். ஆலமரம் கூட அப்படி வளர்க்கப்படுகிறது. அந்த எண்ணக்கருவை கொண்டு அமைக்கப்படும் ஒருவகை ஹைக்கூவே போன்சாய் கவிதை ஆகும். எனினும் ஹைக்கூவுக்கும் போன்சாய் ஹைக்கூவுக்கும் அடியேன் கூறும் வேறுபாடுகள்.  1) ஹைக்கூவிற்கு ஒரு மரபு உண்டு. ஓரடி ஈரடி, ஈற்றடி, என்ற மரபு உண்டு. ஆனால் போன்சாய்க்கு அப்படி இல்லை. ஆனால் முடிவு திருப்பமாக அமையும்.  2) ஹைக்கூவில் நகைச்சுவையாக அமைந்தால் அது சென்றியு ஆகிவிடும். இங்கு சமூக விழிப்புணர்வு, நகைச்சுவை எல்லாம். ஒன்றாகவே கருதப்படும்.  3) ஹைக்கூவில் மொழிக்கலப்பு ஏற்பதில்லை. இங்கு அது தவறில்லை.  இவை தவிர வேறுபாடு இருப்பின் நீங்கள் கூறுங்கள் நானும் அறிய விரும்புகிறேன்.  .....  கவிஞன் நிகழ்காலத்தை படம் போட்டு காட்டுபவன். அதற்கேப்ப  தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப போன்சாய் அமைத்துள்ளேன்.  ......  1) உலகமே       வைத்தியசாலை ஆக்கியது        கொரோனா  .......  2) காற்றுக்கு என்ன வேலி       யார் சொன்னது        முகக்கவசம்  ......  3) குற்றம் செய்யாதவருக்கும்.    

கவிதைக்கும் கவிதை நீ

 வியாழன், 17 நவம்பர், 2016 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிஞன் (கவிப்புயல்)..... அறிவியலுக்கும் கவிதை..... அரசியலுக்கும் கவிதை..... அன்புக்கும் கவிதை..... அம்மாவுக்கும் கவிதை..... காதலுக்கும் கவிதை..... கல்விக்கும் கவிதை..... கடவுளுக்கும் கவிதை..... கவிதைக்கும் கவிதை..... பொல்லாதவருக்கும் கவிதை..... பொருளாதாரத்துக்கும் கவிதை..... பொன்னுக்கும் கவிதை..... பொம்மைக்கும் கவிதை..... எழுதுகிறாய் நீ கவிதை , கவிதை , கவிதை..... உன் திறமைக்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்குமானால்  "வைரமுத்து, வாலி " எல்லோரையும் தள்ளியிருப்பாய் உன் பின்னே..... கவிதையை வாசித்துவிட்டு, எப்படித்தான் இதை எழுதுகிறார்களோ?..... என ஒருவகையான ஆச்சரியம் கலந்த ஏக்கத்துடன் பார்த்த நானும் அரைக்(1/2) கவிஞனானது உன் கவிதையை வாசித்து வாசித்துத் தான். போதாது உனக்குக் கவிப்புயல் பட்டம்..... தொடரட்டும் கவிதைக்கும் தமிழுக்கும் உனது சேவை..... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஆ.இராஜ்மோகன். ஆ. இராஜ்மோகன். நேற்று, 05:21 AM ·  16.11.2016

யோகா கவிதை

 செய்யாதே செய்யாதே  ............ வலது நாடி ஓடும் போது..! திருமணம் செய்யாதே...  திருமணபேச்சும் செய்யாதே... வேலைக்கு ஆளை அமர்த்தாதே....  சமாதானம் பேச செல்லாதே...  சூரியநாடி சுடும் நாடி..  அனைத்தும்..  கெட்டுவிடும்...... !!! @ கவிப்புயல் இனியவன்  யோகா கவிதை 

பஞ்சபூதமும் மனித உறுப்பும்.

  பஞ்சபூதமும் மனித உறுப்பும்.... ....... நிலத்தை நேசித்தால்..  மண்ணீரல் வளமாகும்... ! நீரை நேசித்தால்... சிறுநீரகம் வளமாகும்.... ! நெருப்பை நேசித்தால்...  இருதயம் வளமாகும்... ! காற்றை நேசித்தால்... நுரையீரல் வளமாகும்... ! விண்ணை நேசித்தால்...  கல்லீரல் வளமாகும்.... ! @ கவிப்புயல் இனியவன்

யோகா கவிதை

 யோகா கவிதை  ...........  வலது மூச்சு.....  சூரிய கலை.... ! இடது மூச்சு....  சந்திர கலை.... ! இருதுவாரம்....  சுழுமுனை..... ! சூரிய கலையில்....  தியானம் செய்.... ! சந்திர கலையில்...  பயணம் செய்... ! சுழுமுனையில்....  அமைதியாக இரு.... !!! @ கவிப்புயல் இனியவன் 

கவிதை 360 வசனக்கவிதை

  09) வசனக்கவிதை  அதிசய குழந்தை அவன் ... ஆசான் நான் ... என்னைவிட அவனே முன்னுக்கு " அ " நான் "ஆ " இந்த குழந்தை இப்படியெல்லாம் .... பேசுமா....?  சிந்திக்குமா ...? நம்ப முடியவில்லை என்போர் ... இந்த கவிதையை மூடிவிட்டு  போகலாம் ....!!! இந்த குழந்தை என்னதான்  சொல்லப்போகிறது என்பதை ... பார்க்க விரும்புவோர் .... பொறுமையோடு காத்திருந்து .... தொடராக வரும் வசனக்கவிதையை .... பாருங்கள் .....!!! அதிசயக்குழந்தை .... எப்படி இருப்பான் ...? ஆசான் நேரான சிந்தனையில் ... பேசினால் அவன் எதிர் சிந்தனையில்  பேசுவான் . ஆசான் எதிர் சிந்தனையில்  பேசினால் அவன் நேர் நித்தனையில் ... பேசுவான் - ஆனால் அர்த்தம் இருக்கும் ....!!! ஆன்மீகம் பேசுவான்  அரசியில் பேசுவான்  இல்லறம் பேசுவான்  எல்லாமே பேசுவான்  இலக்கண தமிழில் உரைப்பான்  இந்தாங்கோ என்று பேச்சு தமிழிலும்  பேசுவான் .... கசப்ப்னான உண்மைகளை உரைப்பான் ... இனிப்பான பொய்களையும் சொல்வான் ... மொத்தத்தில் அதிசய குழந்தை  இடையிடையே அதிர்ச்சியை .... தருவான் என்பது மட்டும் உண்மை ....!!! ^ அதிசயக்குழந்தை   வசனக்கவிதை  கவிப்புயல் இனியவன்

கவிதை 360 திருக்குறள் கவிதை

திருக்குறள் கவிதைகள்  ......... திருக்குறளை கவிதயாக மாற்றி எழுதும் என் சிறு முயற்சியில் முதலில் " இன்பத்துப்பால்"  எனும் பகுதியை கவிதை ஆக்கியுள்ளேன் இதனை முதல் முயற்சியாக அடியேன் வடிவமைத்துள்ளேன்.  ....   பெண்ணே நீ யார் ....? என் கண்ணில் மின்னலாய்... பட்டவளே - பெண்ணே ....!!! நீ - பிரம்மன் படைப்பில் ... தங்க மேனியை தாங்கிய  நான் கண்ட தெய்வீக தேவதையா ...? தோகை விரித்தாடும் மயில்  அழகியா ..? எனக்காகவே இறைவனால்  படைக்கப்பட்ட .... மானிட பெண் தாரகையோ ...? கண்ட நொடியில் வெந்து  துடிக்குதடி -மனசு  பெண்ணே நீ யார் ....? குறள் - 1081 தகையணங்குறுத்தல் அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை  மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.   திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 01 ....  இவ்வாறு அனைத்தும் வடிவமைத்துள்ளேன்  நன்றி 

கவிதை 360 திருக்குறள் சென்றியு

 08) திருக்குறள் கவிதைகள்  திருக்குறள் சென்றியு  .......... அறத்துப்பால் -கடவுள் வாழ்த்து - அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (01) கவிப்புயல் இனியவன் திருக்குறள் -சென்ரியூ எழுத்தின் தாய் உலகின் தாய் -அகரம் - ..... அறத்துப்பால் -கடவுள் வாழ்த்து - மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (02) **** கவிப்புயல் இனியவன்  திருக்குறள் -சென்ரியூ 02 ********** இறை சிந்தனை தொடர் சிந்தனை -நீடிய வாழ்வு - ..... இவ்வாறு 50 க்கும் மேற்பட்ட சென்றியு எழுதியுள்ளேன்  நன்றி

கவிதை 360 கஸல் கவிதை

 கஸல் கவிதை  இக் கவிதை பல மொழிகளை கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டுகிறது. இங்கு யான் இது எவ்வாறு எழுதுவது என்று பார்க்கிறேன்  .... தமிழில் கவிகோ அப்துல் ரகுமான் அவர்கள் நல்ல வடிவம் கொடுத்தார். அதனையே பெருமளவு பயன்படுகிறது.  ..... பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை  முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் ) இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும்  ( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும்  மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது . அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது  ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-) 3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது  ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் .... உதாரணத்துக்கு ஒரு கவிதை  ----- வலமிருந்து .... இடமாக காதல் ... தேவதையை சுற்றி .... வரவேண்டும் .....(+) நம் காதல் தோஷம் .... இடமிருந்து வலமாக .... சுற்றுகிறேன் .......!!!(-) ----- 01 வாடி விழும் பூவின் .... நெத்து மரமாகி .... மீண்டும் பூக்கும் ...(+) நீ வாடித்தான் .... விழுந்தாய் ...... பூவின் மென்மை கூட ..... உன்னில் இல்லை ....!!!(-) -----02 அடுத்த ஜென்மத்தில் ...

கவிதை 360 சீர்க்கூ கவிதைகள்

 சீர்க்கூ கவிதைகள் ...... காலந் தோறும் அடிவரையறையைக் கொண்டு தமிழ் இலக்கியங்களை வகைமை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சீர்க் கவிதைகள் ஒரே ஒரு அடியில் முடிந்துவிடுவதால் அடிக் கவிதை எனப் பெயர் சூட்டாமல் ஒன்றிரண்டு சீர்களில் கவிதை முடிந்துவிடுவதால் சீர்க்கூ எனப் பெயர் சூட்டியுள்ளேன். ஒன்றிரண்டு சீர்களில் கவிதை இயற்றுவதென்பது அவ்வளவு எளிதல்ல. வடிவத்திற்கேற்ப உள்ளடக்கத்தில் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அந்தக் கவிஞனின் கடமையாகிறது. கவிதையின் வடிவ சுருக்கத்தால் இருண்மை / கூடார்த்தம் ஒரு உத்தியாகி விட்டது. கவிதையின் தலைப்புக்கேற்பவே உள்ளடக்கத்தின் பொருளை வாசகர்கள் விரித்துரைத்துக் கொண்டால் இருண்மையைத் தவிர்க்க முடியும். கால வேகத்துக்கு இந்த வடிவத்தை நவீனக் கவிதை உலகம் வரவேற்கும் என நம்புகிறேன். - ம. ரமேஷ் ( இவர் எனது மதிப்புக்குரிய முனைவர் ம. ரமேஷ். கவிதையை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர் ) கவிப்புயல் இனியவன் சீர்க்கூ கவிதைகள்  01) மரம் உயிர்களின் நுரையீரல்  02) முகில் வரைவோன் இல்லாத சித்திரங்கள்  03) வியர்வை உழைப்பாளியின் வெள்ளைக்குருதி  04) மனம் குரு இல்லாத த

கவிதை 360 ஹைபுன்

ஹைபுன்  ...... ஜப்பானிய மொழியில் ஹைக்கூவிற்குப் புகழ்பெற்ற பாஷோ என்பவர் ஹைபுன் கவிதையை முதன் முதலாக எழுதியுள்ளதாக அறியப்படுகிறது. தமிழில் முதன் முதலாக அறுவடை நாளில் மழை(2003), மாய வரம் (2006) தலைக்கு மேல் நிழல் (2007) என்ற ஹைபுன் கவிதை தொகுதிகள் வெளிந்துள்ளன. ..... இதன் மரபு.....  ஒரு கதை, சிறுகதை, கட்டுரை, பேட்டி, விமர்சனம், இதில் ஏதாவது ஒன்றை எழுதி அதற்கு பொருத்தமான ஹைக்கூ ஒன்றை உருவாக்கவேண்டும்  .... கவிப்புயல் இனியவன் ஹைபுன்  காத்திருப்பேன் அவள் வருவாள் .. பக்கத்தில் அவள் அண்ணன் ... சைக்கிளில் வருவார் .. அருகிலே செல்வேன் .. கண்ணால் கதைப்பேன் .. அவள் யாடையால் கதைப்பாள் .. அண்ணன் கிட்டவரும் போது.. என் நடை வேகமாகும் ... பாடசாலைதான் எனக்கு காதல் சாலை .. கொப்பியை பரிமாறும் போது .. கடிதமும் பரிமாறும் ... விழுந்தது கடிதம் நிலத்தில் .. கண்டார் ஆசிரியர் தந்தார் .. முதுகில் நல்ல பூசை .. நண்பர்கள் கிண்டல் நண்பிகள் அவளை கிண்டல் .. காலம் காதலாகியது .. கல்வி கரைக்கு வந்தது .. காதலும் கரைக்கு வந்தது  ^ பள்ளி காதல் தொடரும் பள்ளிவரை இல்லை பள்ளி படலை வரை ..... கவிப்புயல் இனியவன் ஹைபுன் 02 ..........

கவிதை 360 குறட்கூ கவிதைகள்

குறட்கூ கவிதைகள் ............ புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள் போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது.   குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது.  கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து, முனைவர் ம. ரமேஷ் என்பவர் எழுதினார்.  .... திருமணம் சுபமுகூர்த்தத்தில் நிறைவேறியது.  காதல் கரிநாள் ஆனது  ..... 2) உறவுகள் பறிபோனது.  காதல் வந்தது.  .... 3) நொடி மூச்சு நிலையில்லை.  காதல் நிலையானது.  ... 4) கண்ணால் காதல் வந்தது.  இதயம் நொறுங்கிப்போனது.  .. 5) நித்திரையில் சிரித்தேன்.  திட்டி எழுப்பினார் அம்மா  @ கவிப்புயல் இனியவன் 

கவிதை 360 லிமரைக்கூகள்

 லிமரைக்கூ (லிமரிக் ) ...... ஆங்கிலத்தில் லிமரிக் என்பது ஒரு கவிதை வடிவம் ஆகும். 5 அடிகளை கொண்ட இந்த கவிதையை தமிழில் ஈரோடு தமிழன்பன் எழுதியுள்ளார்.  .... வேடிக்கை, வினோதம், நகைச்சுவை, சமூக விழிப்புணர்வு வகையில் எழுதலாம்.  .... ஹைக்கூ மற்றும் சென்றியு என்ற இரண்டும் கலந்தது  .... இதன் மரபு  1) மூன்று அடிகளை கொண்டது.  2) முதல் அடியில் 3 சொற்கள்  3) இரண்டாம் அடியில் 4சொற்கள்  4) மூன்றாம் அடியில் 3சொற்கள்  5) முதல் அடியின் இறுதி சொல்லும் 3ம் அடியின் இறுதி சொல்லும் "ரைமிங்கில் " வரவேண்டும்  ...... முற்களின் நடுவே ரோஜா இரத்தம் கையில் வடிய பறித்து கொடுத்தார் காதலியின் ராஜா ^^^ மாப்பிளைக்கும் பணம் காலமாய் காதல் செய்தவரின் மாறியது குணம் ... அரச துறையில் தனியார்  தொழில் சங்க தலைவர் இரட்டை வேஷம்  இவரை கேட்போர் இனியார் .... ஜீரணத்துக்கு குடித்தான் மல்லி  கட்டுப்படுத்த முடியாத விலை உயர்வு  இழைத்து போனது உடல் ஒல்லி ..... இழுத்து கொன்றது உன் பார்வை விழித்து படித்து கண்டதொன்றுமில்லை  இழந்து விட்டேன் பள்ளி தேர்வை

கவிதை 360 சென்றியு தொடர்

கவிப்புயல் இனியவன் சென்ரியூ உறவினருக்கு தேனீர் இடைக்கிடையே பேச்சு விளம்பர இடைவேளை ^^^ பணம் பாதாளம் பாயும் பாதாள அறைக்குள் பணம் ^^^ பணம் பத்தும் செய்யும் கடன் கொடாதவன் கையில் பத்து ^^^ முகநூலில் காதல் நான் யாரையும் காதலிக்கவில்லை மறுபக்கத்தில் பழைய காதலி ^^^ தொடர்ந்து பாடும் தொண்டைகட்டாது ரேடியோ ^^^ சத்தியம் கேட்டு சலித்துவிட்டார் கடவுள் குடிகாரன் ^^^ நவீன சுயம்பரம் நடைபெறுகிறது கல் பல் உடைக்கும் போட்டி போட்டியில் முதியவர் ^^ நேர அட்டவனை படி.  சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.  பள்ளி மாணவர்.  .....  பகலிரவு ஆட்டம்.  இரவு சூதாடம்.  பகல் கிரிக்கெட் ஆட்டம்.

கவிதை 360 சென்றியுக்கள்

 02) ​​​​​​​சென்றியு  ......... இதுவும் ஜப்பான் கவிதை மொழி மூன்று அடிகளை கொண்ட ஹைக்கூ முறை. இதனை சிலேடை, நகைச்சுவை, கிண்டல், என்ற முறையில் எழுதலாம்  .... ஜப்பான் கவிஞர் கராய்ஹச்சிமேன் என்பவர் 18 நூற்றாண்டு அறிமுகம் செய்தார்  .... இவரின் புனை பெயர் சென்றியு என்பதால் அதையே கவிதை பெயர் ஆனது..  .... தமிழில் ஈரோடு தமிழன்பன் தான் முதல் முதல் எழுதினார் 

கவிதை 360 ஹைக்கூ தொடர்

 அடியேன் 100 க்கும் மேற்பட்ட ஹைக்கூ எழுதியுள்ளேன் அவற்றில் சில....  ..........  இட்ட முட்டை சுடுகிறது. எடுத்து சென்றாள் கருவுற்ற பெண். ஏக்கத்தோடு பார்த்தது கோழி. ^^^ கடத்தல்காரன் கையில் பணம். வன அதிகாரிகள் பாராமுகம். ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம். ^^^ காடழிப்பு. ஆற்று நீர் ஆவியானது. புலம்பெயரும் அகதியானது கொக்கு. ^^^ குடும்ப தலைவர் மரணம். ஒன்பது பிள்ளைகளும் ஓலம். கருத்தடை நாயின் சாபம்.  ^^^ சட்டம் ஒரு இருட்டறை கருவறை இருட்டறை சிசு மர்மக்கொலை ^^^^^ வியர்வை சிந்தாமல் வேண்டாம். வியர்வை உலர்ந்தபின் வேண்டாம். ஊதியம். @ கண் வரைதல் ஓவிய போட்டி. முதல் பரிசு பெற்றான் மாணவன். பார்வையற்ற மாற்றுத்திறனாளி @ தொட்டிக்குள் இலை குவிகிறது. தூய்மையானது சாப்பாட்டுக்கடை. ஏழை வயிறு நிரம்பியது. @ பூமி உருண்டை அதுதான் சிறிதாக இருக்கிறது .... தொட்டிக்குள் மீன் தொண்டன் தீக்குளிப்பு.  கட்சி தவைவர் பெரும் சோகம்.  ஒரு வாக்காள் தோல்வி  .... இவ்வாறு முடிவு எதிர் பாராத திருப்பமாய் இருக்க வேண்டும்

கவிதை 360 ஹைக்கூக்கள்

 01) ஹைக்கூ  ......................... இது ஜப்பான் கவிதை மொழி என்று சகலரும்b அறிந்ததே. தமிழில் 3அடி கவிதையை 1974 ஆண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் முதல் முதலில் எழுதினார். . .... ஹக்கூ மரபுகள்  1) தமிழில் 3அடி கவிதையே பயன் படுகிறது. மூன்று அடியும் மூன்று வாக்கியமாக இருக்க வேண்டும். 3 சொல் அல்ல  2) தலைப்பு இடக்கூடாது  3) முதல் அடி ஒரு கூறு. மூன்றாம் அடி ஒரு கூறு  மூன்றாம் அடியே மிக மிக பிரதானம். இது திடீர் திருப்பமாக, உணர்வாக இருக்க வேண்டும்.  4) படைப்பாளிகள் வார்த்தையை விளக்கக் கூடாது.  5) ஈற்றடி பெயர் சொல்லாக இருக்க வேண்டும்.  .... மரபு கவிதைக்கு அடுத்து  சற்று கடினமானது. ஹைக்கூ ஆகும். சிலர் 3 வரி எழுதினால் ஹைக்கூ என தவறாக நினைத்து விடுகிறார்கள்

கவிப்புயலின் கவிதை 360

கவிதை ஆர்வலர்களே அடியேன் அறிந்த கவிதை வகைகளும் அதற்கான சிறுவிளக்கமும் அவற்றுக்கு அடியேன் எழுதிய கவிதைகளும் தொடர்ந்து பதியப்போகிறேன். இது தற்கால எதிர்கால கவிதை ஆர்வலருக்கு சிறு தீனி போடும் என நம்புறேன்  @ கவிப்புயல் இனியவன்  1) ஹைக்கூ  2) சென்றியு  3) லிமரைக்கூ  4) ஹைபுன்  5) குறள்கூ  6) சீர்க்கூ  7) கஸல்  என்பவை முதலில் வருகின்றன