இடுகைகள்

மே 7, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னவளை படைத்தாயோ ....!!!

காரிருள் வானத்தில் பளிச்சிடும் நிலாபோல்...... காரிருள் கூந்தல் நடுவே  பளிச்சிடும் .... என்னவளும் மண்ணுலக நிலா .... விண் நிலவே - நீ தான் .... என்னவளை படைத்தாயோ ....!!! நீ படைத்த என்னவளோ .... தரையில் உலாவரும் முழுநிலா ..... விண் நிலவே வந்துவிடாதே ..... வெட்கப்படுவாய் வேதனை படுவாய் .... மாதமொருமுறை எடுக்கும் ஓய்வை.... மாதம் முழுதும் எடுத்துவிடுவாய்....!!!

தமிழன் ஆதிமனிதன் ...!!!

ஆதிமனிதன் ... காட்டில் இருந்து .... ஊர்ந்து ஊர்ந்து வந்தான் .... அதுவே அவன் ஊரானது ....!!! மீளளிப்பு நிலத்தை ..... ஊரிலிருந்து பார்க்க சென்றோம் .... காடாய் இருக்கிறது ....!!! இப்போதென்றாலும்.... ஏற்றுகொள்ளுங்கள் ... தமிழன்  ஆதிமனிதன் ...!!!

எது எங்கள் சுடுகாடு ...?

ஆக்கிரமிப்பு நிலங்கள் .... மீளளிப்பு செய்யப்படுகின்றன .... ஆவலுடன் சென்ற மக்களின் ... திகைப்பும் திண்டாட்டமும் ..!!! எது என் குடியிருப்பு ...? எது எங்கள் சுடுகாடு ...?