இடுகைகள்

நவம்பர் 15, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறங்க எப்படி முடியும் ...?

தொலைபேசியில் .... இத்தனை நினைவுகளை ... தந்துவிட்டு - என்னை உறங்கு என்று சொல்கிறாயே ....!!! முடிந்தால் நீ உறங்கி என் கனவில் வந்து என்னை ... உறங்க வை உயிரே ...!!! கண் மட்டும் மூடுவது ... உறக்கம் என்றால் உறங்கிவிடலாம் -மனம் உறங்க எப்படி முடியும் ...?

என்னை மன்னித்துவிடு .... !!!

நான் உன்னை காதலிக்காமல் காயப்படுத்தினால் ... என்னை மன்னித்துவிடு ....  !!! நீ என்னை காதலிக்கிறாய் ... என்று நினைத்து நான் ... காயப்பட்டுக்கொண்டு ... இருக்கிறேன் ....!!! 

மூச்சு திணறுகிறேன் ...!!!

உன் கண் அசையும் திசை எல்லாம் நான் அசைகிறேன்....! உன் உதடு பேசும் ... வார்த்தைக்கு எல்லாம் ... அகராதி எழுதுகிறேன் ....! நீ மூச்சு விடும் ... நேரமெல்லாம் -நான் மூச்சு திணறுகிறேன் ...!!!

ஏழ்மை .....!!!

ஏர் பிடிப்பவன் வீட்டில்  வயிற்றுக்கு ஏழ்மை  ...!!! ஏமாப்புடன் வாழும் பணக்காரன்  வீட்டில் அன்புக்கு ஏழ்மை .....!!! ஏழ்மையில் இருப்பவர்களை .... ஏளனமாக பார்க்காதே ....!!! ஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....!!! ஏழ்மையுடன் பிறந்து இறந்தவன்  ... ஏழ்மையை தன்னுடனே  வைத்திருந்த ஏளனமானவன் ...!!!