இடுகைகள்

செப்டம்பர் 9, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிகம் நேசிக்கிறேன்....!!

பூத்துக்குலுங்கும் மலர்களை விட... என்னவளின் கூந்தலில் ... வாடி விழுந்த மலரையே நான்... அதிகம் நேசிக்கிறேன்....!! ஆம் அது அவள் கூந்தலில் இருந்து உதிர்ந்த மலர்கள்.... அவளே ஒரு பூந்தோட்டமாச்சே....!!!

நடமாடும் பிணமானேன் ....!!!

என் கவிதைகள் ... மெழுகாய் உருகுகின்றன ...! எண்ணங்கள் தீபமாய் .... ஒளிர்கின்றன ....!!! எண்ணங்களில் கலந்தாய் கவிஞனாய் மாறினேன் ....!!! வரிகளாய் வந்தாய் .... வலிகளில் துடிக்கிறேன் ...!!! மௌனத்தில் என்னை.... வாழ்சொல்லுகிறாய் .... நடமாடும் பிணமானேன் ....!!!

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....

கீ ரியும் பாம்பும் போல் வாழாதே ..... கீ தமும் ஓசையும் போல் வாழ்..... கீ ழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு .... கீ ர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!! கீ ர்த்தனை மனதுக்கு நன்று ..... கீ ரை கண்ணுக்கு நன்று .... கீ ரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று .... கீ ழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!! கீ ழ்பால் என்று யாரும் இல்லை .... கீ ழ்நிலை என்று எவரையும் எண்ணாதே ..... கீ றல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ...... கீ ழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!! கீ ர்(சொல்) உறுதி வேண்டும் .... கீ ளுடையில் சுத்தம் வேண்டும் .... கீ றலிலும் தெளிவுவேண்டும் .... கீ தை நெறி வாழவேண்டும் .....!!!

கே இனியவன் ஹைக்கூகள்

நாம் பிரிந்து வாழ்கிறோம் இணைந்து வாழ்ந்தால் இறப்பீர்கள் தண்டவாளம் @@ எரிகிறேன் சாம்பலாகமாடேன் மெழுகுதிரி @@ கண்ணீர் வருகிறது கவிதை வருகிறது வலி @@ பறக்கிறது பட்டமில்லை கற்பனை + கே இனியவன் ஹைக்கூகள் 

எங்கே இருக்கிறது சுதந்திர காற்று ....?

எங்கே இருக்கிறது சுதந்திர காற்று ....? பேச்சு சுதந்திரம் காணாமல் ..... போய் காலாவதியாகி விட்டது ..... இப்போ மூச்சு சுதந்திரத்துக்கு ..... போராடுகிறோம் .....!!! மூச்சை காப்பாற்ற ஒரு இனம் .... மூச்சை கையில் பிடித்தபடி வாழ .... மூச்சை பறிக்க ஒரு கும்பல் ..... வெறியோடு அலைந்து திரிய ..... மூச்சு சுதந்திரம் பேச்சுக்கு கூட .... இல்லாமல் போகிறது....!!! எழுத்து சுதந்திரம் இருக்கு.....! இறுமாப்புடன் எழுதினான் .... எழுத்தாளன் - இப்போ அவன் .... எழுந்து நடக்க நாதியில்லாமல் .... படுக்கையில் பட்டமரமானான் .....!!! மூக்கு எனக்கு கட்டளையிட்டது ....! + உயிரிருக்கவேண்டுமென்றால் ..... காற்றை உள்ளே எடுத்து வெளியேவிடு .... சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்பினால் .... உன்னிலிருந்து வெளியே சென்றிடுவேன் ... மீண்டும் உள்ளே வரமாட்டேன் .....!!! சுதந்திர காற்றுக்காய் அலையாதே .... தூசியும் குப்பையும் நிறைந்த .... காற்றுத்தான் உலகில் வீசுகிறது .... சுவாசி- நீ - வசி -மடிந்துபோ ... எங்கே இருக்கிறது சுதந்திர காற்று ....? + கே இனிவனின் குமுறல் 

எனக்கு எப்போது தருவாய் ...?

கவிதையை .... ரசித்த அளவுக்கு என்னை .... எப்போது ரசிப்பாய் ...? உன்னை உயிராய் .... ரசிக்கிறேன் கவிதை ... உயிரை கொள்கிறது ...!!! என் கவிதை எழுதிய கைக்கு .... முத்தம் இடவேண்டும் என்கிறாய் .... எனக்கு எப்போது தருவாய் ...? + காதல் சிதறல்கள்

என்னை பிடிக்கவில்லை ....!!!

ஆயிரம் ஆயிரம் .... உவமைகள்  சொல்லி .... கவிதை வடிக்கிறேன் .... நீயோ .... ஒரு மெய் சொல்லிவிட்டாய் ...... என்னை பிடிக்கவில்லை ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞர் காதல் சிதறல்கள்