இடுகைகள்

ஏப்ரல், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உயிரோடு இருக்கமாட்டேன் ....!!!

உன் சிரிப்பு ... மற்றவர்களுக்கு ... சிதறும் சில்லறை ... எனக்கு நெற்றி பொட்டுக்காசு.....!!! காதல் இழப்பை கொண்டுவரும் .... உன்னையே இழக்கவைக்கும் ... என்று நினைக்கவில்லை ....!!! என்றோ ... ஒருநாள் நீ என்னை .... திரும்பி பார்ப்பாய் .... அப்போது நான் .... மாலையுடன் இருப்பேன் ... உயிரோடு இருக்கமாட்டேன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 0AO 1010

நான் ஓடாத மணிக்கூடு

காதலுக்கு கண் ... இல்லை என்பார்கள் .... உனக்கு இதயமே ... இல்லையே....!!! என்னை விட்டு போ .... கவலையில்லை ... என்னையும் கூட்டி ... செல்வதில் உனக்கென்ன ... கவலை ....? நீ என்னருகில் இல்லாத .... போதெலாம் -நான் ஓடாத மணிக்கூடு ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 I 1009

நீ எனக்கு பாசக்கயிறா- முள்ளில் மலர்ந்த பூக்கள்

உன் நினைவு வலையால் ... சிக்கி தவிக்கும் நான் ... பூச்சி -நீ சிலந்தி கௌவ்வி எடுத்துவிடு ....!!! கடலோர பாதம் ... கரைந்ததுபோல் ... நம் காதலும் ... கரைந்து விட்டது ...!!! நீ எனக்கு பாசக்கயிறா ....? பாசாங்குவேஷக்கயிறா....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 H 1008

காதலால் கொன்றவள் - முள்ளில் மலரும் பூக்கள்

குங்குமம் போல் .... சிவந்த முகத்துடன் .... சிரித்து பேசியவள் .... குங்கும பொட்டோடு ... குனிந்து நிற்கிறாள் ....!!! கொன்றால் பாவம் .... அப்போ என்னை ... காதலால் கொன்றவள் ... நீயும் பாவி .....!!! உன் .. காதல் தோட்டத்தில் ... என்னை சருகாக .... ஏற்றுக்கொள் .... உரமாக என் காதலை .... வளர்க்கிறேன் ....!!!  

ஆறுதல் சொல்லிவிட்டு செல்கிறது ....!!!

நீ பார்த்தும் பார்க்காத ... போல் என்னை கடந்து ... சென்றாலும் ....!!! உன் காதல் நிறைந்த இதயம் .... என்னிடம் வந்து ஆறுதல் .... சொல்லிவிட்டு செல்கிறது ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்

தேவதைகளின் அரசியாவாள் ....!!!

தாமரை முகம் .... நிலா மேனி .... மீன் கண்கள் ... வில் புருவம் ..... அன்ன நடை .... தோகை கூந்தல் .... கொவ்வை உதடு .... வலம்புரி சங்கு .... நூல் இடை .... இத்தனை ... அழகையும் கொண்ட .... என்னவள் .... என்னை காதலித்தால் .... தேவதைகளின் .... அரசியாவாள் ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்

பேசினால் வார்த்தை அழகு .....

உன்னுடன் பேச .... எத்துனை ஆசையோ .... அதே அளவுக்கு பேசாமல் .... இருக்கவும் .... ஆசைபப்டுகிறேன்...... வித்தியாசமாய் .... நினைத்துவிடாதே .... பேசினால் வார்த்தை அழகு ..... பேசாமல் விட்டால் வரிகள் அழகு ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்

உன்னை வைத்து

இன்று.... கிரக தோஸமாம்.... சுவாமியின் கதவு.. மூடப்பட்டிருக்குமாம்... உனக்கு எப்போது... கிரக தோஸம்.... என் இதயத்தில்... உன்னை வைத்து... மூடனும்.....! & எனக்குள் காதல் மழை கே இனியவன்

எனக்குள் காதல் மழை

மின் காந்த அலையை... கணிக்கும் அறிவியல்... உன் கண் காந்த அலையை... எப்போது கணிக்குமோ....? & எனக்குள் காதல் மழை கே இனியவன்

என்னையே பார்க்கிறாய்....!

மோனோலிஸா... ஒவியம் எப்படி... வைத்த்தாலும்... எம்மை பார்ப்பது... போல் தான் இருக்கும்... உன் புகைப்ப்டமும்... எங்கு வைத்தாலும்... என்னையே பார்க்கிறாய்....! & எனக்குள் காதல் மழை கவிப்புயல் இனியவன்

கதையையே மாற்றிவிடுகிறேன்...

நீ ஒருமுறை ... பாட்டி வடை சுட்ட... கதையில் பாட்டியாக மாறு.... கதையையே மாற்றிவிடுகிறேன்... காக்காவாக வந்து ... உன்னை தூக்கிச்செல்கிறேன்... & எனக்குள் காதல் மழை கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 25

பொம்மை கடைக்குள்.... சென்று விடாதே,,,, இந்தபொம்மைதான்.... வேண்டும் என்று,,, உன்னை கொண்டு.... சென்று விடுவார்கள்.....!!! & எனக்குள் காதல் மழை கவிப்புயல் இனியவன்

காதல் சோகக்கவிதை

காதலின் ஆழம் .... கண்நீர்விடும்போது .... மற்றவரும் சேர்ந்து .... கண்ணீர் விடுவதில்லை ....!!! உயிர் விட்டு போகும் ..... உடலுக்காக விடும் .... கண்ணீரை விட கொடுமை ... உயிராய் காதலித்தவர் ,,,, விட்டுப்பிரியும்போது .... ஓரக்கண்ணில் வடியும் ... சிறுதுளி கண்ணீர் ....!!! ^ காதல் சோகக்கவிதை கே இனியவன் 

உனக்கு அது குறுஞ்செய்தி

ஒரு நாளுக்கு .... ஒரு குறுஞ்செய்தியாகினும் .... அனுப்பி வைத்துவிடு .... உனக்கு அது  குறுஞ்செய்தி.... எனக்கு பெரும் செய்தி ....!!! நீ நேரே வரவேண்டுமென்று .... மனம் ஆசைப்படவில்லை .... உன் நினைவில் வாழ்வே .... ஆசைப்படுகிறேன் ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

என் கவிதைகள் சொல்லும் ....!!!

நீ ... தந்த ... வலிகளை தாங்கும் .... சக்தி எனக்கில்லை .... நீ தந்த வலிகள் .... என்னவென்று என் .... கவிதைகள் சொல்லும் ....!!! ஒன்று .... மட்டும் செய்துவிடாதே .... நான் தனியே இருந்து .... அழுவதுபோல் நீயும் ... அழுதுவிடாதே - என்னை .... ஆறுதல் படுத்த கவிதை ... எப்போதும் இருக்கும் .... உன்னை ஆறுதல் படுத்த .... என்னை தவிர யாருமில்லை ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

சிகரட் - ஹைக்கூ கவிதை

சடலத்துக்கு தீ மூட்ட உயிருள்ளவன் ஒத்திகை பார்க்கிறான் சிகரட் ^ ஆறு அங்குல உயரம் ஆறடி மனிதனையே கொல்கிறது சிகரட் ^ கே இனியவன் ஹைக்கூ கவிதை

அதிசயக்குழந்தை - ஆசை

அதிசயக்குழந்தை - ஆசை ---------- உன் ஆசை என்ன என்று கேட்டேன் ... அதிசயக்குழந்தையிடம்.....? ஆசையில்லாமல் இருக்கவே ... ஆசை என்றான் ஒரே வரியில் ....!!! என்னப்பா சொல்கிறாய் ....? ஆமா ஆசானே .....!!! ஆசையே அனைத்து துன்பத்துக்கும் .... மூல காரணி ......!!! நிறைவேறாத ஆசையின் வெளிப்பாடே .... கோபம் ,,,,,,,,,,,,!!! கோபத்தின் வெளிப்பாடே .... கொடூரம் ...........!!! கோபத்தை குறையுங்கள் ..... என்பது தவறு - ஆசையை .... குறையுங்கள் என்பதே சரியானது .....!!! பெண் ஆசை .... நடத்தையை கெடுக்கும் ...... மண் ஆசை ..... நாட்டை கெடுக்கும் ...... பொன் ஆசை ...... பெண்ணையே கெடுக்கும் .......!!! ஆசையை குறைப்பது எளிதல்ல .... ஆசையை வரிசைப்படுத்துங்கள் .... அந்த வரிசையில் இயலுமையை .... பாருங்கள் நிறைவேறக்கூடிய .... அவசியமான ஆசைக்கு ஆசைப்படுங்கள் .....!!! ^ அதிசயக்குழந்தை வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் தொடர் - 12

கே இனியவனின் 1000 வது கஸல்

நீ சொன்ன ஒரு வார்த்தை....  ஆயிரம் கஸல் கவிதையை ... தோற்றிவிட்டது ....!!! சுதந்திர பறவைகளை ... திறந்த சிறைச்சாலைக்குள் .... அடைத்துவிடும் .... காதல் ......!!! இதயங்களை .... இணைக்கும் .... சங்கிலி -காதல் ... துருப்பிடிக்காமல் .... பார்த்துக்கொள் .....!!! முள் மேல் பூ அழகானது ..... என் இதயத்தில் பூத்த .... முள் பூ நீ ................!!!! நீ காதலோடு...... விளையாட வில்லை .... என் மரணத்தோடு ..... விளையாடுகிறாய் ......!!! ^ இது எனது 1000 கஸல் இத்தனை காலமும் ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் உளமான நன்றி ^ அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன் ^ " முள்ளில் மலரும் பூக்கள் "         கஸல் கவிதை

போலியாய் சிரிக்கிறது

வலிகள் மனதில் .... வரும்போதேலாம் .... மௌனமாக அழுவது ... இதயம் .....!!! உறவுகளை .... வருத்த கூடாது .... என்பதற்காக .... போலியாய் சிரிக்கிறது .... உதடு ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

ஒரு நிமிட உலகம்

மரணத்தில் ஏன் அழுகிறாய்....? ----- குழந்தை பிறந்தது .... பேர் சூட்டும் விழா .... உறவினர் வந்தனர் .... கூடி சாப்பிட்டனர் .... குதூகளித்தனர் .... கலைந்தனர் ....!!! ஆண்டு .... ஒன்று நிறைவு .... பிறந்தநாள் வைபவம் .... கேக் வெட்டினர் .... பாட்டு பாடினர் .... கூடி சாப்பிட்டனர் .... குதூகளித்தனர் .... கலைந்தனர் ....!!! திருமண அழைப்பு .... உறவுகள் குவிந்தன .... ஆசீர் வாதம் வழங்கினர் .... கூடி சாப்பிட்டனர் .... குதூகளித்தனர் .... கலைந்தனர் ....!!! மரண அறிவிப்பு .... உறவுகள் கூடினர் .... ஒப்பாரி வைத்தனர் ... ஓலமிட்டனர் .... சோகத்தில் நின்றனர் ....!!! எல்லா நிகழ்விலும் .... சிரித்த மனிதன் ... மரணத்தில் மட்டும் .... அழுவதேன் .....??? அடுத்து தனது மரணம் ... பயத்தால் அழுகின்றானா ....? இத்தனை காலமும் ... உதவிய ஓருவன் இறந்துவிட்டானே .... ஏக்கத்தால் அழுகின்றானா ....? இத்தனை காலம் அத்துணை .... இன்பத்தை தந்தவன் .... இறந்துவிட்டானே -என்ற ... வருத்தத்தால் அழுகின்றானா ....? மொத்தத்தில் மரணத்தில் அழுகை ... சுயநலத்தின் ஒன்றாய் தான் இருக்கவேண்டும் ...... பிறப்ப

கவிதையாய் வருகிறாய் ...!!!

மோகத்தால் ... வரும் சோகத்தை .... விட்டில் பூச்சியிடம் ... கற்று கொண்டேன்....!!! என் இதயம் ... எப்போதெல்லாம் .... கலங்குகிறதோ.... அப்போதெலாம் .... கவிதையாய் வருகிறாய் ...!!! என் ஒவ்வொரு வலியும்.... உனக்கு எழுதும் .... காதல் கவிதை ....!!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 999

மறந்துபோய் நினைத்துவிட்டேன் ....!!!

இன்னும் காதலை -தா என்று கேட்கவில்லை ... வலியை தா இன்னும் ... உன்னை ஆழமாய் ... காதல் செய்ய ...!!! மறந்துபோய் .... நினைத்துவிட்டேன் .... உன்னை மறந்துவிடு ... என்று நீ சொல்லியதையும் ... மறந்து ....!!! உனக்கும் எனக்கும் .... நிறைய ஒற்றுமை .... காதல் தான் நமக்குள் ... வேறுபாடு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 998

உன் வலி இருக்கும் ...!!!

காதல் கண்ணாடியை .... உடைத்துவிட்டாய் ... உடைந்த துண்டுகளில் ... உன் முகம் ....!!! நான் உன்ன ஞாபகம் ... அதுதான் அடிக்கடி ... என்னை மறக்கிறாய் ...!!! தேன் வேண்டுமென்றால் .... தேனியிடம் வலியை.... பெற வேண்டும் ... காதல் வேண்டுமென்றால் ... உன் வலி இருக்கும் ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 997

என் நினைவுகள் உனக்கு ....!!!

நம் காதல் அழகு ... நிலா போல் தூரத்தில் .... இருந்து பார்க்கும்போது ....!!! குருவி தன் குஞ்சை .... பொத்தி பொத்தி .... வளர்த்தாலும் -ஒருநாள் .... உன்னைப்போல் விட்டு .... பறக்கத்தான் போகிறது....!!! காதலில் நீ காண்டாவன வெயில் .... இடை இடையே ... சிறு மழை போல் .... என் நினைவுகள் உனக்கு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 996

எனக்குள் காதல் மழை 15

நான் ஓடும்போது நெஞ்சை ... பொத்தி ஓடுகிறேன் .... மற்றவர்களுக்கு ...... வேண்டுமென்றால் .... சட்டை பையில் இருக்கும் .... பணம் விழாமல் இருக்க ... என்று ஜோசிக்கட்டும் ....!!! நீ அப்படி நினைத்துவிடாதே ... உனக்கு தெரியும் நெஞ்சில் ... இருப்பது நீ ....!!! ^ எனக்குள் காதல் மழை 15 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 14

உனக்கும் எனக்கும் ... எத்தனை வேறுபாடுகள் .... அழகால் அறிவால் பணத்தால் ... ஒரே ஒரு ஒற்றுமை .... உன்னிடமும் என்னிடமும் ... காதல் கொண்ட இதயம் ... இருக்கிறது ......!!! ^ எனக்குள் காதல் மழை 14 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 13

ஒருவரை ஒருவர் .... தெரியாமல் முட்டி .... மன்னிப்பு கேட்டு .... அதை மனதுக்குள் ... சுமந்துகொண்டு ... காதல் நினைவோடு ... வாழ்வதெல்லாம் .... சினிமாவில் தான் .... நடக்கும் ......!!! என்ன அதிசயம் .... நமக்கும் நடக்கிறதே ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 13 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 12

உன் கண்கள் ... தானியக்கி நானே .... தொலைக்காட்சி-நீ அசைகின்றபோதேலாம் அசைகிறேன்....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 12 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 11

கிளியிடம் கொத்தும் பயிற்சி .... எடுக்கப்போகிறேன் ... உன்னை எப்படி ... கொத்திக்கொண்டு ... செல்லலாம் ...? என்பதை அறிந்து கொள்ள....? ^ எனக்குள் காதல் மழை தூறல் 11 கவிப்புயல் இனியவன்

இனிய புத்தாண்டே வருக....!

படம்
இனிய புத்தாண்டே இதயங்களில் இனிய இதமான சிந்தனையை இன்பமாய் வழங்கிவிடு...! இல்லறத்தில் எல்லோரும் இன்பமாய் வாழ்ந்திடவும்... இமைப்பொழுதும்... இறைவனை நினைத்திடவும்.. இனிய புத்தாண்டே வருக....! இல்லாமையை நீக்கி... இறுமாப்புக்களையகற்றி... இழிவான செயல்களை அகற்ற... இனிய புத்தாண்டே வருக...! இயற்கையை பாதுகாப்போம்... இறைவனை துதிப்போம்.... இன்பமாய் வாழ்ந்திடுவோம்... இளமையோடு வாழ்ந்திடுவோம்...! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இனிதே வாழ்ந்திடுவோம்... இனியவனின்..... இன்பமான.... இதயமான வாழ்த்துக்கள்....!!!

காதலில் விழுந்து விட்டேன் ...!!!

காதலை ... உதட்டளவில் சொல்லி ... இதயத்தை காயப்படுத்தும் .... காதலில் விழுந்து விட்டேன் ...!!! இன்னும் ... காதல் சிறையில் நான் ... இன்றே அவளும் ... மாற வேண்டும் ..... அன்றேல் என் இதயம் ... மாறவேண்டும் .... அவள் நினைவுகள் ... முள்ளாய் குத்தினாலும் ... சுகமாய் தான் இருகிறது ...!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 03 கே இனியவன்

காதல் வலியை தந்தது ....!!!

காதலை .... வழியை நானே .... வலியத்தேடி.... காதலோடு வாழ்ந்தேன் .... காதல் வலியை .... தந்தது ....!!! வலியோடு ... வாழ்ந்தாலும் ... காதலோடு வாழ்கிறேன் ... நினைவுகள் கள்ளி முள்ளாய் குத்தினாலும் .... காதல் இனித்து கொண்டே .... எப்போது இருகிறது ....!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 02 கே இனியவன்

நெஞ்சுக்குள் கள்ளிச்செடி

படம்
நினைவுகள் எல்லாம் .... இனிமையில்லை ....! அழகான ரோஜாக்கு கீழ் ... ஆபத்தான முள் ....! முள்ளை கவனிப்பாய் .... யாருமில்லை ரோஜா .... அழகாக இருப்பதால் .....! நெஞ்சுக்குள் ..... கள்ளிச்செடியை வைத்து .... முகத்தில் ரோஜாவுடன் ..... வாழும் காதலர்களே .... அதிகமாக இருக்கிறார்கள் ....!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி கே இனியவன் 

எழாமல் இருப்பதே தவறு

விழுவது ஒன்றும் .... தோல்வியல்ல ... எல்லாமே விழுந்து ... ஆகவேண்டும் ....!!! விழுந்து எழாமல் ... இருப்பதே தவறு ..... அப்படியும் விழுந்தால் ... காய்ந்து விழும் ... சருகுபோல் இருக்கணும் .... விழுந்தாலும் பிறருக்கு ... உதவுவதுபோல் ...!!! ^ எழுந்திரு போராடு வெற்றி கே இனியவன் 

எழுந்திரு போராடு வெற்றி

வெற்றி.... மன திருப்தியை .... கொடுக்கும் ... தோல்வி .... மன உறுதியை ... கொடுக்கும் .....!!! தோல்வியென்னும் ... அக்கினிக்குள் வெந்து .... வெற்றியென்னும் ... அன்னத்தை உண் ....!!! ^ எழுந்திரு போராடு வெற்றி கே இனியவன்

போராட்ட பெண்ணியம்

போராட்ட பெண்ணியம் ___ அடங்கியிருந்தது போதும் பெண்ணே .... குட்ட குட்ட குனிவது குற்றம் ... எத்தனை நாள் தான் .... குனிவாய்....? உனக்கு இல்லாத உரிமையை .... கேட்கவில்லையே .... உன் உரிமையை பறிக்கும் .... மேலாதிக்கத்திடம் தானே .... போராடுகிறாய் ....!!! போராடு போராடு ... உரிமை கிடைக்கும்வரை ... போராடு ....!!! ^^^ போராட்ட பெண்ணியம் கவி நாட்டியரசர் கே இனியவன

மிதவாதப் பெண்ணியம்

மிதவாதப் பெண்ணியம் --------- இந்த உலகம் ஒரு ... சக்தியால் இயங்குவதுபோல் .... ஒவ்வொருவனின் இயக்ககும் ... ஒரு பெண்ணினால் தான் .... இயங்குகிறது .....!!! பெண்மைக்கு யாரும் .... உரிமை கொடுக்கத்தேவையில்லை.... யார் பறித்தார்கள் கொடுப்பதற்கு ... அவர்களுக்கு எல்லா உரிமையும் ... இருக்கிறது என்பதை ஏற்றால் .... பெண்ணியம் வாழ்ந்துகொண்டே .... இருக்கும் .....!!! ^^^ மிதவாதப் பெண்ணியம் கவி நாட்டியரசர் கே இனியவன 

ஏங்குகிறேன் ...!!!

உன்னோடு .... வாழவேண்டும் என்றுதான் .... காதல் செய்தேன் .... உன் மௌனம் என்னை .... கொல்கிறது....!!! உன்னோடு வாழவேண்டும் ... என்பதெல்லாம் கலைந்து.... உன்னோடு பேசினால் .. போதும் என்று ஏங்குகிறேன் ...!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

செத்து துடிக்கிறது இதயம் ....!!!

நிஜமான வாழ்க்கை.... கிடைக்கவில்லை .... கற்பனையில் என்றாலும் .... வாழவிடு ....!!! வாழ்ந்தால் உன்னோடுதான் ... வாழ்வேன் அடம்பிடிகிறது ... மனசு .......!!! மடிந்தால் .... உன் நினைவோடு மடிவேன் .... செத்து துடிக்கிறது .... இதயம் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

ஆறுதல் சொல்லிவிட்டு போவாயா ....?

நீ என்னை விட்டு பிரிந்து ... பலகாலங்கள் ஆகிவிட்டது ... பலமுறை என் இதயத்துக்கு ... சொல்லிவிட்டேன் .... நம்பமாட்டேன் என்கிறது ... என் இதயம் .....!!! ஒருமுறை ... நீ என் இதயத்தில் இருந்த .... இடத்துக்கு வந்து ஆறுதல் .... சொல்லிவிட்டு போவாயா ....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வரிகளுக்கு வலியாகிவிடும்...!!!

நீ தரும் வலிகளை... உன் முகத்துக்கு ... சொல்ல முடியவில்லை .... முடிந்தால் என் வரிகளை .... பார் வலிகள் தெரியும் ...!!! என்.... வரிகளை .... வெறும் வரிகளாக .... பார்க்காதே அந்த ... வரிகளுக்கு ...... வலியாகிவிடும்...!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

எனக்கு சுகமாக இருக்கிறது .

இரவே ... விரைவாக வந்துவிடு ... உன்னில் இருந்து .... அழுவதே எனக்கு .... சுகமாக இருக்கிறது ....!!! மழையே ... விரைவாக பொழிந்துவிடு .... உன்னோடு சேர்ந்து .... அழுவதே எனக்கு ..... பாதுகாப்பாக இருக்கிறது ...!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

என் இதயம் இறந்து விட்டது

நான் உன்னை ஏமாற்றினால் ... என்ன செய்வாய் ... என்று விளையாட்டுக்கு .... கேட்டபோதே .... என் இதயம் இறந்து விட்டது ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

மீண்டும் காதலிப்போம் "

உனக்கு ....  முதல் நான் ...  இறந்தாலோ ....  எனக்கு....  முதல் - நீ  இறந்தாலோ ....  நம் ....  கல்லறையின் ...  வாசகம் - " மீண்டும்  காதலிப்போம் " ....  அடுத்த ஜென்மத்தில் ...!!!  +  கே இனியவன்  வலிக்கும் இதயத்தின் கவிதை

அழகில் மயங்கி விடாதே

வேண்டாமடி ... என்னை காதலித்து விடாதே .... நான் படும் அவஸ்தையை .... நீயும் படாதே ....!!! இதயத்தின் காயங்கள் உள்ளேயே இருப்பதால் .... வெளியே தோன்றும் .... அழகில் மயங்கி விடாதே ...!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

ஒவ்வொரு காதலனும் .... முத்தமுட முன்னர் ... விரும்புவது .... காதலியின் தோளில்... சாய்வதற்கே .... ஏன் என்று கேட்டுப்பாருங்கள் .... யாராலும் காரணம் .... சொல்லிவிட முடியாது ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

கரு சிதைவை காட்டிலும் .... எண்ண சிதைவே கொடூரமானது .... வளர்ந்த மனிதனையே .... கொல்கிறது.....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கே இனியவன் 

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

காதலை கேட்டேன் ... கண்ணீரை தந்தாள் .... அதிர்ச்சி ஒன்றுமில்லை .... ஆண்டவனை பார்க்க .... மனமுருகித்தானே .... வேண்டினார்கள்....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

பூவின் இதழ்களால் ஆனது ...!!!

அவள் இமைகள் முடிகளால் ஆனதில்லை .... முற்களால் ஆனது ....!!! அவள் பார்வை அக்கினி கொழுந்துக்கு ... சமனானது -ஆனால் ... என்னை பார்க்கும்போது .... பூவின் இதழ்களால் ஆனது ...!!! ^ முள்ளும் ஒரு நாள் மலரும் காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

ஒரு மரணம் மறு ஜனனம்

-------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- .........ஒரு மரணம் மறு ஜனனம்  ....... ^^^^^^^^^^^^^^^^^ மழைத்துளி மரணமே .... பயிரின் ஜனனம் .... பயிரின் மரணமே .... வாழ்க்கை ஜனனம் ....!!! பூவின் மரணமே .... காயின் ஜனனம் .... காயின் மரணமே .... கனியின் ஜனனம் ....!!! சூரியனின் மரணமே .... சந்திரனின் ஜனனம் .... சந்திரனின் மரணமே .... பகலின் ஜனனம் ....!!! பழமையின் மரணமே .... நவீனத்தின் ஜனனம் .... நவீனத்தின் மரணமே .... உலக அழிவின் ஜனனம் ....!!! அறியாமையின் மரணமே ..... அகந்தையின் ஜனனம் ... அகந்தையின் மரணமே ..... ஞானத்தின் ஜனனம் .....!!! & கடல் வழிக்கால்வாய் ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன்

செருப்பின் வாழ்கை

ஜோடியாக இருந்தாலும் வீட்டுக்கு வெளியே ஒற்றையாக இருந்தாலோ தெருவில் வாழ்கை செருப்பின் வாழ்கை @ கவிநாட்டியரசர் கே இனியவன் ஹைக்கூ கவிதை

ஹைக்கூகவிதை -ஒற்றை செருப்பு

ஹைக்கூகவிதை  ---- மிதிபட்டது போதும்  அடிமை தனத்திலிருந்து விடுதலை  ஒற்றை செருப்பு  @ ஒரே இனத்துக்குள்  கலப்பு திருமணம் செய்ய முடியாத அவலம்  ஒற்றை செருப்பு  @ முதுமை வாழ்க்கை ஒருவர் பிரிந்தால் மற்றவர் அநாதை  ஒற்றை செருப்பு  @ பிறப்பில் இரட்டை பிறவிகள்  கவனிப்பார் அற்று கிடக்கிறேன் தெருவில்  ஒற்றை செருப்பு @ கவிநாட்டியரசர் கே இனியவன் ஹைக்கூ கவிதை

ஹைக்கூகவிதை

ஹைக்கூகவிதை ---- மிதிபட்டது போதும் அடிமை தனத்திலிருந்து விடுதலை ஒற்றை செருப்பு @ கவிநாட்டியரசர் கே இனியவன்