இடுகைகள்

டிசம்பர் 28, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டை காப்போம் எழுந்திரு......

நாட்டை காப்போம் எழுந்திரு...... --------- நாட்டை காப்போம் எழுந்திரு .... ஆளுக்கு ஒரு ஆயுதம் ஏந்தியல்ல.... ஆளுக்கு ஒரு மரம் நட்டு .... நாட்டை காப்போம் எழுந்திரு.........!!! நாட்டை காப்போம் எழுந்திரு...... குண்டுகள் போட்டு அல்ல .... குப்பைகளை தொட்டிக்குள் போட்டு .... நாட்டை காப்போம் எழுந்திரு......!!! நாட்டை காப்போம் எழுந்திரு...... ஆயிரம் மரணங்களை ஏற்படுதியல்ல .... ஆயிரம் ஆறுகளை பராமரித்து .... நாட்டை காப்போம் எழுந்திரு......!!! நாட்டை காப்போம் எழுந்திரு...... கல்லறையில் காவியம் எழுதவல்ல .... கடல் வளத்தை சுரண்டுபவரிடமிருந்து ..... நாட்டை காப்போம் எழுந்திரு......!!! நாட்டை காப்போம் எழுந்திரு...... வல்லரசு ஆதிக்கத்தை காட்டவல்ல .... வல்லரசுகளின் சுரண்டலிலிருந்து ..... நாட்டை காப்போம் எழுந்திரு......!!!

கனி என்றால் க(ன்)னி

கனி என்றால் க(ன்)னி  ------------- கனியென்றால் கன்னி .... முக்கனி மா, வாழை, பலா ..... முக்கனிபோல் இனித்திடு ... பெண்ணே....!!! வாழையடி வாழையாய் ... வாழைபோல் வாழவைக்கும் .... ஆற்றல் கொண்டவள் பெண் ....!!! புறத்தோற்றத்தில் பலாவின் முள் ... அகதோற்றத்தில் பலாவின் சுவை .... தேவையற்றதை தூக்கி எறியும் சக்கை ..... இத் தத்துவத்தை கொண்டவளே பெண் ....!!! சுவைக்க சுவைக்க தெவிட்டாத -மா  சுவைத்தபின் எறியப்பட்ட விதையில் .... இனத்தை பெருக்கும் -மா  பெண்ணே நீ நினைக்க நினைக்க ..... இன்பம் தருபவள் - வருங்கால  சந்ததியை கருவில் சுமப்பவள் ...!!! .....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை... ...............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்...............  ...............யாழ்ப்பாணம்......................

ஒரு மரம் ஓராயிரம் குழந்தை

ஒரு மரம் ஓராயிரம் குழந்தை ------------- பச்சை பசேரென இருக்கும் போது ..... கண்ணுக்கு குளிர்மை தருகிறது .... குடைபோல் படர்ந்து  இருக்கும் போது..... உயிரளுக்கு நிழல் தருகிறது ...... இத்துப்போகும் சருகு தருகிறது செத்து மடிந்தால் விறகு தருகிறது ....!!! வாழும் போது பயன் தருகிறது .... வாழ்ந்து முடிந்தும் பயன் தருகிறது...... தான் நச்சை எடுத்து (CO2).... உனக்கு உயிர் (O2) தருகிறது .........!!! ஒரு மரம் வெட்டப்படும்போது .... ஒரு மகன் மகள் வெட்டப்படுகிறார்கள் ...... ஒரு மரம் நடப்படும் போது ....... ஓராயிரம் மகன் மகள் பிறக்கிறார்கள் ..... குழந்தை இல்லையே குழந்தை இல்லையே கவலை இல்லையே உலகில் மனிதா ....!!!