இடுகைகள்

ஜனவரி 22, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நட்பு -சிறு வரியில் 05

நட்பின் சூரியன் நீ உன் நட்பில் காயும் எள்ளு நான் ....!!! *********** தொகை விரித்து ஆடும் மயிலை விட என் தோழனின் தோள் அழகு ********* ஒப்பிட்டு நட்பை சொல்ல நம் நட்புத்தான் இருக்க வேண்டும் இதிகாசங்களும் புராணமும் வேண்டாம் ******** நடக்கும் காலம் முதல் இறக்கும் காலம் வரை தொடர்வது நட்பு மட்டும் தான் ....!!! ******** கல்லறையிலும் வாடாமல் இருக்கும் பூ நட்பும் ...!!!

நினைக்கதெரியாது...!!!

உன்னை நினைக்க தெரியும் உன்னை மறக்க நினைக்கதெரியாது...!!!

இரு வரி கவிதை - கேட்டு விடாதே ...!!!

உனக்காக என்னை தருகிறேன் .. எதற்காக என்று கேட்டு விடாதே ...!!!

இரு வரி கவிதை - நீ கண் சிமிட்டும்

நீ கண் சிமிட்டும் ஒவ்வொரு முறையும்  நான் கண்ணால் புகைப்படம் எடுக்கப்படுகிறேன்

இரு வரி கவிதை - துடிக்கிறேன் ....!!!

உன்னோடு வாழவும் துடிக்கிறேன் -இல்லையேல் மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!!!

ஒருவரி கவிதைகள்

நான் நானாக இருக்கிறேன் இல்லை உன் வரவால் ..!!! *********** உன்னை கண்டேன் தொகை மயில் ஆகியது மனசு ...!!! *********** கண்ணால் கண்டத்தை ஏற்படுத்தியவள் நீ...!!! *********** ஒரு வார்த்தையால் எனக்கு இரவை பகலாக்கினாய்...!!! ********** அழகான உன் பெயரை சொல்லி அலங்கார  திருவிழாவாக்கினாய் என் மனதை

உன் கண்ணில் கண்டேன்

உன் கண்ணில் கண்டேன் என் மீது நீ கொண்ட காதலை உன் மூச்சில் உணர்ந்தேன் என் மீது நீ வைத்த உயிரை ...!!! உன் சிரிப்பில் உணர்ந்தேன் நீ என் மீது வைத்த சிறப்பபை உன் பேச்சில் கண்டேன் -நீ என் மீது கொண்ட பேரானந்தத்தை....!!! உன் நடையில் கண்டேன் என் மீது நீ வைத்த நட்பை உன் உடையில் கண்டேன் நீ என் மீது வைத்த உணர்வை ...!!!

என்றாலும் காதலிக்கிறேன் ...!!!

உன்னை கண்டேன் என்பதில்லை என்னை தொலைத்தேன் என்று சொல் ....!!! காதலால் காதல் செய் -நீ காதலால் கடினமாகிறாய்...!!! உன்னோடு சேர்ந்து வாழமுடியாது என்று நிச்சயம் தெரியும் என்றாலும் காதலிக்கிறேன் ...!!! கஸல் 630

என் தவறு தான் ....!!!

தூரத்தில் நின்றால்   துக்கம் விசாரிக்கிறாய்   அருகில் வந்தால் வலியை தருகிறாய் ....!!! எத்தனை நாள் உன்னை   நினைத்து அழுவது   இறைவா அவளை   நினைத்து அழ இன்னும்   அவள் வலியை தரட்டும் ...!!! என்னிடம் இருக்கும்   காதல் உன்னிடமும்   இருக்கும் என்று நினைத்தது   என் தவறு தான் ....!!! கஸல் 628

காதல் பயிர் வளர்க்கிறாய் ...!!!

காதல் பரிசை புதிதாக  தரமுடியும் நீயோ  காதலை புதிதாக  கேட்கிறாயே ....!!! தவறு விட்டால்  திருந்தலாம் -தவறே  நீயாக இருந்தால்  எப்படி திருத்துவது ...? வளமான மண்ணில்  பயிர் வளரும்  கடற்கரை மண்ணில்  காதல் பயிர் வளர்க்கிறாய் ...!!! கஸல் 629

அழுவது வரமாகி விட்டது ...!!!

நீ காற்றாக இரு -நான் காதல் பட்டமாக இருக்கிறேன் தயவு செய்து நூலை அறுத்து விடாதே .....!!! நீ காதலில் ஓடி விளையாட இதயத்தை தந்தேன் -நீ ஓடி போய் விட்டாய் ...!!! உன்னை நினைப்பது வரமாக இருந்தேன் அழுவது வரமாகி விட்டது ...!!! கஸல் 627

உன்னை பார்க்க இரண்டு கண்

படம்
உதிக்கும் சூரியன் நான் மறையும் சூரியன் நீ நமக்குள் காதல் .....!!! நீ நடந்து வந்த பாதையை தேடுகிறேன் -நீயோ அழித்துவிட்டு போகிறாய் உன்னை பார்க்க இரண்டு கண் போதாமல் இருந்தது இப்போ உன்னை நினைத்து அழ இரண்டு கண் போதாது ...!!! கஸல் 626

கண்ணீர் வருகிறது ...!!!

காதலுக்கு  மாலை போட்ட  முதல் ஆள்  நீ தான் ....!!! கல்லுக்குள்  ஈரமுண்டு  உன்னைப்போல்   கண்ணில்  காதல் வரவேண்டும்  உனக்கு  கண்ணீர் வருகிறது ...!!!

நீயும் நானும் காதல்

ஊசி முனைக்குள்  புகுந்த ஒட்டகம்  போல் -நம்  காதல் ....!!! நீயும் நானும் காதல்  மொட்டுக்கள்  சோகத்தில்  வீணை வாசித்தால்  நாண்களாக இருந்த நீ  அறுகிறாய் ....!!!

இரண்டும் நீ தான் ....!!!

காதல்  வாசமே  இல்லாத இடத்துக்கு  போகிறேன் ....!!! காலில் தைத்த  முள் போல்  நெஞ்சில்  தைக்கிறாய் ...!!! காதலில்  தர்மம்  அதர்மம்  இரண்டும்  நீ தான் ....!!!