வியாழன், 2 ஜூலை, 2015

கண் ஓரத்தில் கண்ணீர் ....!!!

என்னை கண்டதும்
உன் கண் ஓரத்தில்
கண்ணீர் ....!!!

தரையில் துடிக்கும் ....
மீன் போல் துடிக்கிறேன் ...
வத்தல் குழம்பு வைக்க ...
நீ துடிக்கிறாய் ....!!!

உன்
நினைவு வலையால் ....
பின்னப்பட்டு -மீன்போல் ...
துடிக்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;810

காதல் தொட்டிக்குள் ...!!!

மீனைப்போல் ...
நீந்திக்கொண்டே ...
இருக்கிறேன் ....
காதல் தொட்டிக்குள் ...!!!

போ ..போ ...
என்னைவிட்டு போ ...
எப்படியும் என்னிடம் ...
நீ வந்தே ஆவாய் ...!
என்னைபோல் ...
காதலிக்க உலகில் ...
எந்த பைத்தியமும் ...
இல்லை .....!!!

என்
ஒவ்வொரு துடிப்பும் ...
நீ வந்து போவதாய் ...
உணர்கிறேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;809

மூச்சாய் வந்து போகிறாய்

நீ
என் கவிதை ...!
சோகக்கவிதையாகவும் ...
அடிக்கடி வருகிறாய் ...!!!

நான் நுரையீரல் ....
அதனால் தான் -நீ
மூச்சாய் வந்து வந்து ...
போகிறாய் ....!!!

காதல்
முத்தாய் -நீ
மூழ்கி எடுத்தேன் ....
செத்துபோனேன்....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;808

காதல் தற்செயல் நிகழ்ச்சி ....!!!

இதயம் துடிப்பதுக்கு ....
காரணமாய் இருந்த- நீ ...
ஏன் துடிக்கிறது ...?
என்றாக்கிவிட்டாய் ....!!!

ஒவ்வொரு துளி ....
கண்ணீருக்கும் - நீ
காரணம் - மறுத்தாய் ...
கல்லறைக்கு காரணம் ...
சொல்வாய் .....!!!

காதல் பருவத்தின் ...
தற்செயல் மகிழ்ச்சி  .....
எனக்கு காதல் ....
தற்செயல் நிகழ்ச்சி ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;807

சிறப்புடைய இடுகை

அழுதவலி வலி புரியவில்லை .....

பிறந்தவுடன் ..... அழுங்குழந்தையே.... உயிர் வாழும் .....!!! இப்போதுதான் .... புரிகிறது ..... உன்னை பிரியும்போது .... அழுவதற்கு ..... ...