இடுகைகள்

மார்ச் 24, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முடிவு சாதனையாக இருக்கும்

காகித கப்பலை பார்த்தபின்... தான் உண்மை கப்பலை... பார்க்கிறோம் -ஆரம்பம்.... சிறிதாகவே இருக்கும் .... முடிவு சாதனையாக ..... இருக்கும் ....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன் 

காட்டு மரமும் வீட்டு மரமும்

காட்டு மரமும் வீட்டு மரமும் ----- வேகமாக வெட்டப்பட்டு .... வருகின்றன காட்டு மரங்கள் ... விறக்குக்காக அல்ல .... கோடரிக்கு பிடிகளாக .... கூடி போராடமுடியாத .... காட்டு மரங்கள் முடிவுக்கு .... வீட்டு மரங்களுடன் .... கலப்பு திருமணம் செய்வதற்கு ....!!! காட்டு மரங்கள் கொஞ்சம் .... வீரம் நிறைந்தவை வலிமையானவை  ... அவை வளர்க்கப்படும் வளரும் சூழலே .... கொடிய மிருகங்கள் ஊர்வன மத்தியில் ... வாழும் சூழலே அவற்றின் குணத்துக்கு ... காரணமாக இருக்குமோ ....? வீட்டு மரங்கள் மிகவும் .... மென்மையானவை வீரமும் ... வலிமையையும் குறைந்தவை .... மனிதர்கள் மத்தியில் வளர்வது .... காரணமாக இருக்குமோ ....? காட்டு மரம் வீட்டு மரத்தை .... பார்க்க வந்தது வீட்டு மரங்கள் ... பயத்தால் நடுங்கின மௌனமாகின .... நாங்கள் உங்களோடு கலப்பு ... திருமணம் செய்ய விரும்புகிறோம் ... எங்களை காப்பாற்ற வேறு வழியில்லை ....!!! வீட்டு மரங்கள் கடுமையாக .... எதிர்த்தன உங்களை மணந்தால் ... நாங்களும் இறக்க நேரிடும் ... முடியாது முடியவே முடியாது ..... காட்டு  மரம் கவலை படவில்லை .... மனிதர்கள் மத்தியில் வளரும் ... வ

ஒரு நிமிட உலகம்

கூடு திறந்தால் காடு ----- அந்த மரண வீட்டில் .... அப்படி ஒரு சனக்கூட்டம் .... ஆராவாரமான மரணவீடு .... ஓலமிடுபவர்கள் ஒப்பாரி ... சொல்பவர்கள் நிறைந்து ... காணப்பட்டனர் ..... மூன்று நாட்களாக ... கண்ணீர் விழா ....!!! சடலம் இருக்கும் பெட்டி ... அலங்காரத்தால் ஜொலிக்கிறது .... குளிரூட்ட பட்ட ஊர்தியில் ... சடலம் வைக்கப்படுகிறது .... மந்திரி வந்து அஞ்சலி செலுத்த .... வீதியெங்கும் வாகன நெரிசல் .... வீதி எங்கும் நிறுத்தி நிறுத்தி ... பறை சத்தம் காதை கிழித்தது ....!!! சடலம் போகும் பாதையில் .... விபத்தில் இறந்த எருமைமாட்டு ... சடலத்தை நாய்களும் காகங்களும் .... குதறி எடுத்தபடி இருந்தன ... இறந்தபின்னும் மற்றவைக்கு ... உதவும் அந்த எருமையின் இறப்பு ....!!! இறப்புக்கு முன்னரே .... மனிதனும் மிருகமும் .... இறந்துவிட்டால் எல்லாமே ... சடலம் தானே .....! எல்லா உயிரினத்தின் வாழ்வும் ... அடுத்த ஒரு நிமிடம் கூட .... உத்தரவாதம் இல்லை ....!!! ^^^ ஒரு நிமிட உலகம் ...............வாழ்வியல் கவிதை **கூடு திறந்தால் காடு ** + கவிப்புயல் இனியவன்

அந்தரங்க கட்டிலுக்கு

அந்தரங்க கட்டிலுக்கு அதிகம் ஆசைப்படுபவன் ... ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ... அனுமதி கேட்கிறான் ....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன் 

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

கவிதையோடு வாழ்பவனும் கவிதையாக வாழ்பவனுமே கவிஞன் & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்