இடுகைகள்

டிசம்பர் 9, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வரைந்தேன் கண்ணால்

வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம் அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம் & காதல் வெண்பா கவிப்புயல் இனியவன்

கவிப்புயலின் காதல் வெண்பா

உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி தனியாக பேசி இன்பம் காணாமல் துணையாக பேசி இன்பம் காண்போம் வா & காதல் வெண்பா கவிப்புயல் இனியவன் 

அவள் என் எழில் அழகி

அவள் என் எழில் அழகி ---------------------------------- அ வளிடம் இதயத்தை கொடு .... அ வளையே இதயமாக்கு ..... அ வளிடம் நீ சரணடை .... அ வள் தான் உன் உயிரென இரு அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!! ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ... ஆ ராதனைக்குரிய அழகியவள் .... ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் .... ஆ யிரம் ஜென்மங்கள் அவளே.... ஆ ருயிர் காதலியவள் ......!!! இ தயமாய் அவளை வைத்திரு .... இ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் .... இ ன்பத்துக்காய்  பயன் படுத்தாதே ....... இ ன்னுயிராய் அவளை பார் ..... இ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......!!! ஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ...... ஈ ரக்கண்ணால்  வசப்படுத்துவாள் ..... ஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ...... ஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ...... ஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......!!! உ யிரே என்று அழைத்துப்பார் ...... உ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........ உ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் .... உ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் ..... உ ண்மை காதல் அடையாளம் அவை .....!!! ஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது ..... ஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு

அருவியாய் வருகிறது ....!!!

அவளைக் கவரவே ..... கவிதை  எழுதினேன் .... அவள் அருகில் இல்லாத போது வராத கவிதைகள்,....... என்னை விலகிசென்று ... இருக்கின்றபோது ..... அருவியாய் வருகிறது ....!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன்

கண்ணீரால் எழுத வைக்கிறாய் ....!!!

காற்றைபோல் நீ .... எங்கே இருக்கிறாய் ..? எங்கே தொடங்குகிறாய் ..? எங்கே முடிகிறாய் ..? தெரிவதில்லை ..... ஆனால் இருக்கிறாய் ....!!! எதை கண்ணீரால் ... எழுதக்கூடாதோ... அதை கண்ணீரால் ... எழுத வைக்கிறாய் ....!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன்

என்னோடு இருப்பாய் ...!!!

இரவுகள் .. விடியாமல் ..... இருக்க வேண்டும் .. நீ தொடர்ந்து ....... என்னோடு இருப்பாய் ...!!! காதல் தீப்பெட்டி -நீ உரசும் தீக்குச்சி நான் ...!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன் & தூங்கிய பின்பும் ... பார்க்கும் கண்கள் ... காதலளர் கண்கள் ....!!! உனக்காக நான் ..... பகலில் காத்திருந்தும் ... பலன் கிடைக்கவில்லை ... இரவில் காத்திருக்கிறேன் ....!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன்