இடுகைகள்

ஆகஸ்ட் 13, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ புதிய மலர் தேடுகிறாய்....!!!

என்றும்  அம்மா தெய்வம்  இன்று நீயும் தெய்வம் .... காட்சி தா ....!!! நீ   மீனாக  இருந்துவிடு ... நான் தூண்டில் புழுவாக ... இருக்கிறேன் .... அப்போதென்றாலும்..... என்னை தொடு....!!! நான்  வாடிவிழும் மலர் .... நீ  புதிய மலர் தேடுகிறாய்....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;835

நாம் அழியவே முடியாது ....!!!

நீ  ஐந்து முக தீபம் .... அழகாக இருகிறாய் ... அணைத்தால் சுடுகிறாய் .....!!! என்  காதலில் இலை.... உதிர்காலம் - நீ மூச்சு விடுகிறாய் -நான்  உதிர்கிறேன் ....!!! காதல் தலைஎழுத்து .... நமக்கு கல் எழுத்து .... நாம் அழியவே முடியாது ....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;834

இனிய வரவேற்பு கவிதைகள்

ஐ ம் பொறியை அடக்கி .... ஐ யங்களை தெளிவுபடுத்தி .... ஐ ம்பூதத்தை வசப்படுத்தி ..... ஐ ந்து வகை நிலத்தை ஆழும் ... ஐ யன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....!!! ஐ யங்களை தூக்கி எறிந்து விடு .... ஐ க்கியத்தோடு வாழ்ந்து பழகு .... ஐ யக்காட்சிக்கு இடமளிக்காதே ..... ஐ யமின்றிஇனிமையாய் பேசிப்பழகு ..... ஐ யங்கரன் என்றும் துணையிருப்பான் ......!!! ஐ சுவரியத்தை  நேர்மையாய் உழை .... ஐ க்கிய உணர்வோடு எப்போது வாழ் ..... ஐ யிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு .... ஐ யிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் ..... ஐ ம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....!!! ஐயா என்று பணிபோடு முதியோரை அழை .... ஐ யர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....! ஐ ம்புல அறிவோடு அகிலத்தை நேசி ..... ஐ வாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...! ஐ யனே என் அன்பனே என்றும் இன்பமாய் இரு ...!!!

மழையும் கண்ணீரும் ....!!!

மழையும் கண்ணீரும் ....!!! --- முகிலும் முகிலும் ..... காதல் கொண்டு மோதி ... காயப்பட்டு பூமிக்கு வந்த... மேக கண்ணீர் - மழை ....!!! உன் கண்ணும் என் கண்ணும் ... காதலால் மோதி வந்த மழை .... கண்ணீர் ,,,,!!! + கே இனியவன் தலைப்புகளும் கவிதைகளும் மழையும் கண்ணீரும் ....!!!

காதலன் -காதலி ...!!!

காதலன் -காதலி ...!!! --- மனிதன் கடவுளிடம் வாங்கிக் கொண்ட விலைமதிபற்ற  வரம் கனவு.....!!! மனிதனிடம் இருந்து மனிதர்களுக்கு கிடைக்கும் அற்புத பொக்கிஷம் ... காதலன் -காதலி ...!!! + கே இனியவன் தலைப்புகளும் கவிதைகளும் காதலன் -காதலி ...!!!

காதலி -மனைவி ....!!!

காதலி -மனைவி ....!!! --- பூவாய் நிலவாய் பெயரிட்ட பிரமன் படைத்த நகல் பிரதி பெண்.....!!! உயிராய் உணர்வாய் .... கனவாய் நினைவாய் .... உடலாய் குருதியாய் .... என்னோடு வாழ்பவள் ... காதலி -மனைவி ....!!! + கே இனியவன் தலைப்புகளும் கவிதைகளும் காதலி -மனைவி ....!!!

காதலும் உறவுதான் ...!!!

காதலும் உறவுதான் ...!!! --- பலர் ஏங்குவதும் ஏங்க வைத்து பின் ஏமாற்றுவதும் உறவு ....!!! காதலும் உறவுதான் ... ஏங்கவைக்கும் இன்பம் தரும் ... ஏமாற்றும் ....!!! + கே இனியவன் தலைப்புகளும் கவிதைகளும் காதலும் உறவுதான் ...!!!

தொலைபேசி அழைப்பு

தொலைபேசி அழைப்பு ----- காதுக்குள் பேசுவது எனக்குப்பிடிக்காது தொலைபேசியே ....!!! என்றாலும் காதலியின் ... பேச்சை எப்போதும் கேட்கலாம் ....!!! உன் தொலைபேசி ... அழைப்பு மணிதான்... எனக்கு - இன்ப ஓசை .... அபாய மணியாக மாற்றி விடாதே அன்பே ....!!! + கே இனியவன் தலைப்புகளும் கவிதைகளும் தொலைபேசி அழைப்பு 

என்னோடு அழும் நண்பன்

என்னோடு அழும் நண்பன்  ---- யாரோ இறந்ததற்றகாக கண்ணீர் விடும்  மெழுகுதிரிபோல் ....!!! என் தோல்விக்காக ... என்னோடு சேர்ந்து .... அழுகிறான் ... என் நண்பன் .....!!! + கே இனியவன்  தலைப்புகளும் கவிதைகளும்  என்னோடு அழும் நண்பன்

கவலைக்கு மருந்து மதுவா ...?

கவலைக்கு மருந்து மதுவா ...? காதலியை  மறக்கமுடியவில்லை ... அவளை மறக்க மது  அருந்துகிறேன் ....!!! மதுக்கடையில் கணவன்.. மனைவி கவலையுடன் முறைப்பாட்டுடன் .... விவாக ரத்து பத்திரத்துடன் ....!!! + கே இனியவன்  தலைப்புகளும் கவிதைகளும்  கவலைக்கு மருந்து மதுவா ...?

தலைப்புகளும் கவிதைகளும்

விருந்தன்று விடுமுறை  --------------------------------------- உல்லாசப்பயணம் செய்யும் மந்தைகளுக்கு  எம் வீட்டில் உல்லாச பயணி  வந்ததும் விடுமுறை .... வழங்கப்படும் ....!!! + கே இனியவன்  தலைப்புகளும் கவிதைகளும்  விருந்தன்று விடுமுறை

கை கொடுத்து தூக்கியது

சிறுவயதில் விழுந்தேன் கை கொடுத்து தூக்கினார் அம்மா ....!!! பள்ளி பருவத்தில் விழுந்தேன் கை கொடுத்து தூக்கினார் ... ஆசிரியர் ,.....!!! பருவ வயதில் விழுந்தேன் கை கொடுத்து தூக்கினான் உயிர் நண்பன் ....!!! முதுமை வயதில் விழுந்தேன் ... கை கொடுத்து தூக்கியது முதியோர் இல்லம் ....!!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் வாழ்க்கை கவிதைகள்

கவிதை மொழி .

பல மொழி வாழும் உலகில் .... உயிர் மொழி எங்கள் தமிழ் மொழி ..... உலகில் வாழும் காதலருக்கு ..... ஊட்டசத்தாய் அமைவது ... கவிதை மொழி ....!!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் ஏனைய கவிதைகள் 

யாரோடு உன்னை ஒப்பிடுவேன் ....?

யாரோடு உன்னை ஒப்பிடுவேன் ....? எதனோடு உன்னை ஒப்பிடுவேன் ....? ஒப்பிடப்படும் எல்லாவற்றையும் .... காட்டிலும் -நீ உச்சமாக இருப்பதால் ....!!! நம் காதலுக்கு நிகர் காதல் தான்....!!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் காதல் கவிதை