இடுகைகள்

நவம்பர் 18, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தோல்விகள் தோன்றாவிட்டால் ...

என்னிடம் ... குவிந்து கிடக்குறது....  தோல்விகள் .... கலங்கவில்லை .... தோல்வியை விட .... குவிந்து கிடக்கிறது .... தன்னம்பிக்கை ....!!! தோல்விகள்  தோன்றாவிட்டால் ... தன்னம்பிக்கை என்ற ... சொல்லே இல்லை ...!!!

வெற்றி ஒரு விருட்சம் ....

வெற்றி ஒரு விருட்சம் .... வெற்றி வர வர வளர்ந்து .... கொண்டே போகும் ....!!! தன்னம்பிக்கையே .... வெற்றியின் விதை .... நன்றாக நாட்டிடு .... தன்னம்பிக்கையால் ... உரமிடு .... வியர்வையால் நீர் ஊற்று .... வெற்றி விருட்சமாய் ... வளர்ந்து கொண்டே இருக்கும் ...!!!

இப்போ அடைமழை ....

இப்போ அடைமழை .... வானத்தை எந்த காதலி ... ஏமாற்றினாளோ ...? என்  நினைவுகள் .. உனக்கு தூறல் மழை ... எனக்கு அடைமழை ...!!!

எல்லாம் காதலின் விதி ...!!!

காதல் மனம் ..... விட்டு பேசவேண்டும் .... என்றெல்லாம் இல்லை ... மனதுக்குள் பேசினாலே .... போதும் ....!!! ------ எல்லோருக்கும் .... என்னை பிடிகிறது .... எல்லோரும் என்னில் ... அன்பை பொழிகிறார்கள் .... உனக்கு மட்டும் என்னை ... பிடிக்கவில்லை .... எல்லாம் காதலின் விதி ...!!!

காதல் ஒரு வலி

காதல் ஒரு வலி ---- என் கண்ணீர் துளிகள்..... உன்னில் படும் கூடவா ..? உன் இதயத்தில் ஈரம் ... வரவில்லை ....? என் மூச்சு காற்று ... பட்டும்கூடவா ....? உனக்கு இன்னும் ... காதல் பிறக்கவில்லை ...?

இதுதான் காதல்

இதுதான் காதல் --- நான் எதை பேசினாலும் ... உனக்கு தப்பாய் ..... தெரிகிறது ....!!! நீ தப்பாய் பேசினாலும் ... எனக்கு சரியாய் .... தெரிகிறது ...!!!

உயிர் இருந்தென்ன லாபம் ..?

என்னை கண்டவுடன் .... எனக்காக உன் உயிரை .... தருவாயா  என்று கேட்டு ... விடாதே ...? தருவேன் நிச்சயம் ....!!! நீ அடுத்த ஜென்மத்தில் என்னை காதலிப்பாய் ... என்று சத்தியம் செய் ... உயிரையே தருவேன் ... உன்னை காதலிக்காத ... உயிர் இருந்தென்ன லாபம் ..? + கவிதையால் காதல் செய்கிறேன் 20 கவிப்புயல் இனியவன்

எப்போது காதலிக்கிறாய் ...?

கண் ... பட்டால் கூடாது கண் நூறு பட்டிடும் ... உன் கண் எப்போது ... என்னில் படும் ...? உன்னால் காதல் ... நோயாக மாறிடுவேன் ...!!! தினமும் உன்னை .... எதிர்பார்கிறேன் ... எப்போது வருவாய் ...? எப்போது காதலிக்கிறாய் ...? + கவிதையால் காதல் செய்கிறேன் 18 கவிப்புயல் இனியவன்

நிழலாக காதலித்தால் போதும் ....!!!

காதலின் அழகு .... முகத்தில் தெரியும் ... உன் முகம் தெரியாமல் .... காதல் செய்கிறேன் .... உன் அகம் அழகாக ... இருப்பதால் ....!!! உனக்கு ஒரு பெண் .... கிடைக்கவில்லையா ....? கேலிசெய்தவர்கள் .... இப்போ வாய் அடைத்து ... நிற்கிறார்கள் -நீ  காதலானதால் ....!!! அதுவெல்லாம் இருக்கட்டும் .... உயிரே நீ எங்கிருகிறாய் ...? எப்போது என்னை காண்பாய் ...? நம் காதல் எப்போது மலரும் ...? கவிதையால் எப்போவரை .... காதலிப்பேன் ....? + கவிதையால் காதல் செய்கிறேன் 17 கவிப்புயல் இனியவன்

நிழலாக காதலித்தால் போதும் ....!!!

நான் உன்னை முழுமையாய் .... காதலிக்கிறேன் ... நீ என்னை நிழலாக .... காதலித்தால் போதும் ....!!! உன்னை இதயத்தில் ... சுமக்கும் பாக்கியத்தை ... தந்தாய் அதுவே போதும் .... என்னை இமையில் வை ... கண் மூடும் போது... இணைகிறேன் ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 16 கவிப்புயல் இனியவன்

அகராதி என் காதல் அகராதி

அகராதி என் காதல் அகராதி அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ... அகங்காரம் கொண்டவளே நீ அழகு .... அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு .... அகடவிகடம் கொண்டவளே நீ அழகு .... அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!! அகம் முழுதும் நிறைந்தவளே ..... அகமதியால் காதலை இழந்தவளே.... அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ...... அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் .... அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!! அச்சப்படாதேயடா என்னவனே ..... அச்சுதனடா என்றும் நீ எனக்கு ..... அகந்தையும் அகமதியுமில்லை .... அடர்த்தி கொண்டதடா நம் காதல் ...... அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!! அடைமழை போல் இன்பம் தந்தவளே .... அந்தகாரத்தில் வந்த முழுநிலவே ..... அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி .... அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் .... அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!! அகமதி - செருக்கு  அகோராத்திரம் - பகலும் இரவும்  அந்தகாரம் - இருள் கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை  கவிஞர் ; கவிப்புயல் இனியவன்