புதன், 14 ஆகஸ்ட், 2013

சுதந்திர ஹைக்கூக்கள் -10

நியாயமான  பேச்சு
நீதியான பேச்சு
பேச்சு சுதந்திரம்

**************************

சரியான எழுத்து
சமுதாய சீர் திருத்தம்
எழுத்து சுதந்திரம்

**************************

நியாயமான கூலி
எங்கும் உழைப்பது
உழைப்பு சுதந்திரம்

***************************

மக்கள் மன்னர்கள்
மக்களுக்கே ஆட்சி
அரசியல் சுதந்திரம்

****************************

நல்ல தலைவன்
நல்ல ஆட்சி
வாக்கு சுதந்திரம்

***************************

விரும்பிய கல்வி
விரும்பிய வேலை
மாணவன் சுதந்திரம்,

****************************

அடைபட்ட கூடு
பறக்க துடிக்கிறது
கிளியின் சுதந்திரம்

*****************************

கலப்பு இல்லாமல்
மரபு மாறாமல்
மொழி சுதந்திரம்

*****************************

அரசியல் தலைவர்
சுதந்திரமாக நடமாடுதல்
தூய சுதந்திரம்

****************************

மதம் மொழி அற்றது
சாதிவேறுபாடு அற்றது
மனித சுதந்திரம் 

கல்லால் எறிகிறாய் ....!!!

காதலில் கண்ணாம்
பூச்சியிருக்கும்
காதல் கண்ணிருந்தால்
நீ ஏன் விளையாடுகிறாய் ...?

உன்னை காதலித்த
தினம் என் வாழ்க்கை
மாறிய தினம் .....!!!

நான் கண்ணாடியாக
இருக்கிறேன் -நீயோ
கல்லால் எறிகிறாய் ....!!!

கஸல் ;355

நீ -மாறிவிடாதே ,,,,!!!

நீ வரும் பாதையை 
பார்த்துக்கொண்டு இருப்பது 
என் வேலையாகி விட்டது ...!!!

உன்னை என்று பார்த்தேனோ 
அன்று கையெழுத்தும் மாறியது 
தலையெழுத்தும் மாறியது 
நீ -மாறிவிடாதே ,,,,!!!

காற்றாக வருவாய் என்று 
பட்டமாக பறக்கிறேன் 
மழையாக பொழிகிறாய் ...!!!

கஸல் 354

கவிதைக்கு தான் கற்பனை வேண்டும்

நீ வானம் 
நான் நீர் 
அழுதுதானே 
ஆகவேண்டும் ....!!!

கவிதைக்கு தான் 
கற்பனை வேண்டும் 
காதலுக்கு இல்லை ...!!!

வைரமாக இருந்து 
மினுங்க வேண்டிய நீ 
கண்ணாடிபோல் 
மின்னுகிறாய் ....!!!

கஸல் 353   

காதல் பற்றி எரிகிறது

காதல் பற்றி எரிகிறது 
நீ கற்பூரம் போடுகிறாய் 

தந்தி தானே நிறுத்தம் 
நான் கடிதம் தானே 
போட்டேன் ....?

உன்னை ஆராதனை 
பூவாக நினைக்கிறேன் 
நீயோ கோயிலாக இருக்க 
விரும்புகிறாயில்லை ....!!!

கஸல் 352  

அடம் பிடிக்கிறாய் ....!!!

உன் எண்ண மாற்றத்தை
பொறுத்து கவிதை
மாற்றமுடியாது .....!!!

கண்ணீரை நிறுத்தும்
காதல் இதுவரை
தோன்றவில்லை ....!!!

எனது ஒவ்வொரு கனவும்
என் கவிதை -நீயோ
கனவில் வரமாட்டேன்
என்று அடம் பிடிக்கிறாய் ....!!!

கஸல் ;351  

அவள் சிரிச்சா போச்சு ....!!!

உன்னை மறந்து விட்டேன் ....
உன் நினைவுகளை .....
இழந்து விட்டேன்.....
உன்னோடு  பேசுவதை .....
நிறுத்திவிட்டேன்-என்று....!!!
பேசிய வார்த்தைகள் ....
அத்தனையும் செத்துவிட்டன....
நீ மீண்டும் ஓரக்கண்ணால்....
பார்த்து சிரித்த போது....
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு....
மட்டுமல்ல ....!!!
காதலன் பேச்சு -அவள்
சிரிச்சா போச்சு ....!!!        

உன் காதலை பெறுவதற்காக ...?

உன் காதலை
பெறுவதற்காக
பட்ட பாட்டை மீட்டு
பார்க்கிறேன் .....!!!

உன் வீட்டுப்பக்கம் வர
காரணம்இல்லாத  ஒன்றை
காரணமாக்கி வருவேன் ....!!!

உன் அருகு வீட்டில்
அந்த தெருவில் இல்லாத
ஒருவரை உன் வீட்டை
பார்த்தபடி விசாரிப்பேன் ....!!!

அப்படியாரும் இல்லை
என்று சொன்னபடி -உன்
பெயரை அழைத்து கூப்பிடுவர்
என் நோக்கம் நிறைவேறும்
நீ வருவாய் ....!!!

உன்னை பார்த்ததே
பாக்கியம் என்று நான்
சென்றுவிடுவேன்
காலத்தில் நீயும் உணர்ந்து விட்டாய்
அயலவரும் புரிந்துவிட்டார் ...!!!

இப்படி சின்ன சின்ன
குறும்புகளை செய்துதான்
உன்னை அடைந்தேன்
 இத்தனை வருடங்களுக்கு பின்
அந்த நாள் நினைவை மீட்பதில்
ஒரு சுகம் உயிர் உள்ளவரை
இருக்கத்தான் செய்கிறது ..!!!

உன் ஈரமான பார்வைதான்..... ?

உன் 
கண்ணில் இருந்த .....
ஈரமான பார்வைதான்..... 
என் இதயம் என்னும்...... 
மண்ணில் விழுந்து ....
காதல் என்னும் பயிரை..... 
உருவாக்கி வைத்தது ....!!!

உன் 
அன்பான் வார்த்தைகள் 
காதல் என்னும் பயிருக்கு 
வளமான தரமான 
உரமாக வந்து வளர வைத்தது ....!!!

உன் 
நினைவுகள் கனவுகள் 
சிறு மரமாக இருந்த 
காதலை விருட்சமாக்கியது ....!!!

உன் 
வலியான வார்த்தைகள் 
இடையிடையே காதல் மரத்தில் 
இலையுதிர்வை ஏற்படுத்தின 
என்றாலும் -நம் காதல் 
மரம் ஒன்றும் முருங்கை 
மரமல்ல விரைவில் 
முறிவதற்கு .......!!!    


உண்மைக்காதல் காமத்துக்கு ஏங்காது ....!!!

நீண்ட நாளுக்கு பின் ...
அவர்கள் இருவரும் ....
சந்திக்கின்றனர் .....!!!

தனிமையான இடம் ....
இடையூறுகளும் ....
எதுவுமில்லை ....
நீண்டநாள் எதிர்பார்த்த ...
சந்தர்ப்பம் -அவளும் ...
ஆவலுடன் -இவனும் ...
ஆவலுடன் காத்திருந்தனர்....!!!

மாலைசூரியன் மறைகிறான் 
பறவைகளும் தம் இருப்பிடத்துக்கு 
செல்கின்றன 
பறவைகள் கூட ஜோடியாக 
தான் செல்கின்றன அந்த 
காட்சியை அவள் ஓரக்கண்ணால் 
பார்க்கிறாள் ...!!!

இதமான நேரம் 
சுகமான பொழுது ...!!!
அவன் நெருங்க 
அவள் விலக அழகான 
ஒரு ஊடல் ...!!!

உண்மைக்காதல் காமத்துக்கு 
ஏங்காது ....!!!
உன்னதமான ஒரு முத்தத்திற்கு 
ஏங்கியது .....!!!                                

சிறப்புடைய இடுகை

அழுதவலி வலி புரியவில்லை .....

பிறந்தவுடன் ..... அழுங்குழந்தையே.... உயிர் வாழும் .....!!! இப்போதுதான் .... புரிகிறது ..... உன்னை பிரியும்போது .... அழுவதற்கு ..... ...