இடுகைகள்

செப்டம்பர் 16, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலிக்கிறாயா ...?

இரும்பை காந்தம் கவரும் ..... எறும்பை கரும்பு கவரும் ..... காரணம் இல்லாமல் பேசினேன் ..... காதலிக்கிறாயா ...? கண்டுபிடித்துவிட்டான் நண்பன் ....!!! + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை கவிதை எண் 22

காதல் பிரியாத புதிராய்

கண்ணால் தோன்றிய காதலுக்கு  ..... கண்ணுறு பட்டுவிட்டது ..... கண்ணுக்கு தெரியாத காதலுக்கு .... கனவு தான் மிஞ்சியது ..... காதல் பிரியாத புதிராய் ....!!! + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை கவிதை எண் 21

காரணத்தோடு பிரிந்தாலும்

நீ காரணத்தோடு பிரிந்தாலும் ..... நான் காலமெல்லாம் காதலிப்பேன் .... எப்படியும் வாழ்வது உன் புத்தி .... உன்னோடே வாழ்வது என் பக்தி .... தனியே இருந்தாலும் நினைவில் -நீ  + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை  கவிதை எண் 20

நான் அழகில்லை

சிரித்து சிரித்து பேசியவள் .... மற்றவர்கள் சிரிக்கும் படி ..... வைத்துவிட்டாள்.....!!! நான் அழகில்லை தான் ... நீ அழகாக இருப்பதால் ....!!! + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை  கவிதை எண் 19

காத்திரு என்கிறாயே .....!!!

என்னவளே உறக்கத்தை  தொலைக்கும் அளவுக்கு .... நினைவுகளை தந்துவிட்டு ..... கனவில் இன்று வருவேன் ... காத்திரு என்கிறாயே .....!!! + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை  கவிதை எண் 18

செயலிழந்து வாழ்கிறேன் ....!!!

நீ சிரித்துவிட்டு போய்.... விட்டாய் நானோ ..... செயலிழந்து வாழ்கிறேன் ....!!! நீ அழுதுவிட்டு போயிருந்தால் ..... நான் இறந்துகொண்டிருப்பேன்.... காதல் இன்பத்தில் துன்பம் ....!!!

பெண் ஒருத்தி ....

பெண் ஒருத்தி .... தன் காதலை காப்பாற்ற  .... எத்தனை துன்பங்களையும் .... தாங்கிக்கொள்வாள் .....!!! ஆண் ஒருவன் ..... தன் காதலை காப்பாற்ற  .... எத்தனை அவமானங்களையும் .... தாங்கிக்கொள்வான் ....!!! + காதல் இன்பமும் துன்பமும் 

காதலின் இன்பமும் துன்பமும் ...!!!

உன் மீது கொண்ட .... ஆசையும் .... இன்பமும்  .... காதலின் வலிக்கு.... காரணம் என்பதை .... உணர்ந்தேன் .....!!! காதலுக்கு .... இரு வலிகள் .. உன்னால் எனக்கு .... வரும் வலி .... என்னால் எனக்கு .... வரும் வலி .....!!!

மூன்று கடுகு கவிதை

உன்னை இன்பபடுத்த என்னிடம் இருக்கும் ஒரே சொத்து கவிதை @@@ காணமல் போன என்னை உன்னிடம் கேட்ட  ஒரு முட்டாள் நான்....!!! @@@ காகிதத்தில்  வரிகள்  வலிக்கிறது  கவிதையில் காதல் வலிக்கிறது ...!!!