இடுகைகள்

மே, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் எழுதுவது கவிதை இல்லை

நான் எழுதுவது கவிதை இல்லை ----------------------------------------------- கண்டதையும் கேட்டதையும்.... கண்டபடி கிறுக்குகிறேன்....... யார் சொன்னது நான்............... எழுதுவது கவிதை என்று ....? பயணம் பல செல்கிறேன்..... பயணத்தில் பல பார்க்கிறேன்..... பட்டதை  பார்த்த அனுபவத்தை....... வாழ்க்கை கவிதை  தலைப்பில்..... கண்டபடி கிறுக்குகிறேன்...... யார் சொன்னது நான்........ எழுதுவது கவிதை என்று ....? மரம் வெட்டும் போது...... மனதில் இரத்தம் வடியும்....... எழும் என் உணர்வை...... சமுதாய கவிதை  தலைப்பில்...... கண்டபடி கிறுக்குகிறேன்....... யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? அடிமாடாக அடித்து..... அடுத்த வேளை உணவுக்கு...... அல்லல் படும் குடும்பங்களை....... பார்ப்பேன் மனம் வருந்தும்.... பொருளாதார கவிதை தலைப்பில்..... கண்டபடி கிறுக்குகிறேன்.... யார் சொன்னது நான்........ எழுதுவது கவிதை என்று ....? காதோரம் கைபேசியை வைத்து..... கண்ணாலும் சைகையாலும்...... தன்னை மறந்து கதைக்கும்..... காதலரை பார்க்கிறேன்....... காதல் கவிதை  தலைப்பில்.... கண்டபடி கிறுக்குகிறேன

சின்ன சின்ன காதல் வரிகள்

சின்ன சின்ன காதல் வரிகள் -------------- என்ன கொடுமை பார்த்தாயா ......? உனக்குள் நானும் .... எனக்குள் நீயும் .... இருந்துகொண்டு ....... பிரிந்து விட்டோம் என்கிறோம்........! ^^^ நான் உயிரோடு ... இறக்க விரும்புகிறேன் ... தயவு செய்து என்னை .... காதலித்து விடு ....! ^^^ கண்ணில் காதலாய் ... விழுந்தாய் ... கண்ணீரால் நனைகிறது ... இதயம் ....! ^^^ நீ மறுத்தது ... என் காதலை இல்லை ...  ஊசலாடும் உயிரை .... ஒருமுறை நினைத்து பார் ....! ^^^ உன் வரவு என் பிறப்பு .... உன் பிரிவு என் இறப்பு .... என் நினைவஞ்சலியில்.... வாசகங்கள் ....! ^^^ கவிப்புயல் இனியவன்

அனைத்தையும் காதல் செய்கிறேன்

அனைத்தையும் காதல் செய்கிறேன் ---------------------------------------------- கோபப்படாமல் இருப்பதற்கு....! வெறுப்பில்லாமல் வாழ்வதற்கு....! பொறாமைப்படாமல் இருப்பதற்கு...! மனக் கவலையின்றி வாழ்வதற்கு ...! உடல் நலத்தோடு இருப்பதற்கு...! அமைதியோடு வாழ்வதற்கு...! மகிழ்வோடு வாழ்வதற்கு...! உழைத்து கொண்டே இருப்பதற்கு...! அறிவை தேடிக்கொண்டே இருப்பதற்கு...! தியானித்துக்கொண்டு இருப்பதற்கு...! எல்லாவற்றையும்காதலித்து கொண்டு ....... வாழ்வோமாக.......................! காதல் தனித்து பால்கவர்ச்சியல்ல.......! ^^^ கவிப்புயல் இனியவன் அனைத்தையும் காதல் செய்கிறேன்

நொடிதான் பார்த்தாள்....

கண்ணால் பேசி.... காலமெல்லாம் .... காத்திருக்கவைக்க .... என்னவளால் தான் .... முடியும் .....! சில ...... நொடிதான் பார்த்தாள்.... பல நொடிகள் பதறவைத்தாள்.... சிதறி விட்டது இதயம் ....! ^^^ கவிப்புயல் இனியவன்

காதல் தோல்வி கவிதைகள்

எதற்காக என்னை .... காதல் செய்ய தூண்டினாய் ...? எதற்காக என்னை உனக்காய் ... ஏங்க வைத்தாய் .....? எதற்காக என் நிம்மதியை .... தொலைத்தாய் .....? எதற்காக என்னை பிரிந்தாய் ...? எதற்காக உன் வலியையும் .... நான் சுமக்கிறேன் ....? இதற்கெல்லாம் காரணம் ... காதல் என்றால் அதுவும் .... எதற்காக என்றே தெரியவில்லை ...? ^^^^^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

அழகையே அலங்கரிப்பேன் ...!

அ அழகியே அன்பரசியே ... அழகுக்கெல்லாம் அழகியே... அற்புதங்களில் ஒன்றாய் உன் ... அழகையே அலங்கரிப்பேன் ...! ஆ ஆருயிரே ஆனந்தியே .... ஆறறிவை அழித்தவளே ... ஆயுளை அரிதாக்கியவளே... ஆயுள் வரை ஆதரிப்பேன் ....! இ இனியவளே இன்பரசியே .... இதயத்தில் இடம் பிடித்தவளே ... இரண்டர என்னோடு வாழ்பவளே ... இல்லறத்தில் நல்லறம் காண்பேன் ...! ஈ ஈரவிழி ஈஸ்வரியே ... ஈன்ற தாய் போல் என்னை ... ஈரத்துடன் காப்பவளே .... ஈரேழு ஜென்மம் நீதானடி .....! உ உயிரே உமையவளே .... உயிராய் நினைப்பவளே... உயிரில் கலந்தவளே ... உலகம் கவரும் காதலர் நாம் ...! ஊ ஊன் உறக்கம் இன்றி என்னை ... ஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ... ஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ... ஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....! எ என் இதய எழில் அரசியே ... எதிர் பாராமல் என்னை சந்தித்தாய் எதிர்காலமாகிவிட்டாய் -நீ எத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...! ஏ ஏகாந்தம் போற்றும் ஏஞ்சலே ... ஏற்றமடைய வைத்தவளே .... ஏற்ற துணையாய் வந்தவளே ... ஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....! ஐ ஐம்பொன் சிலை அழகியே .... ஐம்பொறியையும் அடக்கியவளே... ஐயம் இன்றி வாழ்வும் நாம்

மந்திரமில்லை

முதல் ........ காதல் மட்டுமல்ல ... தந்தையிடம் முதல் அடி ஆசிரியரிடம்  முதல் திட்டும் மறக்க முடியாதவையே ...! தந்தையே நீர் திடீர் என எதற்காக கோபப்பட்டீர் ..? எதற்காக அந்த அடி அடித்தீர் ..? என்றெல்லாம் எனக்கு இன்றுவரை -புரியவில்லை ...! ஆனால் ..... அந்த அடிதான் எனக்கு..... கடைசி அடி என்பது....... வாழ்க்கையில் மறக்க ..... முடியாத அடி ....! ----------- தந்தை சொல் மிக்க மந்திரமில்லை கவிப்புயல் இனியவன் ------------

நம்பி விட்டேன் ....!

எதற்காக..... இதயத்தை முள்ளாய் .... வைத்துக்கொண்டு ... கண்ணை மலராய் .... வீசுகிறாய் ....! $$$$$ என் ...... காதல் நினைவு .... உன் காதல் வலி... எப்படி தாங்கும் என் இதயம் ....! $$$$$ நீ வார்த்தையால் .... காதல் செய்ததை .... நான் இதயக்காதல் .... காதல் செய்கிறாய்........ என்று நம்பி விட்டேன் ....! ^^^^^^ கவிப்புயல்

இறைவனோடு ஒரு தொடர்பாடல்

-------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- !!!.........இறைவனோடு ஒரு தொடர்பாடல்.......!!! ^^^^^^^^^ என் விஞ்ஞான அறிவை .... பயன்படுத்தி இறைவனோடு ... பேசுவதற்கு தொலைபேசியை ... கண்டு பிடித்தேன் - பலமுறை ... முயற்சித்தேன் மறுமுனையில் ... யாருமில்லை ......! நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒரு தொடர்பில் இருக்கிறார் ... சற்று நேரத்தின் பின் தொடர்பு ... கொள்ளவும் என்று கூட .... மறுமுனையில் இருந்து வரவில்லை .... இணைப்பு துண்டிக்கப்படவில்லை ....! என்ன ஆச்சரியம் .... ஒருநாள் மறுமுனையில் இறைவன் ..... யார் பேசுகிறீர்கள் என்று கேட்டேன் ... நீதான் பேசுகிறாய் என்றார் இறைவன் .... எத்தனை உண்மையான வசனம் அது ....! இறைவா தயவு செய்து ... இணைப்பை துண்டித்துவிடாதே.... உன்னிடம் நிறைய கேள்வி இருக்கு .... நீ துண்டிக்கும் வரையும் நான் ... துண்டிக்கபடமாட்டேன் என்றார் ... இறைவன் ......! எத்தனை உண்மையான வசனம் அது ....!!! உன் படைப்பில் ஏன் இத்தனை .... வேறுபாடுகள் - அறிவாளி ... அறிவிலி - உயர்ந்தவன் தாழ்ந்தவன் ... படித்தவன் படிக்காதவன் .... இன்

சிறுதுளி கண்ணீர் ....!

கண்களால் சித்திரம் .... வரைந்தவள் ..... கண்ணீரால் சித்திரம் .... வரைய வைக்கிறாள் ....! $$$$$ மூச்சை நிறுத்தினால்.. மட்டுமே மரணம் இல்லை. நீ பேச்சை நிறுத்தினாலும். மரணம் தான்......! $$$$$ உயிர் விட்டு போகும் ..... உடலுக்காக விடும் .... கண்ணீரை விட கொடுமை ... உயிராய் காதலித்தவர் ,,,, விட்டுப்பிரியும்போது .... ஓரக்கண்ணில் வடியும் ... சிறுதுளி கண்ணீர் ....! ^^^^^^ கவிப்புயல் இனியவன்

நினைவுகள் காதலிக்க தொடங்கிவிட்டன

கண்களால் தோன்றிய........ காதலை கவிதையால்...... வடிக்கிறேன்......... நீ கண்ணீரால் ....... எழுதச்சொல்கிறாயா........ ஒருமுறை என்னோடு...... பேசிவிடு..........................! காதல் ..... என்ன உடல் நலத்துக்கு......... கேடானதா.......? இப்படி ஜோசிக்கிறாய்........ காதல் செய்ய....? நீ ................ என்னை காதலிப்பாயோ..... இல்லையோ தெரியாது...... உன் நினைவுகள் என்னை...... காதலிக்க தொடங்கிவிட்டன......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 09

நீ இல்லையேல் கவிதையில்லை 02

கண்ணாடியில் நீயே.... உன்னைபார்த்து பேசுகிறாய் .... என்றுதான் இதுவரையும் .... நினைத்தேன் ....! என் உருவத்தை நினைத்து .... என்னோடு பேசுகிறாய் .... என கண்டுகொண்டேன் .....! நீ தூங்கிவிட்டு எழுந்த ..... போர்வை கசங்கியிருக்கும் .... வடிவத்தை பார் ...... இதய வடிவத்திலேயே .... சுருண்டு கிடக்கிறது ..... அத்தனை நினைவகளுடன் .... கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....! ++ கவிப்புயல் இனியவன் நீ இல்லையேல் கவிதையில்லை 02 

நீ இல்லையேல் கவிதையில்லை

நீ இல்லையேல் கவிதையில்லை ------------------------------- ஆயிரம் கவிதைகள் .... ஆயிரம் பின்னூடல்கள் .... ஆயிரம் கவிரசிகர்கள்..... பலநூறு சிறப்புகவிதை ....! அத்தனையையும் .... தாண்டிய சிறப்புகவிதை ..... என்னவள் சொன்ன வார்த்தையே.....! என் கவிதையை ... ரசித்து விட்டு சொன்னாள்..... இத்தனை கவிதையை...... எழுதிய உன் கையில்....... முத்தமிட்ட ஆசை......! அவளுக்கு புரியவில்லை..... அவள் இல்லையேல் எனக்கு...... கவிதையே இல்லை............! ++ கவிப்புயல் இனியவன் நீ இல்லையேல் கவிதையில்லை

அம்மா

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................அம்மா........................!!! எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......! ^^^ அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்...... அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........! ^^^ உலகின் தியாகி யார் என்று கேட்டேன்....... அன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........! ^^^ பிசைந்த சோற்றை அருவருக்காமல் ......... சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........! ^^^ எப்போது நினைத்தாலும் கண்ணீர்...... அன்னையை தவிர யாரும் இல்லை.....! @@@ இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன்