இடுகைகள்

அக்டோபர் 11, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதைக்கு ஒரு கவிதை

க - பிரமன் வி - அழகு தை - அலங்காரம் பிரமனை போல் படை ..... அழகு தமிழை இணை ..... அலங்காரமாய் பிறக்கும் .... கவிதை ...........!!! கவி - குரங்கு தை - அலங்காரம் குறும்பு தனங்களுடன்...... அலங்காரம் செய்தால் .... கவிதை பிறக்கும் .....!!! க - பிரமன் விதை - நடுகை படைப்புகளை ...... நட்டு விட்டால் ...... விருட்ஷமாகும் .... கவிதை ...........!!! க - பிரமன் (வி ) தை - அலங்காரம் படைப்புகள் என்பது ..... ஏதோ ஒரு கதை அதுவே கவிதை ........ ஆகிவிடுகிறது ...........!!! & கவிப்புயல் இனியவன் தமிழோடு விளையாடு 

பஞ்ச வர்ண கவிதைகள்

எனக்கு வாழ்க்கையே ..... வெறுத்து விட்டது ...... எனக்கு வாழ்க்கையே ....... பிடிக்கவில்லை ...... என்று வாழ்க்கை வெறுத்து ..... பேசுபவர்கள் ....... வாழ கற்று கொள்ளவில்லை ...... வாழ்க்கையை ஒரு வட்டத்துக்குள்   ..... கொண்டுவர துடிக்கிறார்கள் .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - வாழ்க்கை கவிப்புயல் இனியவன்

நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!

ஓடுகின்ற பேரூந்திலே ஓடி ஓடி  ஏறினாய் .... ஒற்றை கையால் உன்னை .... நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!! வேகமாய் வரும் ரயிலை ...... எதிராய் நின்று உன்னை .... நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!! பாழடைந்த கிணற்றுக்குள்  ...... நுனிவிரலில் நின்றுஉன்னை நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!! ஊட்டி வளர்த்த தாயை .......... நினைத்துப்பார்த்தாயா ...? தூக்கி வளர்த்த தந்தையை .... நினைத்தாயா...? உன்னை ...... நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!! உன்னை நாம் புகை படமாய் ...... பார்க்கிறோம் .......!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன் 

அறுதியான நம் காதல் .....!!!

நீ ... எனக்கு ... கிடைக்க போவதில்லை ..... உறுத்தியாகி விட்டது ..... அறுதியான நம் காதல் .....!!! என்னதான் ...... சொன்னாலும் ..... உன்னை கண்டவுடன் ..... பாழாய் போன மனசு ...... உன்னுடன் பேச துடிக்கிறது ..... அற்ப ஆசையுடன் ..... ஏங்குகிறது .........................!!! + கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

மறக்க நான் முயற்சிக்கிறேன் ....!!!

உன்னை மறப்பதற்கு ....... என்னை மறக்கவேண்டும் ..... என்னை மறப்பதற்கு ..... உன்னை மறக்க வேண்டும் ...... என்ன சொல்கிறேன் என்று ..... புரியவில்லையா ......? எனக்கும் புரியவில்லை ..... உன்னை எப்படி மறப்பது ....? முடிந்தால் ஒரு உதவி செய் ..... என்னை நீ மறக்க என்ன ..... செய்தாய் ...? சொல் உன்னை ..... மறக்க நான் முயற்சிக்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை