இடுகைகள்

ஜூன் 9, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணீரை நிரப்புகிறது ....

எத்தனை கவிதை எழுதினாலும் ... முடியவில்லை நிறுத்த ... உலகில் பெரிய தொடர் கதை .... உன்னை பற்றிய கவிதை ....!!! ஒரு நினைவை மறக்கிறேன்.... மறு நினைவு கவிதையாய் ... கண்ணீரை நிரப்புகிறது ....  + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

காதலில் பெரிய வலி ....!!!

போதுமடி ..... என் இதயத்தை .... மிதித்துக்கொண்டு திரிவது .... எத்தனைமுறை அதுதாங்கும்... என் இதயம் ஈரமுள்ளத்தால் .... உன் வலிகளை தாங்கிக்கொண்டு ... வாழ்கிறது ....!!! காதல் பிரிவு ஒன்றும் .... பெரிய வலியில்லை.... என்னை தெரியாததுபோல் .... நீ நடந்துகொள்வதுதான் .... காதலில் பெரிய வலி ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

அக்கறையில்லை ....!!!

உனக்கு இரு வழிதான் உண்டு ... என்னை காதலிப்பது ... என்னை கொல்லவைப்பது....!!! உன் புன்னகை ... என் அனைத்து உறவையும் ... எதிரியாக்கி விட்டது ....!!! நான் இக்கரை ... நீ அக்கரை அதுதான் நீ காதலில் .. அக்கறையில்லை ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;805

உன் நினைவுகள் ....!!!

உன்னை காதலித்து ... வெய்யிலில் பூத்த பூ ... ஆகிவிட்டேன் .....!!! உன்னை காதலித்த நாள் .... ஆத்மா என்னை விட்டு .... போய்விட்ட நாள் ....!!! இருண்டிருக்கும் ... இதயத்தின் சிறிய ஒளி .... உன் நினைவுகள் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;804