இடுகைகள்

செப்டம்பர் 28, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அழைக்க மாட்டாயா ...?

ஞாயிறு- முகமுடையாள் திங்கள்- உடல் அழகுடையாள் செவ்வாயால்- மெல்ல சிரித்தாள் மாதுருபாகன்- மயங்கினான் காதலில் வியாக்கியானம் செய்கிறாள் எனக்கு குரு- போல் ... நான் துடிக்கிறேன் தூரத்து வெள்ளி- போல் சனியனே- வந்து விடு என்றாவது அழைக்க மாட்டாயா ...?

பிரிவும் காதலில்

பிரிவின் வலியை நீ தாங்குவாய் என்றால் பிரிவை நான் ஏற்கிறேன் நீ இல்லாத ஒரு வறண்ட வாழ்கை கொடூரம் தான் .. என்ன செய்வது பிரிவும் காதலில் ஒரு அங்கம் தானே ....!!!

Haikoo -05

மரம் பரவசப்பட்டது கிளையெல்லாம் ஜோடிக்கிளிகள்

Haikoo 04

எனக்கும் உனக்கும் தெரியாமல் அழுதேன் கனவில்

Haikoo-03

நிமிடத்துக்கு மாறும் சிரிப்பு அழுகை காரணம் வேறென்ன..? காதல்...!

Haikoo -02

உடல் உயிர் கொல்லி எயிற்ஸ் உள உயிர் கொல்லி காதல்

Haikoo-01

அப்பா மின்னல் அம்மா மழை குடும்பசண்டை

யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....?

கண்டதையும் கேட்டதையும் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? பயணம் பல செல்கிறேன் பயணத்தில் பல பார்க்கிறேன் பட்ட பார்த்த அனுபவத்தை வாழ்க்கை கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? மரம் வெட்டும் போது என் மனதில் இரத்தம் வடியும் எழும் என் உணர்வை சமுதாய கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? அடிமாடாக அடித்து அடுத்த வேளை உணவுக்கு அல்லல் படும் குடும்பங்களை பார்ப்பேன் மனம் வருந்தும் பொருளாதார கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? காதோரம் கைபேசியை வைத்து கண்ணாலும் சைகையாலும் தன்னை மறந்து கதைக்கும் காதலரை பார்க்கிறேன் காதல் கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? சின்ன வயதில் எல்லோருக்கும் காதல் தோல்வி வரும் -அதை மீட்டு பார்க்கும் போது உயிரே வலிக்கும் .வந்த வலியை கொண்டு காதல் தோல்வி கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன்

கண்ணீர் ஆக்கியது நீ ....!!!

நிலா உன்னை கண்டதால் வருத்தபடுகிறது -என்னை காத்திருப்பதை நினைத்து ...!!! நான் பாதை நீ தூரம் காதல் தான் கால் பயணம்தான் முடியவில்லை ...!!! இது கண்ணீர்  கதை இல்லை நம் காதல் கதை கண்ணீர் ஆக்கியது நீ ....!!! கஸல் 501

காதல் மிரட்டி வரகூடாது ...!!!

காத்திருக்கிறேன் காதல் வந்தது நீ வந்தாய் இருந்த காதலும் போனது ....!!! உன்னை விட்டால் என்னை காதலிக்க யாரும் - என்று நினைக்கிறாய் அது காதல் இல்லை ...!!! உனக்கு பயந்து என் வீட்டாரே வந்து விடார்கள் உன்னை பெண் பார்க்க ... காதல் மிரட்டி வரகூடாது ...!!! கஸல் 502