இடுகைகள்

பிப்ரவரி 5, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலே ஒரு கோயில்

காதல் என்றாலே பொய் இருந்தால் தான் வாழமுடியும் .அது கடவுளுக்கு கூட பயப்பிடாது   காதலை சந்திப்பதே அதன் ஒரே நோக்கம்   கவிதை   ----------------- கோயிலுக்கு போகிறேன்   என்று சொல்லி விட்டு   காதலர்கள் செல்வது   காதலே ஒரு கோயில்   காதலர்கள் அதில் தெய்வம் ...!!! --------------------- கே இனியவன்

மரண வலிதானே

காதலில் ஒவ்வொரு நொடி தாமதமும் காதலருக்கு உயிர் கொல்லிதான் .... கவிதை   --------------------- உன் தொலைபேசியை   நிறுத்தி வைக்காதே   என் இதயம் கொஞ்சம்   கொஞ்சமாக சாகிறது   அந்த சில நிமிடங்கள்   மரண வலிதானே --------------------------------- கே இனியவன்

திருமணத்தின் ஒத்திகை

காதலர் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும்   ஒருவகையில் திருமணத்துக்கு முந்திய திருமண   ஒத்திகைதான் ..... கவிதை   --------------------------- "கோயில் சென்றோம்   அர்ச்சனை செய்தோம்   கும்பிட்டோம்   எனக்கு நீயும்   உனக்கு நானும்   யாருக்கும் தெரியாமல்   வைத்த குங்கும பொட்டு திருமணத்தின் ஒத்திகை தானே " ----------------------- கே இனியவன்  

மறு திருமணம்

காதலில் தோற்றவர்கள் அனைவரதும் இதயம் ஒரு தாஜ்மகால் தான் - என்றார் ஒரு கவிஞன் நான் சொல்லுகிறேன் ....இப்படி "மறு திருமணம் " ----------------------------- மனத்தால் ஒருவரை விரும்பி உடலால் வேறொருவரை திருமணம் செய்தவர்கள் -அனைவரும் மறு திருமணம் செய்தவர்கள் ------------------------------ கே இனியவன்

தா என் உயிரே ....!!!

நிச்சயம் சொல்வேன்  உன்னோடு வாழவேண்டும்  என்றால் என்னை காதலித்து  கொள் -இல்லையேல்  உன் படியில் இறக்கும்  பாக்கியத்தை என்றாலும்  தா என் உயிரே ....!!!

துடித்து விட்டேன் அன்பே

என் தொலை பேசியில் வேறு அழைப்புகளாய் வருகிறது கோபத்தில் தூக்கி எறிகிறேன் உன் அழைப்பு வருகிறது துடித்து விட்டேன் அன்பே தொலைபேசியை தூக்கிய படி

சிரித்த படி பேசுகிறாய் ....!!!

என்னை வழி அனுப்பி விட்டு வழியே விழி வைத்து கொண்டு விழி முழுதும் கண்ணீருடன் இருக்கிறாய்  -உன் கண்கள் குளமாகி விட்டாலும் தொலைபேசியில் சிரித்த படி பேசுகிறாய் ....!!!

துடிப்பில் இருப்பவள் -நீ

எனக்கு தெரியும் என்னை விட என்னில் துடிப்பில் இருப்பவள் -நீ தான் வேண்டுமென்றே சண்டை இடுகிறாய் - பின் சமாதானம் செய்கிறாய் -உன் சமாதானம் கூட எனக்கு காதல் ஆராத்தனை