இடுகைகள்

ஜனவரி 11, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் லிமரைக்கூ

முற்களின் நடுவே  ரோஜா இரத்தம் கையில் வடிய பறித்து கொடுத்தார் காதலியின் ராஜா ^^^ மாப்பிளைக்கும் பணம் காலமாய் காதல் செய்தவரின்   மாறியது குணம் ^^^ கவிப்புயல் இனியவன் காதல் லிமரைக்கூ

காதல் சென்ரியூ

பெண் பார்க்கும் படலம்  இன்ப துன்ப அதிர்ச்சி  நண்பனின் காதலி  ^^^ திருமண வீட்டில்  இழவு செய்தி  மணப்பெண் ஓட்டம்  ^^^ காதல் தோல்வி  தாடி வளர்ப்பு  சலூன் காரன் புலம்பல்  ^^^ பொய் சொன்னால்  மெய் மறக்கும்  காதல்  ^^^ கவிப்புயல் இனியவன்  காதல் சென்ரியூ

அதிசயக்குழந்தை - பூதம்

அதிசயக்குழந்தை - பூதம்  ------- ஒட்டு துணிகூட இல்லாமல் ... பிறந்த மேனியோடு கட்டாந்தரையில் .... புழுதி மண்ணுக்குள் உருண்டு பிரண்டு .... விளையாடிகொண்டிருந்தான் .... அதிசயக்குழந்தை ....... டேய் எழுந்திரு என்று அதட்டினேன் ... எதற்கு என்று கேட்டான் அவன் ....!!! மண்ணுக்குள் விளையாடுகிறாயே .... உடம்பு முழுக்க அழுக்கு படுத்தே ... என்றேன் .... நீங்க மட்டும் அழுகில்லையோ...? என்றான் அவன் - மேலும் சொன்னான் .... ஆசானுக்கு  நான் சொல்வதா ...? ஊழ்வினை உடம்பே அழுக்குதான் .... பஞ்ச பூத கூட்டுத்தானே உடம்பு ....!!! மனத்தின் அழுக்கை நீக்க கண்ணீரால் (தண்ணீர் ) கழுவுகிறீர்கள் .... உடலின் அழுக்கை நீக்கவும் ... தண்ணீரால் கழுவுகிறீர்கள் .... கோபப்படும் போது " நெருப்பாய்" கொதிக்குறீங்க .. உள்ளத்தை துளைக்கும்  சொல்லை ... காற்றோடு கலக்கிறீங்க .... உங்களின் அசுத்தம் ஆகாயத்தையும் ... அசுத்தமாக்கும் போது நான் இந்த மண்ணில் புரளுவது மட்டும் உங்களுக்கு அழுக்காய் தெரிகிறதோ ....? என்றான் - அதியக்குழந்தை.....!!! போதும் போதும் உன் வியாக்கியானம் .. என்று கூறிக்கொண்டு ஒரு சிறு த

அதிசயக்குழந்தை

அதிசய குழந்தை அவன் ... ஆசான் நான் ... என்னைவிட அவனே முன்னுக்கு " அ " நான் "ஆ " இந்த குழந்தை இப்படியெல்லாம் .... பேசுமா....?  சிந்திக்குமா ...? நம்ப முடியவில்லை என்போர் ... இந்த கவிதையை மூடிவிட்டு போகலாம் ....!!! இந்த குழந்தை என்னதான் சொல்லப்போகிறது என்பதை ... பார்க்க விரும்புவோர் .... பொறுமையோடு காத்திருந்து .... தொடராக வரும் வசனக்கவிதையை .... பாருங்கள் .....!!! அதிசயக்குழந்தை .... எப்படி இருப்பான் ...? ஆசான் நேரான சிந்தனையில் ... பேசினால் அவன் எதிர் சிந்தனையில் பேசுவான் . ஆசான் எதிர் சிந்தனையில் பேசினால் அவன் நேர் நித்தனையில் ... பேசுவான் - ஆனால் அர்த்தம் இருக்கும் ....!!! ஆன்மீகம் பேசுவான் அரசியில் பேசுவான் இல்லறம் பேசுவான் எல்லாமே பேசுவான் இலக்கண தமிழில் உரைப்பான் இந்தாங்கோ என்று பேச்சு தமிழிலும் பேசுவான் .... கசப்ப்னான உண்மைகளை உரைப்பான் ... இனிப்பான பொய்களையும் சொல்வான் ... மொத்தத்தில் அதிசய குழந்தை இடையிடையே அதிர்ச்சியை .... தருவான் என்பது மட்டும் உண்மை ....!!! ^ அதிசயக்குழந்தை    வசனக்கவிதை கவிப்புயல் இனியவன்