வியாழன், 30 ஜனவரி, 2014

ஒரு சாதனையாளனை வீணாக்காதீர்

சமுதாயத்தில் வலு இழந்தோருக்கு
சமூக கண்ணோட்டத்துடன் பார்
சமூக பொறுப்பு நம்முடையது
சமூகத்தின் கூட்டு வாழ்க்கையில்
சரி சமனாய் வாழ்வது நம் கடமை ...!!!

இரங்கி கேட்பவர்களுக்கு -நீ
இரக்கத்துடன் பிச்சை போடாதே
யாருக்கு யார் பிச்சை போடுவது ..?
எல்லோரும் ஒருவகையில்
பிச்சை காரரே ....!!!

அனாதை இல்லத்தில் வாழும்
குழந்தைக்கு தாய் அன்பு பிச்சையே
முதியோர் இல்லத்தில் வாழும்
பெற்றோருக்கு பிள்ளை அன்பும்
பிச்சையே
உயிர் நட்பு பிரிந்தால் -நட்பும்
ஒருவகையில் பிச்சையே ...!!!

கண் இழந்தோர் .கால் இழந்தோர்
பிற அங்கவீனர் கூட உழைத்து வாழும்
இவ் உலகில் -நல்ல உடழுளைப்பும்
திடகார்த்தமான வலுவும் உள்ள நீ
பிச்சை எடுக்கிறாய் .....!!!

நீ பிச்சை எடுக்க தகுதியானவன்
பொருளாதார பிச்சை -அல்ல
தன்னம்பிக்கை பிச்சை -நிமிர்ந்து
நில் துணிந்து செல் - உடம்பை வருத்து
நீயும் ஒரு சாதனையாளனே
இரங்கி கேட்டவுடன் பிச்சை போடாதீர்
ஒரு சாதனையாளனை வீணாக்காதீர்

பெற்றோரே ஒருமுறை வாரீர்

வெளி நாட்டு மணமகன்
வெளிநாட்டில் தான் திருமணம்
சுற்றத்தார் மத்தியில் புகழாரம்
திருமணம் சிறப்பாய் நடைபெற்றது
வாழ்க்கையும் வெளிநாடு பறந்தது ...!!!

சுற்றத்தாரின் பேச்சில்லை
உற்ற நண்பியின் ஆதரவுமில்லை
ஆறுதல் வார்த்தை சொல்ல
ஆனந்தமாய் வார்த்தை சொல்ல
அருகில் யாரும் இல்லை .....!!!

நான்கு சுவருக்குள் இன்பம்
அதே சுவருக்குள் துன்பம்
மாறி மாறி வாழும் சுவர்
வாழ்க்கை தான் வெளிநாட்டு
வாழ்க்கை வெறுத்தே போகிறது ...!!!

உற்ரத்தாரின் கொண்டாட்டம் இல்லை
சித்திமகளின் காதுக்குத்து இல்லை
மாமாவின் மகளின் பூப்புனிதம் இல்லை
கூட்டத்தோடு கோயில் செல்லும் சுகமில்லை
வாழ்த்துக்களுடன் கழிந்தன இவை ...!!!

ஊரில் நல்ல வரன் வந்தும்
என் பிள்ளையை வெளிநாட்டில் தான்
வாழவைப்பேன் என்று பெருமை போடும்
பெற்றோரே ஒருமுறை வாரீர்
மகளின் இயந்திர வாழ்க்கையை பாரீர் ....!!!

என்று தணியும் இந்த வெளிநாட்டு
மோகம் எப்போது நம்புவர் -இவர்கள்
உள்ளூர் உற்பத்தி நன்று என்று
கூடி வாழ்ந்த சமூகம் இப்போ
சிதறிக்கிடக்கும் அவலநிலை பாரீர் ...!!!

உயிர் போனால் அது உன்மடியில் போகனும்

எனக்கு உயிர் நண்பன் இல்லை
உயிராய் இருந்தவனும் முதுகில்
குற்றி விட்டான் - பதிலாக
இதயத்தில் குற்றியிருக்கலாம்
என்னை கொண்றிருக்காலாம்...!!!

வந்தாய் நீ தந்தாய் அன்பை
உன் அன்பை என்றாலும்
சற்று சந்தேகம் -நீ
நீர் குமிழியா ..? நீர் வீழ்ச்சியா ..?
சற்று தடுமாறியது மனம் ....!!!

உணர்ந்தேன் உன் அன்பை
என்னை விட என் குணங்களை
நன்றாக புரிந்து கொண்டாய்
எனக்கே இருந்த குணத்தை எனக்கே
தெரியாமல் அற்புதமாய் சொன்னாய் ...!!!

உள்ளத்தால் உண்மை சொன்னாய்
உள்ளத்தால் அன்பு தந்தாய்
உள்ளத்தால் கண்ணீர் விட்டாய்
உள்ளத்தால் என்னை வாழ்த்தினாய்
உள்ளமே உள்ளத்தை உயிராய் தந்தாய் ...!!!

உன்னுடைய  அன்பால் உயிர் பெற்றேன்
உயிரே போகும் வரை உன்னுடம்
உயிர் நண்பனாய் இருக்க துடிக்கிறேன்
உயிர் போனால் அது உன்மடியில் போக
உயிராய் துடிக்கிறேன் அன்பே நட்பே ...!!!

என்னை வதைக்கிறது ...!!!

கவிதை எழுதுகிறேன்
சில நேரம் அவள் வருகிறாள்
சில நேரம் கவிதை வருகிறது
இரண்டும் என்னை வதைக்கிறது ...!!!

நீ எங்கு இருக்கிறாய் ...?

உன்னிடம் காதல் கொண்டு
பழகினேன் என்னிடம் உன்
காதலும் சேர்ந்து இருக்கிறது
நீ எங்கு இருக்கிறாய் ...?

உணர்வு நான் வெளிப்பாடு நீ

நான் எழுதும் கவிதையில்
வரிகள் நான் வார்த்தைகள் நீ
ஆரம்பிப்பது நான் முடிப்பது நீ
உணர்வு நான் வெளிப்பாடு நீ

என்னிடம் நீ நிறைந்து இருக்கிறாய் ..!!


நிச்சயமாக எனக்குள் நீ
உனக்குள் நான் இருந்தும்
நமக்குள் ஏன் இடைவெளி ..?

நான் காதலில் துடிக்கிறேன்
என்றால் துடிக்க பண்ணியது -நீ
என்னை வதைக்கும் அளவுக்கு
என்னிடம் நீ நிறைந்து இருக்கிறாய் ..!!

நினைவால் இறப்போம் ...!!!

உன்னை நினைக்காத நேரம்
நான் இறந்த நேரம்
வா ,,,இருவரும்
நினைவால் இறப்போம் ...!!!

கணணி திரையில் உன்
முகம் நிலையாக இருக்க
மனத்திரையில் அசையும்
படமாகும் ....!!!

இதயத்தில்
இரத்தோட்டம் நீ
எனக்கோ இரத்த சோகை...!!!

கஸல் 635

நினைவில் கோலம் போட்டேன்

அன்பை தந்தேன்
காதலை தந்தாய்
தண்ட வாளத்தில்
காதல் பயணம் ....!!!

காதல் சுவர் நீ
காதல் படம் நான்
தூசி பிடிக்கிறது காதல்

நினைவில் கோலம்
போட்டேன் -கனவில்
புள்ளி போட்டேன்
கண்ணீர் கோலத்தை
அழிக்கிறது ....!!!

கஸல் 634

கண்ணீரால் முடிந்தது ...??

இதயமும் இதயமும்
சேர்ந்தால் காதல்
உன் கணக்கில்
பிழைக்கிறதே...???

பன்னீரால் காதலிக்கிறேன்
கண்ணீரால் விடைதருகிராய்
காதல் நீரும் நெருப்பும்

கண்ணிலே தோன்றி
இதயத்தில் முடியும்
காதல் -எப்படி ..?
கண்ணீரால் முடிந்தது ...??

கஸல் 633

ஏன் உனக்கு காதல் வரவில்லை ...!!!

தாமரை இலை நீ
காதல் தடாகம் நான்
தாமரை இலையில்
தண்ணீர் நம் காதல் ...!!!

சமுத்திர ஆழம் காதல்
சமுத்திர கப்பல் நாம்
ஓட்டை விழுந்த படகில்
பயணம் செய்கிறோம் ...!!!

எறும்பு ஊர கற்குழியும்
என் நினைவுகள் ஏற
ஏன் உனக்கு காதல்
வரவில்லை ...!!!

கஸல் 632

என்னை சிறையில் வை

என் கண்ணீரால் 
காதல் வளர்கிறது 
சந்தோசம் உன் காதல் 
மரம் வளர்கிறது

நீ அருகில் நின்றால் 
பேசுவத்தில்லை
நான் போசும் போது 
நீ அருகில் இல்லை 

உன் கண்கள் காவல் 
செய்யும் போது 
நான் கள்வனாகிறேன்
என்னை சிறையில் வை 

கஸல் தொடர் 22

புதன், 29 ஜனவரி, 2014

காதல் வானில் பறப்போம்

உருவத்தால் வேறுபாடு
நிறத்தால் வேறுபாடு
எண்ணத்தால் வேறுபாடு
இருந்தாலும் காதல்
வேறுபடகூடாது....!!!
ஒருபக்கமாக இருந்து
பயனேது வா அன்பே
காதல் வானில் பறப்போம்
----------
எல்லாம் உனக்குத்தான் அன்பே 05

ஆயிரம் கண் கொண்டவள் -நீ

நான் கண்ட கண் அழகி -நீ
ஆயிரம் கண் கொண்டவள் -நீ
சிறு வயதில் ஆத்தா சொன்ன
ஆயிரம் கண்ணுடைய ஆத்தா
என்று சொன்னது -இப்போ நினைவு
வருகிறது -நிச்சயம் ஆத்தா
சொன்னது உண்மைதான் ...!!!

-------------
எல்லாம் உனக்குத்தான் அன்பே 04

என்னை உயிர்ப்பித்துவிடு ...!!!

உயிரே - நீ
திடீரென என்னை பார்த்த
பார்வையில் விபத்துக்குள்
சிக்கி அவசர சிகிச்சையில்
இருக்கும் நோயாளி
போல் ஆகிவிட்டேன் ...!!!
குற்றுயிரும் குறை உயிருமாய்
இருக்கும் என்னை ஒருமுறை
மீண்டும் பார்த்து விடு
என்னை உயிர்ப்பித்துவிடு ...!!!
-------------

எல்லாம் உனக்குத்தான் அன்பே -03

உன் கண் மின்சாரத்தில் ...!!!

ஒற்றை கண்ணால் பார்த்ததில்
நான் பித்தன் ஆனேன் -இரட்டை
கண்ணால் பார்த்திருந்தால்
செத்தே போயிருப்பேன்
உன் கண் மின்சாரத்தில் ...!!!
இப்போ நான் ஒரு தலையாக
காதலிக்கலாம் -நிச்சயம்
நீ என்னை இரட்டை கண்ணால்
பார்ப்பாய் ....!!!
----
எல்லாம் உனக்கு தான் அன்பே 02


எல்லாம் உனக்கு தான் அன்பே

நீ காதலித்தாலும்
நீ காதலிக்கா விட்டாலும்
எனக்கு ஒன்றும் கவலையில்லை
என் உயிர் உள்ளவரை உன்னை
காதலிப்பேன் -இதயம் முழுக்க
நிறைந்திருக்கும் -நீ
உயிராய் துடிக்கிறாய்
என் மூச்சு நிற்கும் போது
என் காதல் நிற்கும் -இந்த
கவிதை எல்லாம் உனக்கு தான்
அன்பே - என் கவிதைகள் உன்னை
காயப்படுத்த கூடாது
என் இதயம் காயப்படட்டும் ...!!!

************************
குறிப்பு ; ஒருதலையாய் காதலிக்கும்
இதயங்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ..!!!
தொடரும் இந்த வலிகள் ............................

நமக்கே காலம் மலரும்

பருவமடைந்த காலம் முதல்
பக்குவமாய் உன்னை
காதலிக்கிறேன்
பக்கத்தில் நீ வரும் போது
பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
இதயம்....!!!

பயம் ஒரு பக்கம் ஆசை
ஒரு பக்கம் படாத பாடு
படுகிறது -மனசு
பட்டுப்புழுவாய் துடிக்கிறது
மனசு ....!!!

பண்பாக வாழவிரும்பும்
காதலை பெற்றோர்
பண்புடன்  ஏற்றுக்கொள்வர்
பொறுத்திரு அன்பே
நமக்கே காலம் மலரும்

தூண்டில் போட்டு என்னை

தூரத்தில் நின்றே சிரித்தவளே
தூக்கத்தை என்னிடம் பறித்தவளே
தூண்டில் போட்டு என்னை கொள்கிறாய் ...!!!

தவுடு பொடியாக்கி விட்டது

காலமெல்லாம் காத்து வைத்திருந்தேன்
காதலிப்பதே இல்லை என்ற இறுமாப்பை
உன் கடைக்கண் பார்வை தவுடு பொடியாக்கி விட்டது

காதலித்து பார் ....!!!

தூக்கத்தை வரவழைக்க
தூக்க மாத்திரை போடு
தூக்கத்தை தொலைக்க
காதலித்து பார் ....!!!

காய் தான் கிடைத்தது

காத்திருந்தால் காதல் கனியும் என்றார்கள்
காத்திருந்தேன் - காய் தான் கிடைத்தது
தாய் சொல்லை கேட்டுவிட்டாள்...!!!

காதலால் காதல் செய் 07

காதல் ஒரு ஏக்க காற்று அடுத்து என்ன என்ன ..? என்று ஏங்க வைக்கும் உயிர் துடிப்பு இந்த நிலையில்
அவள் / அவன் திடீரென பார்த்தால் ...?

" உன் கண்ணும் என் கண்ணும் "
" பட்டு தெறித்த போது காதல் மின்னல் "
"பொறி பறந்தது -நீ என்னை பார்த்தாய் "
" நான் பறந்தேன் "

காதலால் காதல் செய் 04

இறைவனை உணர வேண்டும் தவத்தில் இருப்பவனுக்கு ஏக்கம் . காதலியை காண வேண்டும்
என்று காதலனின் ஏக்கம் .

"உன்னை பார்க்காமல் இருக்கும் "
"ஒவ்வொரு நொடியும் என் பார்வை "
" மங்கிக்கொண்டு போகிறது "
"என் விழித்திரை நீ "

தொடரும்

காதலால் காதல் செய் 03

அன்பு கொண்ட ஒரு செயல் நடைபெறப்போகிறது
வரப்போகிறது என்றால் தூக்கமே வருவதில்லை
அந்த நேரத்தில் ஒரு மனம் படும் பாடு அப்பாப்பா
சொல்லவே முடியாது ....!!!

" நீ வருகிறாய் என்றவுடன் "
" எனக்கு அருள் தரப்போகிறாய் "
" என் இதயம் "
'' உனக்கும் சேர்த்து துடிக்கிறது "
''என் இதயம் "
"எதற்கும் ஒரு அளவு உண்டு அன்பே "


தனி கவிதை தொடரும்

காதலால் காதல் செய் -02

காதலில் இருக்கும் இதயங்களின் செயற்பாட்டுக்கு
நிகர் ஏதுமில்லை அந்த இதயம் துடிக்கும் செயலுக்கு
வார்த்தையால் கூறி விடமுடியாது ....!!!

" நீ தலை குனிந்து செல்லும் போது "
" என் தலையே வெடித்து சிதறுகிறது "
" நம்பிக்கையுடன் காத்திருக்கிறது "
" என் இதயம் ஒரு சொல்லுக்காக "


தொடரும்

காதலால் காதல் செய்

இந்த உலகில் எல்லோரும் உன்னையும் .நீ எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்றால் ஒரே
வழி அனைத்தையும் காதல் செய் .காதல் இரு வேறுபட்ட பாலாருக்குரிய கவர்ச்சி செயல் அல்ல .
அது ஒரு பிரம்மம் . ஆம் காதலே கடவுள் ....!!!!!

" மனத்தால் உனக்கு அபிசேகம்
செய்கிறேன் - என் இதயத்தில்
தெய்வமாக நீ இருப்பதால் "


இந்த கவிதை ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்து அர்த்தம் வேறுபாடும் ...!!!

தொடரும் 

வியாழன், 23 ஜனவரி, 2014

நங்கூரமடி

காதல் கடலடி
காதலர் கப்பலடி
சந்தேகம் நங்கூரமடி

மூன்று வரி கவிதை -ஏன் தண்டித்தாய் ...!!!

இறுதியாக சிரித்தேன் உன்னோடு
சிரிப்பே சிறையாகி விட்டது மனதோடு
அறுதியாக ஏன் தண்டித்தாய் ...!!!

மலரும் காதல் பூ

உன்னோடு என் காதல் முடிந்தால்
என் மூச்சோடு முடியும் காதல்
மண்ணோடு மலரும் காதல் பூ

காதல் செய் காதலே கடவுள் -05

காலால் உதைத்தார் .இறைவன் 
அருளினார் என்கிறது புராணம் .காதலில் இருப்பவனுக்கு எப்படியும் திருமேனி பட்டால் அதுவும் இன்பம் தான் ....!!!

"வந்தால் உதைப்பேன் "
"என்று நீ சொல்லும் செல்லமான "
"சொல் கூட இன்பம் தான் "
"அப்படியென்றாலும் உன் மேனி "
" என்னில் படட்டுமே "


தொடரும்

காதல் செய் காதலே கடவுள் -04

இறைவனை உணர வேண்டும் தவத்தில் இருப்பவனுக்கு ஏக்கம் . காதலியை காண வேண்டும் 
என்று காதலனின் ஏக்கம் .

"உன்னை பார்க்காமல் இருக்கும் "
"ஒவ்வொரு நொடியும் என் பார்வை "
" மங்கிக்கொண்டு போகிறது "
"என் விழித்திரை நீ "

தொடரும்

காதல் செய் காதலே கடவுள் -03

அன்பு கொண்ட ஒரு செயல் நடைபெறப்போகிறது 
வரப்போகிறது என்றால் தூக்கமே வருவதில்லை 
அந்த நேரத்தில் ஒரு மனம் படும் பாடு அப்பாப்பா 
சொல்லவே முடியாது ....!!!

" நீ வருகிறாய் என்றவுடன் "
" எனக்கு அருள் தரப்போகிறாய் "
" என் இதயம் "
'' உனக்கும் சேர்த்து துடிக்கிறது "
''என் இதயம் "
"எதற்கும் ஒரு அளவு உண்டு அன்பே "


தனி கவிதை தொடரும்

காதல் செய் காதலே கடவுள் ..02

காதலில் இருக்கும் இதயங்களின் செயற்பாட்டுக்கு 
நிகர் ஏதுமில்லை அந்த இதயம் துடிக்கும் செயலுக்கு 
வார்த்தையால் கூறி விடமுடியாது ....!!!

" நீ தலை குனிந்து செல்லும் போது "
" என் தலையே வெடித்து சிதறுகிறது "
" நம்பிக்கையுடன் காத்திருக்கிறது "
" என் இதயம் ஒரு சொல்லுக்காக "

தொடரும்

காதல் செய் ..காதலே கடவுள் ....!!!!!

இந்த உலகில் எல்லோரும் உன்னையும் .நீ எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்றால் ஒரே 
வழி அனைத்தையும் காதல் செய் .காதல் இரு வேறுபட்ட பாலாருக்குரிய கவர்ச்சி செயல் அல்ல .
அது ஒரு பிரம்மம் . ஆம் காதலே கடவுள் ....!!!!!

" மனத்தால் உனக்கு அபிசேகம் 
செய்கிறேன் - என் இதயத்தில் 
தெய்வமாக நீ இருப்பதால் "


இந்த கவிதை ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்து அர்த்தம் வேறுபாடும் ...!!!

தொடரும்....... தொடரும்

குற்றுவது நீ

உன்  காதல் முள்ளாக நான்
இருப்பேன் குற்றுவது நீ
இரத்தம் வடிக்க நான் தயார் ...!!!

என் இதய நரம்புகள்

என் இதயத்தில் நீ போட்ட அழகு 
கோலம் தான் என் இதய நரம்புகள் 
அழித்து விடாதே இறந்து விடுவேன்

மீனாய் தவிக்கிறேன்

தூண்டில் கண்ணால் தூண்டில் போடுகிறாய்
துடித்து போகும் மீனாய் தவிக்கிறேன்
பாவம் காதல் மண்புழுவாய் இறக்கிறது

மூன்று வரி கவிதை -மூன்றெழுத்து

மூச்சு மூன்றெழுத்து 
காதல் மூன்று எழுத்து 
முடிவும் மூன்றெழுத்து 
- மூன்றும் சேர்ந்த அன்பே - நீயும் மூன்றெழுத்து

புதன், 22 ஜனவரி, 2014

நட்பு -சிறு வரியில் 05

நட்பின் சூரியன் நீ
உன் நட்பில் காயும்
எள்ளு நான் ....!!!
***********
தொகை விரித்து ஆடும் மயிலை விட
என் தோழனின் தோள் அழகு
*********
ஒப்பிட்டு நட்பை சொல்ல
நம் நட்புத்தான் இருக்க வேண்டும்
இதிகாசங்களும் புராணமும் வேண்டாம்
********
நடக்கும் காலம் முதல்
இறக்கும் காலம் வரை
தொடர்வது நட்பு மட்டும் தான் ....!!!
********
கல்லறையிலும் வாடாமல் இருக்கும்
பூ
நட்பும் ...!!!

நினைக்கதெரியாது...!!!

உன்னை நினைக்க தெரியும்
உன்னை மறக்க நினைக்கதெரியாது...!!!

இரு வரி கவிதை - கேட்டு விடாதே ...!!!

உனக்காக என்னை தருகிறேன் ..
எதற்காக என்று கேட்டு விடாதே ...!!!

இரு வரி கவிதை - நீ கண் சிமிட்டும்

நீ கண் சிமிட்டும் ஒவ்வொரு முறையும் 
நான் கண்ணால் புகைப்படம் எடுக்கப்படுகிறேன்

இரு வரி கவிதை - துடிக்கிறேன் ....!!!

உன்னோடு வாழவும் துடிக்கிறேன் -இல்லையேல்
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!!!

ஒருவரி கவிதைகள்

நான் நானாக இருக்கிறேன் இல்லை உன் வரவால் ..!!!

***********
உன்னை கண்டேன் தொகை மயில் ஆகியது மனசு ...!!!

***********
கண்ணால் கண்டத்தை ஏற்படுத்தியவள் நீ...!!!

***********
ஒரு வார்த்தையால் எனக்கு இரவை பகலாக்கினாய்...!!!

**********
அழகான உன் பெயரை சொல்லி அலங்கார 
திருவிழாவாக்கினாய் என் மனதை

உன் கண்ணில் கண்டேன்

உன் கண்ணில் கண்டேன்
என் மீது நீ கொண்ட காதலை
உன் மூச்சில் உணர்ந்தேன்
என் மீது நீ வைத்த உயிரை ...!!!

உன் சிரிப்பில் உணர்ந்தேன்
நீ என் மீது வைத்த சிறப்பபை
உன் பேச்சில் கண்டேன் -நீ
என் மீது கொண்ட
பேரானந்தத்தை....!!!

உன் நடையில் கண்டேன்
என் மீது நீ வைத்த நட்பை
உன் உடையில் கண்டேன்
நீ என் மீது வைத்த உணர்வை ...!!!

என்றாலும் காதலிக்கிறேன் ...!!!

உன்னை
கண்டேன் என்பதில்லை
என்னை
தொலைத்தேன் என்று
சொல் ....!!!

காதலால் காதல்
செய் -நீ காதலால்
கடினமாகிறாய்...!!!

உன்னோடு சேர்ந்து
வாழமுடியாது என்று
நிச்சயம் தெரியும்
என்றாலும்
காதலிக்கிறேன் ...!!!

கஸல் 630

என் தவறு தான் ....!!!

தூரத்தில் நின்றால் 
துக்கம் விசாரிக்கிறாய் 
அருகில் வந்தால் வலியை
தருகிறாய் ....!!!

எத்தனை நாள் உன்னை 
நினைத்து அழுவது 
இறைவா அவளை 
நினைத்து அழ இன்னும் 
அவள் வலியை தரட்டும் ...!!!

என்னிடம் இருக்கும் 
காதல் உன்னிடமும் 
இருக்கும் என்று நினைத்தது 
என் தவறு தான் ....!!!

கஸல் 628

காதல் பயிர் வளர்க்கிறாய் ...!!!

காதல் பரிசை புதிதாக 
தரமுடியும் நீயோ 
காதலை புதிதாக 
கேட்கிறாயே ....!!!

தவறு விட்டால் 
திருந்தலாம் -தவறே 
நீயாக இருந்தால் 
எப்படி திருத்துவது ...?

வளமான மண்ணில் 
பயிர் வளரும் 
கடற்கரை மண்ணில் 
காதல் பயிர் வளர்க்கிறாய் ...!!!

கஸல் 629

அழுவது வரமாகி விட்டது ...!!!

நீ காற்றாக இரு -நான்
காதல் பட்டமாக இருக்கிறேன்
தயவு செய்து நூலை அறுத்து
விடாதே .....!!!

நீ காதலில் ஓடி விளையாட
இதயத்தை தந்தேன் -நீ
ஓடி போய் விட்டாய் ...!!!

உன்னை நினைப்பது
வரமாக இருந்தேன்
அழுவது வரமாகி விட்டது ...!!!

கஸல் 627

உன்னை பார்க்க இரண்டு கண்உதிக்கும் சூரியன் நான்
மறையும் சூரியன் நீ
நமக்குள் காதல் .....!!!

நீ நடந்து வந்த பாதையை
தேடுகிறேன் -நீயோ
அழித்துவிட்டு போகிறாய்

உன்னை பார்க்க இரண்டு
கண் போதாமல் இருந்தது
இப்போ உன்னை நினைத்து
அழ இரண்டு கண் போதாது ...!!!

கஸல் 626

கண்ணீர் வருகிறது ...!!!

காதலுக்கு 
மாலை போட்ட 
முதல் ஆள் 
நீ தான் ....!!!

கல்லுக்குள் 
ஈரமுண்டு 
உன்னைப்போல்  

கண்ணில் 
காதல் வரவேண்டும் 
உனக்கு 
கண்ணீர் வருகிறது ...!!!

நீயும் நானும் காதல்

ஊசி முனைக்குள் 
புகுந்த ஒட்டகம் 
போல் -நம் 
காதல் ....!!!

நீயும்
நானும் காதல் 
மொட்டுக்கள் 

சோகத்தில் 
வீணை வாசித்தால் 
நாண்களாக
இருந்த நீ 
அறுகிறாய் ....!!!

சிறப்புடைய இடுகை

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநா...