இடுகைகள்

செப்டம்பர் 27, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமாதானம் ஆவாள்...............!!!

திட்டு வாங்குவாள் ..... சிலவேளை அழுவாள் ..... சில மணி நேரம் பேசமாடடாள் ...... அவளை சமாதான படுத்துவேன் ..... சின்ன சிரிப்போடு ....... சமாதானம் ஆவாள்...............!!! நீயும் என் அப்பாவும் ...... ஒருதாண்டா என்று திட்டுவாள் ..... ஒருகணம் உறைந்து போவேன் ..... அவள் குழந்தை குணத்தில் ...... அப்பாவாக பார்க்கும் அழகு ..... தூயநட்பிலேயே காணலாம் .....!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி  ஆண் பெண் நட்பு கவிதை  ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

தூயநட்பிலேயே காணலாம் .....!!!

நான் சுதந்திர பறவை ............!!!

அத்தனை நட்புகளும் ...... ஏதோ ஒரு நலன் தான் ...... உன் நட்பை எப்படி ..... வர்ணிப்பது .........? நீ எனக்கு தாயா ......? நீ என் தலைவியா ......? நீ என் வழி நடத்துனரா .....? நீ என் இறைவியா .....? மாஜங்கள் காட்டும் ...... மாஜ உருவ கருவி -நீ உருவம் தான் மாஜம்....... உன் செயல்கள் சிற்பம் ......!!! ஒரு அடைபட்ட இதயத்தில் ..... வாழ்ந்த என்னை ....... பறந்து திரியும் சிட்டு ..... குருவியாக்கியவள் -நீ நீ என்னருகில் இருக்கும் ... காலமெல்லாம் நான் .... சுதந்திர பறவை ............!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

அழகு தமிழ் பேசும் அழகி நீ

அவன் ---------- அழகு தமிழ் பேசும் அழகி நீ அலங்காரம் இல்லாவிடினும் அழகி நீ அகங்காரம் கொண்ட அழகி நீ அகட விகடமாய் பேசும் அழகி நீ அகத்தில் முழு நிலா அழகி நீ அகம் முழுதும் நிறைந்தவளே..... அழகுக்கு மகுடமாய் இருப்பவளே..... அகோரமாக்குதடி உன் நினைவுகள்..... அக்கினியில் எரியுதடி என் இதயம்..... அணைத்துவிடு காதல் கொண்டென்னை.......!!!  அவள் --------- அச்சப்படாதே அச்சுதனே.......... அகம்பை யான் உனக்கேதான்....... அகந்தையும் இல்லை ஆணவமும் இல்லை அடர்த்தி கொண்ட நம் காதல்........ அகிலம் போற்றும் காதலடா..........!!! அடைமழைபோல் இன்பம் தருவேன்....... அந்தகாரத்தில் இன்பம் தருவேன்...... அபலை என்னை ஏமாற்றிவிடாதே...... அற்ப ஆயுளாய் ஆக்கிவிடாதே.... அன்பரசனே நீ என் இன்பரசன்.........!!! &^& அகராதி சொற்களில் கவிதை கவிப்புயல் இனியவன்