இடுகைகள்

டிசம்பர் 30, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் பார்வைக்கு அஞ்சி ...

என் கவிதைகள் கண்ணீரை பேனா மையாக்கி .... கண்ணால் பேசியவை வரிகளாய்  ... வலிகளாய்  பிறக்கின்றன ....!!! என்னவளே ... நீ காலை மாலை பூக்கும் ... மலராக இருந்து விடு ... அப்போதுதான் வாடமாட்டாய் ...!!! உன் பார்வைக்கு அஞ்சி ... நீ அருகில் வரும்போது ... மறு தெருவுக்கு போகிறேன்...!!! + கே இனியவன் கஸல் கவிதை ;763

காதல் வலியுடன் இனிமை ...!!!

என் இதயத்தை - நீ களிமண்ணாக நினைக்கிறாயோ...? அதுதான் நீ இப்படியெல்லாம் ... இதயத்தை பிசைந்து பார்கிறாய் ...!!! நீ எப்படி வேண்டுமென்றாலும் ... இதயத்தை பிசைந்து கொள் .. எனக்கு சிறு கவலை -உனக்கு கை வலிக்குமே என்றுதான் ...!!! நீயும் வலியை சுமந்து பார் .. காதல் வலியுடன் இனிமை ...!!! + காதல் வலிக்கிறது கவிதை எண் -05

நான் காதலோடு இருக்கிறேன் ...

காதல் சோகத்தை மறக்க .... வைக்கவேண்டும் - நீயோ ... அடிக்கடி சோதித்து பார்கிறாய் .... காதல் ஒன்றும் அளவுகோல் ... கருவியல்ல - அளவிட முடியாத ... உணர்வு ....!!! நீ என்னை எவ்வளவு ... வேண்டுமானாலும் சித்திரவதை ... செய்துகொண்டே இரு .... தோற்கப்போவது -நீதான் நான் காதலோடு இருக்கிறேன் ... நீயோ காதலிப்பதோடு இருக்கிறாய் ...!!! + காதல் வலிக்கிறது கவிதை எண் -04

சுமையாக எடுத்துவிட்டாய் ...!!!

நன்மை தீமை ... இன்பம் துன்பம் .... அனைத்தும் சொல்வதும் ... கேட்பதும்  காதல் தான் ....!!! உயிரே இவற்றில் இலாப ... நட்டம் பார்க்காதே .... காதல் தோற்றுவிடும் .... நீ பிரிந்து விட்டாய் என்றால் ... தீமையையும் துன்பத்தையும் ... சுமையாக எடுத்துவிட்டாய் ...!!! + காதல் வலிக்கிறது கவிதை எண் -03

காதல் இரு சுவை கொண்டது ...

காதல் உள்ள இதயமே .... துடித்து கொண்டு இருக்கும் .... காதலை இழந்த இதயம் ... துடிதுடித்துக்கொண்டு இருக்கும் ....!!! காதலோடு வாழ்பவர்கள் .... சாதனையோடு வாழ்கிறார்கள் .... காதலை இழந்து வாழ்பவர்கள் ... சாத்தானோடு வாழ்கிறார்கள் ....!!! காதல் இரு சுவை கொண்டது ... காதல் இருக்கும் போது இனிக்கும் ... இல்லாதபோது கசக்கும் ....!!! + காதல் வலிக்கிறது கவிதை எண் -02

காதல் வலிக்குது

உன் ஒவ்வொரு பார்வைக்கும் ... ஒவ்வொரு அர்த்தம் இருந்தது ... உன் ஒவ்வொரு பேச்சுக்கும் ... ஒவ்வொரு கருணை இருந்தது ....!!! இப்போ ..... நான் அருகில் வரும் போது .... எங்கேயோ பார்க்கிறாய் .... நான் காதலோடு பேசுகிறேன் ... நீயோ காரணமில்லாமல் ... பேசுகிறாய் ....!!! இதயம் மட்டும் வலிக்கவில்லை ... காதலும் வலிக்கிறது ...!!!