இடுகைகள்

நவம்பர் 7, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்லூரியின் கடைசிநாள் ....

கல்லூரியின் கடைசிநாள் .... உன் பயணப்பொதியை.... தம்பி ஓடிவந்து தூக்கிறான்.....!!! உன் அருகே இருந்துவர .. உன் அம்மா இருக்கையை .... சரிசெய்கிறார் .....!!! இறங்கும் இடத்தில் ... வரவேற்க உன் உறவினர் ...!!! உன்னை அனுப்பிவிட்டு .... நான் மட்டும் அனாதையாக ... தனியே திரும்புகிறேன் ......!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

ஏன் படைத்தான் ......?

உனக்கும் இறைவனுக்கும் ..... என்ன தகராறு .......? பூவைப்போல் உடலையும் ..... பஞ்சைப்போல் பாதத்தையும் ..... படைத்தவன் ..... சுட்டெரிக்கும்  சூரியனையும் .... வலியை தரும் முள்ளையும்..... ஏன் படைத்தான் ......? & இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன் 

முடியவில்லை ......!!!

முடியவில்லை ...... பிரிவை தாங்க முடியவில்லை ......!!! தெரியவில்லை .... வேறுமுகம் எனக்கு.... தெரியவில்லை.....!!! பிரியவில்லை .... மனத்தால் நாம்... பிரியவில்லை...!!! புரியவில்லை நீ .... ஏன் வெறுத்தாய் என்று .. புரியவில்லை ...!!! நம்புகிறேன் ..... மீண்டும் வருவாய் என்று .. நம்புகிறேன் ...!!! & கவிப்புயல் இனியவன் 

என்ன செய்ய சொல்லுகிறீர்கள் - பொருளாதார கவிதை

தொடர்ச்சியான வரட்சி .... மறு புறம் விவசாய கடன்.... நதிநீர் பிரச்சனை .... நியாய விலை இன்மை ... விவசாயி எங்களை என்ன செய்ய சொல்லுகிறீர்கள் ...? நாங்கள் பொறுத்தது போதும் .. போராடப் போகிறேம்  ...... நாளை முதல் என் மனைவியும் ..... பிள்ளைகளும்...... வீதிக்கு வருவார்கள் .....!!! எங்களுக்கு துப்பாக்கி தாருங்கள்... அரசுக்கு எதிராக போராட என்று ..... கேட்கமாடோம் ........!!! ஒரு நெல் மூடை தாருங்கள் ...... இல்லையே ஆக குறைந்தது....... ஒரு பானை சோறு தாருங்கள் ..... எங்கள் வறுமையோடு ...... போராடுவதற்கு ..................!!! & பொருளாதார கவிதை கவிப்புயல் இனியவன்